Header Ads



நாட்டில் தற்போது பெரும், சர்ச்சை உருவெடுத்துள்ளது - தயாசிறி

அத்துரலிய ரதன தேரரால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

எல்லைமீறி செயற்பட வேண்டாம் என ஆளுநர்களுக்கு நாம் பல தடவைகள் அறிவிப்பு விடுத்தோம். ஆனால், அவர்கள் செவிமடுக்கவில்லை.

இதனால், நாட்டில் தற்போது பெரும் சர்ச்சை உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் கூட அவர்கள் ஊடகங்களுக்கு விடுக்கும் அறிவிப்புகளை நிறுத்தவில்லை.

அதேவேளை, பயங்கரவாதிகளுக்கு களம் அமைத்து கொடுப்பவர்களுக்கு அதியுச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம்.

எனவே, ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுமானால் அவருக்கும் இக்கோட்பாடு பொருந்தும் என தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Poda naye.. seyra kuppadi welayellam seyzu vittu niyayam pesa vanduttan.. para naay.

    ReplyDelete

Powered by Blogger.