Header Ads



இலங்கையில் உள்ள ஒவ்வொரு, முஸ்லிமும் கண்காணிக்கப்படுகிறார் - அமீர்அலி விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை முஸ்லீம்கள் அகில இலங்கை ஜம்யதுல் உலமாவின் வழிகாட்டலை மீறி எதிர்காலத்தில் எவரும் செயற்படுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

சமகால அரசியல் தொடர்பாக பிரதேச மக்களுக்கு விளக்கம்; அளிக்கும் கூட்டம் நேற்று (14.06.2016) வெள்ளிக்கிழமை மாலை வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் எம்.எஸ்.கே.ரஹ்மான் தலைமையில் இடம் பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றம் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

முஸ்லீம்கள் அகில இலங்கை ஜம்யதுல் உலமாவின் வழிகாட்டலை மீறி எதிர்காலத்தில் எந்தவித மத ரீதியான செயற்பாடுகளையும் செய்யமுடியாது அவர்களின் வழிகாட்ல்களில்தான் மத ரீதியான செயற்பாடுகள் இடம் பெறும் என்பதல் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.

இன்று இலங்கையில் உள்ள முஸ்லீம்கள் ஒவ்வொருவரும் கண்கானிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பதனை ஒவ்வொருவரும் தெளிவாக விழங்கிக்கொள்ள வேண்டும் எமது ஒவ்வொரு செயற்பாட்டையும் இறைவன் கண்கானிக்கின்றான் என்பதனைப்போன்று எமது செயற்பாடுகள் அனைத்தும் கண்காணிக்கப்படகின்றன.

சட்டத்தை மதிக்கின்ற மக்களாக நாம் எப்போதும் இருக்க வேண்டும் மோட்டார் சைக்கிள் செலுத்தம் போது தலைக்கவசத்தை அணிவதற்குக்கூட நாங்கள் தயாரானவர்கலாக இல்லை அவ்வாரு இருக்காமல் இனி வரும் காலங்களில் எமது நாட்டின் சட்டத்தை முழுமையாக மதிக்கின்றவர்களாக நாம் இருக்க வேண்டும் அன்மையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சகோதரர் றவூப் ஹக்கீமிடம் உங்களது சமுகத்தை சார்ந்த மக்கள் சட்டத்தை மதிக்கின்ற மக்கள் அல்ல குறைந்தது தலைக்கவசத்தை அணிந்து செல்வதற்கு தயாராக இல்லை ஏன் என்று கேள்வி கேட்ட போது சகோதரர் றவூப் ஹக்கீம் அவர்கள் பதில் சொல்வதிலே சங்கடப்பட்ட நிலையை அந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள் அவதானித்திருப்பீர்கள்.

இன்று நாட்டிலே உள்ள சகோதர இன மக்கள் சட்டத்தை மதிக்காததால் எங்களை இலஞ்சம் கொடுக்கின்ற சமுகமாக பார்க்கின்றார்கள் அனாச்சாராத்திற்கு மிகவும் விலைபோனவர்களாக எங்களை பார்க்கின்றார்கள் இவைகளை வைத்து தேசியத்திலே மிகவும் மோசமாக எழுதுகின்றார்கள் வாழைச்சேனையிலே அராபிய சட்டம் என்று அண்மையில் சிங்கள பத்திரிகையிலே கட்டுரை ஒன்று வந்தது இதற்கு எத்தனை பேர் பதில் இருத்தீர்கள் இதனை எத்தனை பேர் வாசித்தீர்கள் என்று எனக்குத் தெரியாது.

இஸ்லாமிய மார்க்கம் அழகாக சொல்லியிருக்கின்றது மற்றய மதங்களை மதியுங்கள எனறும் ஏனைய மத பெரியார்களை மதியுங்கள் என்றும் அதனை எமது பிரதேச இளைஞர்கள் கடைப்பிடுத்து நடக்க வேண்டும் என்று இச்சந்தர்ப்பத்திலே கேட்டுக் கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, வாழைச்சேனை, ஓட்டமாவடி, வாகரை பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் கல்வியலாளர்கள் பள்ளிவாயல் நிருவாகிகள் என பலரும் கலந்து கொண்டதுடன் வாழைச்சேனை ஹைராத் பள்ளிவால் தலைவர் கலந்தர் பாவா பாராளுமன்ற உறுப்பிருக்கு பொண்னாடை போர்த்தி நினைவுச் சின்னமும் வழங்கி வைத்தார்.

3 comments:

  1. Sri lankavil facebook wathsup itai tadaisaitaltan namatu valifa samookam tiruntum.

    ReplyDelete
  2. இதில் சங்கடப்சங்கடப்பட என்ன இருக்கிறது.சட்டத்தை அமுல் படுத்துபவர்கள எங்கே போய்விட்டார்கள்.

    ReplyDelete
  3. உண்மை இப்படிப்பட்ட ஆலோசனைகள்தான் எமது இளைச்சர்களுக்கு தலைமதுவங்களால கொடுக்கப்பட வேண்டும், மாறாக ஹிஸ்புல்லாஹ் போன்று தலைகனமாக பேசகூடாது.

    ReplyDelete

Powered by Blogger.