Header Ads



இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான, உதவிகளை பெற்றுக்கொடுக்க அமெரிக்கா தயார்

சகல இன மக்களிடையே சமத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவும் பயங்கரவாதச் செயற்பாடுகளை   ஒழிப்பதற்கும் தேவையான  அனைத்து உதவிகளையும் வழங்க ஐக்கிய அமெரிக்கா தயாராகவுள்ளது. 

அதேபோன்று பயங்கரவாத தாக்குதல்களை  நாட்டில் இருந்து முழுமையாக  ஒழிக்க இலங்கை அரசாங்கம் கேட்கும் அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும்  என்று அந்த நாட்டின் இலங்கைக்கான தூதுவர் எலைனா பீ.டெப்லிட்ஸ் உறுதியளித்தாக தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.  

தூதுவர்  எலைனா பீ.டெப்லிட்சுக்கும் அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையிலான சந்திப்பொன்று  அமைச்சின் காரியாலயத்தில்  இன்று இடம்பெற்றது.  

இச் சந்திப்பின் போது  நாடடின் பாதுகாப்பு விடயங்கள்,  பொருளாதாரம்,நல்லிணக்கம் உள்ளிட்ட பல்வேறு விடங்கள் தொடர்பில்  கலந்துரையாடப்பட்டது.  

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்த தெரிவிக்கும் போது அமைச்சர்  கூறியதாவது; 

அமெரிக்காவின் தூதுவர் எலைனாவுடனான சந்திப்பில் நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் பாதுகாப்பு நிலைமைகள், பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து நாட்டை பாதுகாக்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள்,நாட்டின் தற்போதைய சமத்துவம் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. 

அதேபோன்று அவற்றை செயற்படுத்தவதற்கு தேவையான முழு ஒத்துழைப்பையும் வழங்க அமெரிக்கா தயாராகவுள்ளதாகவும் அவர் என்னிடம் தெரிவித்தார்.  

மேலும் இஸ்லாமிய அரச இயக்க பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிப்பதற்கான உதவிகளை பெற்றுக்கொடுக்க அமெரிக்க அரசாங்கம் தயாராகவுள்ளது. அமெரிக்காவின் தேவைக்காக அரசாங்கம் செயற்பட்டு வருவதாக எதிர்தரப்பினர் தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகினறனர்.

4 comments:

  1. இஸ்லாமியா பயங்கர வாதமா இல்ல இஸ்லாமியர்களே அளிக்க திட்டமா , கழிச்சேற டேய்

    ReplyDelete
  2. US says it helps eradicate any type of insurgency held or to be held in Sri Lanka. That's good. That's why Sri Lankan people welcome peace and harmony always. It should not poke noses of the private and the harmony life of Muslim of the country. United States' assurance is not definitely for that.

    ReplyDelete
  3. இல்லாத ஒன்றை உருவாக்குவதும், இல்லாத ஒன்றை அழித்து விட்டதாக கதை விடுவதும் அமெரிக்காவின் கை வந்த கலை. இதற்கும் நன்றி சொல்ல ஒரு ஆள்.ஹீ...ஹீ

    ReplyDelete

Powered by Blogger.