June 27, 2019

முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், முஸ்லிம் சட்டத்தரணிகளுக்கும் நன்றி கூறுவோம்...!


அலுவலக நேரத்தில் முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடைகள் தொடர்பில் உருவாகியிருந்த சர்ச்சை நீங்கியது.

புதிய அறிவித்தல் வெளியாகியது.

இந்த விடயத்தில் அரசுக்குள் இருக்கிற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான முயற்சிகளை எடுத்திருப்பது தெரியவருகிறது.

குறிப்பாக திருத்தப்பட்ட வர்த்தமானி ஈற்றில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருந்தது.

அதில் ஏலவே குறிப்பிட்டிருந்த சாரி, ஒசரி போன்ற ஆடைகளுடன் any other decent dresses என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

முழு நீள ஆடை அல்லது பெரும்பாலும் முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா என்ற வடிவங்களை அடையாளப்படுத்த உதவும் பிரத்தியேக சொற்பதங்களை உள்ளடக்கவேண்டும் என்பதில் மு. கா தலைவர் உறுதியாக இருந்ததாக அறியமுடிந்தது. அவருடைய இறுதி ஒப்புதலை பெற ஏற்பட்ட கால தாமதமே இந்த வர்த்தமானியின் தாமதத்திற்கு காரணம் என நண்பர் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுடனான தொலை பேசி உரையாடலில் அறிய முடிந்தது.

மிக்க மகிழ்ச்சி. இந்த வகையான பிடிவாதங்களும், போராட்டங்களுமே எமக்குத்தேவை. இறைவன் உங்கள் அனைவரையும் பலப்படுத்தட்டும்.

அத்தோடு இது தொடர்பில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குகளை தொடர முன்வந்த முஸ்லிம் பெண்கள், மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடுகளை செய்தோர் இதற்காக அர்ப்பணிப்புடன் முன் நின்று உழைத்த சட்டத்தரணிகள் அனைவரும் மறக்க முடியாதவர்கள்.

உங்கள் அனைவரதும் அயராத போராட்டம் வெற்றி கண்டிருக்கிறது.

Mujeeb Ibrahim

8 கருத்துரைகள்:

ஒற்றுமையாக முன்னோக்கி நகர்வோம்.இனவாதங்கலை நம் ஒற்றுமை மூலம் தோற்கடிப்போம்.சிங்கள மொழியை நமது தாய்மொழியாக எதிர்காலத்தில் பயன்படுத்த இப்போதிருந்தே அனைவரும் நடவடிக்கை எடுப்போம்.அரசியல் வாதிகள்,சமூகத்தில் உள்ள அனைத்து வகையான புத்தி ஜீவிகல்,பள்ளி நிருவாகங்கல்,அனைத்து Muslim பாடசாலை அதிபர்,ஆடிரியர் மற்றும் குறிப்பாக பெற்றோர் அனைவரும் ஒற்றுமையுடன் எதிர்காலத்தில் சிங்கள மொழியை எமது தாய் மொழியாக மாற்றும் வேலைத் திட்டத்தை ஆரம்பிப்போம்.அதனூடாக எமக்கு இந்த நாட்டில் நிறைய அனுகூலங்கள் கிடைக்கும்.எமது எதிர்கால சந்ததிக்கு நாம் சிங்கள மொழியை தாய் மொழியாக மாற்றுவது நாம் அவர்களுக்கு செய்யும் மிகப் பெரும் சேவை.

இதனை வாசிக்கும் போது சகோதரர் ஜெலீலின் முகநூல் பதிவு நினைவுக்கு வந்தது ;;

அவரின் முகநூல் பதிவு (02.06.2019)=>
"வாப்பாவிடம் பெரிய காணி,சிறிய கடை ரெண்டும் இருக்கு.
பெரிய காணியை எனக்கு தரல்ல என்று நான் சரியான கோபத்தில் இருக்கேன்.
என்ட கோபத்தை வாப்பா எப்படி தணிப்பது?

