Header Ads



தலவாக்கலையில் முஸ்லிம், வைத்தியர் கைது

கல்முனை – சாய்ந்தமருதை சேர்ந்த முஸ்லிம் வைத்தியர் ஒருவர் தலவாக்கலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்

ஒரு வருடகாலமாக இயங்கிவந்த மருத்துவ நிலையம் ஒன்றின் வைத்தியர் எம்.பி.பி எஸ்.என்ற தகமையை கொண்டவர் எனக் கூறினாலும் அது உண்மையா என்பது குறித்து பொலிஸ் விசாரணைகளை செய்கிறது.

இந்த டாக்டர் கருக்கலைப்பில் ஈடுபட்டு வருவதாக குறித்த மருத்துவ நிலையத்தில் புரிந்து வந்த தாதி ஒருவர் தலவாக்கலை லிந்துலை நகரசபையின் தலைவர்அசோக்கசேபாலவிடம் அறிவித்ததையடுத்து, குறித்த வைத்தியசாலைக்கு சென்ற நகரசபையின் தலைவர் மற்றும் தலவாக்கலை பொலிஸாரும் நிலையத்தின் ஆவணங்களை ஆராய்ந்தனர்

அப்போது இந்த வைத்தியர் எம்.பி.பி எஸ் தகைமையுடையவர்அல்ல என்பது பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது . அத்தோடு அவரிடம் இருந்த சான்றிதழ்கள் அனைத்தும் போலியாக தயாரிக்கப்பட்டவை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

இதேசமயம் இந்த நிலையத்தில் இருந்து பெருந்தொகையான மாத்திரைகளும் உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர் .

கைது செய்யபட்ட வைத்தியரை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-நோர்ட்டன் பிரிட்ஜ் நிருபர் கிருஷ்ணா-

3 comments:

  1. உன்மையா, பொய்யா என விசாரனையின் பின் தெரியும்,ஆனால் Sri Lanka வில் சட்ட விரோத கருக்கலைப்பு செய்யும் எத்தனயோ நிலையங்கள் உள்ளன.அதிலும் மட்டக் களப்பின் தமிழ் பிரதேசங்களில் தெருவுக்கு தெரு எத்தனையோ நிலையங்கள் உள்ளன,இவை பாதுகாப்பு தரப்பின் கண்களுக்கு ஏன் தெரிவதில்லை.

    ReplyDelete
  2. Mr Rizard

    The connected person is a Muslim Dr and therefore the allegation against him may be malcious because he is a Muslim and abortion is prohibited in Islam unless there is a valid reason.

    However if the allegation is found to be positive then he has to face the consequences. Therefore , the connected matter shouldn't be justified with others work whom are with different faiths because it is not prohibited in their religion.

    ReplyDelete
  3. முஸ்லீம் வைத்தியர்கள் குறி வைக்கப்படுகிறார்கள் இது இனவாதமில்லையா தேர்தல் வரட்டும் , முஸ்லீம் வாக்குகளால் வந்த வர்கள் செய்யும் துரோகம் போதும் ,பொய்யியே வந்தவன் செய்யும் வேலைதான்

    ReplyDelete

Powered by Blogger.