Header Ads



ஈஸ்டர் தாக்குதலின் பின்னர், அபாயகரமான கட்டத்தில் வெறுப்பூட்டும் பேச்சு

 வெறுப்பூட்டும் பேச்சு மற்றும் உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னரான விளைவுகள் மீது விசேட கவனம் செலுத்தியவாறு, நடப்பு பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடும் வகையில் SLASSCOM  ஏற்பாடு செய்த CEO Connect with Sri Lanka Unites அமர்வானது கொழும்பு 07 இலுள்ள ஜெட்விங் ஹோட்டலில் நடைபெற்றது. பாதுகாப்பு இராஜாங்க மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜெயவர்த்தன மற்றும் Anzyz Technologies இன் ஸ்தாபகரான ஸ்வைன் ஓலாஃப் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளதுடன், Global Unites இன் தலைவரும், ஸ்தாபகருமான பிரஷான் டி விஸர் மற்றும் SLASSCOM இன் பணிப்பாளர் சபைத் தலைவரான ஜீவன் ஞானம் ஆகியோரும் நிகழ்வில் இணைந்து கொண்டனர்.   

உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர், குறிப்பாக வர்த்தக மற்றும் அரசியல் உலகில் தொடருகின்ற வெறுப்பூட்டும் பேச்சுக்களை ஒழித்து மற்றும் நீக்க வேண்டியதன் தேவை தொடர்பில் விழிப்புணர்வைத் தோற்றுவிப்பதே இந்த CEO Connect இன் பிரதான நோக்கமாகும்.

மற்றொருவரை இழிவுபடுத்தும் அல்லது கொடுமைப்படுத்தும் நோக்குடனான கூற்றுக்கள் அல்லது  கேவலமான அல்லது இழிவுபடுத்தும் வார்த்தைப் பிரயோகம் அல்லது குறிப்பிட்ட சமூகத்தின் உண்மையாக அல்லது குற்றம் சாட்டப்படும் அங்கத்தவர் என்ற அடிப்படையில் கருத்தை வெளிப்படுத்தல், இனம், மதம், இனத் தோற்றம், தேசியத் தோற்றம், மாற்றுத்திறன், ஒப்புநோக்கு அல்லது பால் அடையாளம் போன்ற பாதுகாக்கப்பட்ட பண்புகளின் அடிப்படையில் ஒரு நபரை அல்லது குழுவை தொடர்ச்சியாக வசைபாடுதல் ஆகியன வெறுப்பூட்டும் பேச்சு என்றே அழைக்கப்படுகின்றன. 

“வெறுப்பூட்டும் பேச்சு மற்றும் ஏனைய முக்கியமான சமூகரீதியான சவால்களை ஒழிக்க வேண்டியதன் தேவை தொடர்பான விழிப்புணர்வைப் பரப்புவதற்காக ஒரு களத்தை ஏற்படுத்துவதையிட்டு பூரிப்படைகின்றது. Sri Lanka Unites உடன் இணைந்து நாட்டில் இடம்பெற்று வருகின்ற கண்டிக்கத்தக்க செயல்களை ஒழித்து, எமது நாட்டில் பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியும் என நாம் நம்புகின்றோம். தேசத்தில் மிகவும் பாதுகாப்பான ஒரு சூழலைத் தோற்றுவிக்கும் முகமாக வர்த்தகத்துறை தலைவர்கள் மற்றும் உறுப்பு நிறுவனங்கள் மத்தியில் கவனத்தை அதிகரிப்பதை நோக்கிய முன்னோக்கிய அடியானது உண்மையில் ஒரு வரப்பிரசாதமாகும்,” என்று SLASSCOM இன் பணிப்பாளர் சபைத் தலைவரான ஜீவன் ஞானம் குறிப்பிட்டார்.    

தகவல் தொழில்நுட்ப வர்த்தகத் தொழிற்பாடுகள் முகாமைத்துவ தொழிற்துறை சம்மேளனம் மற்றும் இலங்கைக்கு ஏற்றுமதி வருவாயை ஈட்டித்தருவதில் ஐந்தாவது ஸ்தானத்தில் திகழ்ந்து வருகின்ற SLASSCOM பணிச்சூழலில் சகிப்புத்தன்மை மற்றும் பன்முகத்தன்மையின் விழுமியங்களை வளர்த்து, உட்பொதிக்க வேண்டியது முக்கியம் என நம்புகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல்கள் மிகவும் அபாயகரமான மட்டத்தில் வெறுப்பூட்டும் பேச்சினைத் தூண்டியுள்ளதுடன், குறிப்பிட்ட இனம், மதம் மற்றும் சமயத்தை அவமதிக்கும் வகையிலேயே அவை அமைந்துள்ளன.  

No comments

Powered by Blogger.