Header Ads



சவூதி அரேபியா நடாத்தும் பாரிய பணப்பரிசுகள் கொண்ட சர்வதேச கிராஅத், அதான் போட்டிகள்

சர்வதேச மட்டத்திலான கிராஅத் மற்றும் அதான் (பாங்கு) போட்டிகளை சவூதி அரேபியா ஏற்பாடு செய்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் 24ஆம் திகிதி முதல் செப்டம்பர் 24 வரை சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள இப்போட்டிகளில் பங்குபற்ற ஆர்வமுள்ளவர்கள் https://quranathanawards.com/ எனும் இணையத்தளத்தினூடாக ஜூலை 22ஆம் திகதிக்கு முன்னர் தங்களை பதிவுசெய்துகொள்ளளலாம். 

பாரிய பணப்பரிசுகளைக்கொண்ட இப்போட்டிகளில் கிராஅத் பிரிவில் முதற்பரிசாக 50 லட்சம் ரியால், இரண்டாவது பரிசாக 20 லட்சம் ரியால், மூன்றாவது பரிசாக 10 லட்சம் ரியால், நான்காவது பரிசாக 5 லட்சம் ரியால் என்ற அடிப்படையிலும் அதான் பிரிவில் முதற்பரிசாக 20 லட்சம் ரியால், இரண்டாவது பரிசாக 10 லட்சம் ரியால், மூன்றாவது பரிசாக 5 லட்சம் ரியால், நான்காவது பரிசாக 250,000 ரியால் என்ற அடிப்படையிலும் பரிசுத்தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

(றியாதிலிருந்து அபூரய்யான்)


No comments

Powered by Blogger.