Header Ads



முஸ்லிம்களின் தற்போதைய ஹீரோ, மங்கள சமரவீரதான்...!

சிங்களவர் முகம் சுழிப்பார்கள்...பிக்குகள் பொங்கி எழுவார்கள்...இனவாதிகள் ஊளையிடுவார்கள்... வாக்கு வங்கி சிதைவடையும்...
இப்படியெல்லாம் கவலைப்படாது,

"இலங்கை அனைத்து இன மக்களுக்குமான நாடு... இது ஒரு சிங்கள பௌத்த நாடு என்று ஒப்புக்கொள்ள முடியாது"...

"பயங்கரவாதம் உள்ளிட்ட குற்றங்களில் யார் குற்றவாளி, யார் அப்பாவி என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை அரசியல் யாப்பு எந்தவொரு அரசியல்வாதிக்கோ, மதகுருவுக்கோ, சமூக ஊடகங்களுக்கோ வழங்கவில்லை"

"முறையான பொலிஸ் விசாரணைகள் மற்றும் வழக்கு விசாரணைகளின் பின்னர் தீர்மானங்களை மேற்கொள்வது அவசியம். இத்தகைய சட்டமுறையை இனவாதிகள் கடத்திச் சென்று தலைகீழாக மாற்றுவதற்கு இடமளிக்கக் கூடாது"

என்று உள்ளத்தில் பட்டதை தெட்ட தெளிவாக பேசும் ஒரு பெரும்பான்மையின அசல் அரசியல் ஹீரோ யாரென்றால் அது கௌரவ அமைச்சர் மங்கள சமரவீர ஒருவர்தான்...

மஹிந்த ராஜபக்ஷவின் ஆஸ்தான அடியாட்களான சில அரசியல்வாதிகள் மற்றும் பேரினவாத பிக்குகளினால் நாட்டில் தோன்றவிருந்த இனவாத அழிவுகளை தவிர்க்கும் முகமாக முஸ்லிம் அமைச்சர்கள் பதவியை துறக்க முனைந்தபோது அதனை தடுத்து நிறுத்த கடும் முயற்சி எடுத்தவர் கௌரவ அமைச்சர் மங்கள சமரவீர அவர்களே...

தனது இன மக்களை போலவே ஏனைய சிறுபான்மை மக்களையும் சம தட்டில் வைத்து பார்க்கும் சிறப்பான கொள்கை கொண்டவர் கௌரவ அமைச்சர் மங்கள சமரவீர அவர்களே...

தனது ஆணித்தரமான, சீரிய சமத்துவ கொள்கை  காரணமாக கம்பஹா, மாத்தறை போன்ற இடங்களில் உள்ள பௌத்த கோயில்களுக்குள் நுழைய முடியாமல் தடை செய்யப்பட்டுள்ள ஒரே ஒரு சிங்கள தலைவர் கௌரவ அமைச்சர் மங்கள சமரவீர அவர்களே...

மிகச்சிறப்பான, போற்றத்தக்க, மனித நேயமிக்க, தலைமைத்துவ பண்புகள் நிறைந்த கௌரவ அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் ஏன் இன்னும் ஆறேழு மாதங்களில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில்  அனைத்து இன மக்களுக்கும் பொதுவான ஜனாதிபதி வேட்பாளராக தேர்தலில் நிற்க கூடாது என்பதே இன்றைய நாட்களில் பலரது உள்ளங்களிலும் எழுகின்ற பொன்னான கேள்வியாகும்...

இங்கே பதிந்துள்ளது சாதாரண ஒரு பதிவு.. இது சரியா பிழையா...இதற்கு மாற்றமான கருத்துக்கள் வேறேதும் உண்டா...

உங்கள் அபிப்பிராயங்களை இங்கே பதியுங்கள், தயவு செய்து...

-இப்ராஹீம் நிஹ்ரீர்

13 comments:

  1. வெளிவிவகார அமைச்சராக இருந்து உலக அரசியல் போக்குகள் அதில் நமது நாடு சந்தித்த சவால்கள் போன்றனவற்றை நுணுக்கமாக ஆராய்ந்து செயற்பட்ட அனுபவமும் துணிச்சலும் உள்ள தலைமை. மிகப் பொருத்தமான தலைமை

    ReplyDelete
  2. Respectable candidate

    ReplyDelete
  3. இப்படியான நடு நிலை பேணும் கன்னியமான அரசியல்வாதி ஜனாதிபதி வேட்பாலராய் வருவது இலங்கை நாட்டுக்கு மிக பெறுமதியான விடயம்.

    ReplyDelete
  4. yes, I agree with you 100 percent.

    ReplyDelete
  5. நாம் வாக்களிக்கலாம் சிங்களவர்கள்?

    ReplyDelete
  6. Faisar musthafa sonnane boutha Nadundu votukkaha

    ReplyDelete
  7. Mangala samaraweera eppoludum muslimgalukku
    Aaga pesakkoodiya oru nermaiyulla original
    Buddisth,,,mangala siru wayasilirunde muslimgaludan nerukkamaaga anbaaga natpudan
    Inru waraikkum thodarpudan ullar

    ReplyDelete
  8. An eligible candidate for precidential election

    ReplyDelete
  9. I agree 100%, also there some other factors to be considered...

    ReplyDelete
  10. Yes he´s right candidates for President.

    ReplyDelete
  11. ஆமாம் சரியான வழி காட்டலின் முன்னோடிநானைய ஜனாதிபதி

    ReplyDelete

Powered by Blogger.