எனக்கே சேரவேண்டிய சிறிய கடையையும் வேறு ஒருத்தருக்கு கொடுக்க ஏற்பாடு செய்றார். நான் மேலும் கொதித்தெழுந்து, சண்டை செய்றேன். வாப்பா, சரி சரி என்று எனது சண்டையின்பின் சிறிய கடையை எனக்கு தருகிறார்.
கடை கிடைத்ததால், இப்போ எனக்கு வாப்பா மேல் இருந்த கோபம் போச்சு, எனக்கு சேர இருந்த பெரி காணியும்,அதை இழந்த கவலையும் போச்சு.
விளங்காதவர்களுக்கு: கடையை அபாயாவாக கொள்க
கோட்பாடு: இல்லாத பிரச்சினையை உருவாக்கி இல்லாமலாக்குதல் #அரசியல்_தந்திரம்."

இத்துறையில் உழைத்த அத்தனை முஸ்லிம் சட்டத்தரணிகள், ஆர்வலர்கள், அதில் பாதிக்கப்பட்ட சகோதர, சகோதரிகள், அவர்களுடைய விடயத்தில் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்ட அத்தனைபேருக்கும் அல்லாஹ் இந்த உலகிலும் மறுமையிலும் நற்பாக்கியங்களை அருளுவானாக, உம்மத்தின் விவகாரங்களில்மென் மேலும் உழைக்கும் ஆர்வத்தையும் வசதிகளையும் அல்லாஹ் அவர்களுக்கு அருளுவானாக. உங்கள் அத்தனைபேருக்கும் ஜஸாகல்லாஹுகைரா. جزاكم الله خيرا

@Rizard, good idea, பிக்கு மார்கள் வந்து நல்ல அடிபோட்டால் தான் உங்களுக்கு மூலை வேலைசெய்யும் போல. அப்படியே பௌத்ததையும் தாய் மதம் என்றார்கள் என்றால் எனி அடிவிழாது.

இலங்கையில் நீங்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் தாய் மொழியாக மாற்ற உரிமை உள்ளது, அரபு மொழியை தவிர.

அஜன் நீ ஒரு புலி பயங்கரவாதி,இனவாதி தமிழ் மொழி தேவையில்லை.எதிர்கால சந்ததிக்கு இனி சிங்கள மொழிதான் தேவை.வட,கிழக்கில் உள்ள Muslim கள் அதிகமாக தமிழ் பாவிப்பது.வட,கிழக்கு வெளியே உள்ள Muslim கள் அதிகமாக சிங்கள மொழிதான் பாவிப்பது.எனவே முழு Muslim கலின் தாய் மொழியாக விரைவில் மாற்றம் சிங்கள மொழி மாற வேண்டும்.(உங்களை போல அவர்களுக்கு குடை பிடித்து கூட்டி கொடுப்பதில்லை நாங்கள்)

சிங்கள மொழி தற்போது அதிகமான Muslim கலுக்கு சரளமாக தெரியும்.வடக்கில் உள்ள Muslim களிக்கும் சரளமாக முடியும்(புலி பயங்கரவாதிகலால் விரட்டப்பட்ட போது இடம் பெயர்ந்து வாழும் போது கற்று கொண்டார்கள்) இனி மீதம் உள்ள கிழக்கு மக்களில் 40% மானோருக்கும் முடியும்.எனவே மிக இலகுவாக அடுத்த 10 ஆண்டுகளில் எம்மால் சிங்கள மொழியை தாய் மொழியாக மாற்ற முடியும்.

வட கிழக்கு முஸ்லீம் பிரதேசங்களில் அதிகமாக சிங்கள மொழிமூல பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். முஸ்லீம் ஊர்களில் தமிழ் மொழியை புறக்கணித்து சிங்கள ஆங்கில மொழிகளில் மட்டும் பதாதைகளை வைக்கப்பட வேண்டும். எமது அடுத்த சந்ததிகள் சிங்களத்தை ச௫ராளமாக கற்றுக்கொள்வதன் மூலம் அதற்க்கு அடுத்த தலைமுறை சிங்களத்தை தாய் மொழியாகக்கொண்டிருக்கும். வட கிழக்கு தமிழ் இனவாதிகளுக்கு நாம் கொடுக்க கூடிய சிறந்த தீர்வு இது தான்.

Post a comment