Header Ads



"பயங்கரவாதியாக இருந்தாலும் பரவாயில்லை, அவர் என் இனம், ஆகையால் நாம் பாதுகாக்கின்றோம்"

பயங்கரவாதத்திற்கு துணை சென்றாலும் என் இனம் என்பதையே   முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் கூட்டாக பதவி விலகி  நாட்டுக்கு காண்பித்துள்ளார்கள் என  பாராளுமன்ற உறுப்பினர்  கெஹேலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அரசாங்கத்தில் அங்கம் வகித்த முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரையும் பதவி விலகுமாறு எதிர்தரப்பினர் ஒருபோதும்  அழுத்தம் பிரயோகிக்கவில்லை. இவர்கள் பதவி விலகியது அவர்களது  தனிப்பட்ட விருப்பமாகும். இவர்களின் செயற்பாட்டின் ஊடாக  நாட்டு  மக்களுக்கு ஒரு  செய்தியினை தெளிவாக    வழங்கியுள்ளார்கள். 

அதாவது  குற்றஞ்சாட்டப்படுபவர்  பயங்கரவாதியாக இருந்தாலும்  பரவாயில்லை அவர்  என்  இனம் ஆகையால் நாம் பாதுகாக்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

மறுபுறம்  எதிர் தரப்பினர் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களுக்கும் எதிராக செயற்படுகின்றார்கள் என்ற தவறான கருத்தினையும்  சிறுபான்மை மக்கள் மத்தியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது அரசியல்  இராஜதந்திரத்தினால் அழகுற  பதிவிட்டு விட்டார்.  

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக  நம்பிக்கையில்லா பிரேரணையை  விரைவாக விவாதத்திற்கு எடுத்துக் கொண்டிருந்தால்  எவ்வித பிரச்சினைகளும் ஏற்பட்டிருக்காது. முறையான  ஒரு தீர்வை  எட்டிருக்கலாம். ஒருதனி நபரை பாதுகாப்பதற்காக அரசாங்கம்  இன்று நாட்டை  காட்டிக் கொடுத்து விட்டது.

தேசிய நல்லிணக்கம் என்ற சொற்பதத்தை பயன்படுத்தி முஸ்லிம் -   சிங்கள இனங்களுக்கிடையில் ஒரு உறுதியான வெறுப்பு நிலையினை  தனது அரசியல் தேவைக்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்படுத்தி விட்டர். இதன் விளைவு எதிர்காலத்தில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

6 comments:

  1. இவனெல்லாம் சரி துவேஷக்கார நாய் முஸ்லிம்கள் இவர்களை ஒருபோதும் நம்பக்கூடாது.

    ReplyDelete
  2. Kஇவர்கள் ஆப்பிழுத்த குரங்காட்டம் ஆகிவிட்டனர். நம்மவர்கள் சரியான ஒரு ஆப்பு வைத்துள்ளனர் இழுக்க முடியாது துடிக்கின்றனர்.

    ReplyDelete
  3. இது அப்பட்டமான பொய்யும் திசைதிருப்புதலும் ஆகும். தம் சமூகத்தின் உரிமைகளில் கைவைப்பதையும் தம் சமூக உறுப்பினர்கள் மீதான நியாயமற்ற பதவி நீக்க கோரிக்கையினாலுமே முஸ்லிம் அமைச்சர்கள் பதவி துறந்தனர் என்பது சாதாரண பொதுமகனுக்கும் தெரிந்த விடயம். இவர் தெரிந்தும் சிங்கள மக்களை திசைதிருப்பும் வகையில் வியாக்கியானம் செய்கிறார்.

    ReplyDelete
  4. Meya kata vahala pittipassa inthala racist ta Bala thenna oora ekkanai. Mahinda kalaya meyage bank balance koccharaktha,Swiss account balance koccharaktha kiyala samanya Sinhala people hithandona.

    ReplyDelete
  5. Excellent speech !!!! LOL

    ReplyDelete

Powered by Blogger.