Header Ads



எவரையும் விடுவிக்குமாறு றிசாத் எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை - பாராளுமன்ற தெரிவுக்குழு முன் இராணுவத்தளபதி விளக்கம்


உயிரித்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் கைது செய்யப்பட்ட நபரை விடுதலை செய்ய முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதியூதீன் அழுத்தங்களை கொடுக்கவில்லை என இராணுவத் தளபதி மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

உயிரித்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரிக்கும் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இன்று -26- சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலுக்கு பின்னர் இராணுவத்தினர் நாட்டின் பல பகுதிகளில் தேடுதல்களை நடத்தி சந்தேகத்திற்குரியவர்களை கைது செய்தனர். 26 ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அன்றைய தினத்திற்கு மறுதினம் அமைச்சர் றிசார்ட் பதியூதீன் என்னை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளாரா என்று கேட்டார். இராணுவத் தளபதி என்ற வகையில் றிசார்ட் பதியூதீன் உட்பட பலரை எனக்கு தெரியும். அதேபோல் எனது தொலைபேசி இலக்கமும் அனைவருக்கும் தெரியும்.

றிசார்ட் பதியூதீன் கேட்டதற்கு தேடி அறிந்து கூறுவதாக சொன்னேன். பின்னர் புலனாய்வு பிரிவினரிடம் விசாரித்து அறிந்துக்கொண்டேன். மறுநாள் றிசார்ட் பதியூதீன் என்னை தொடர்புக்கொண்டார்.

ஆம் அப்படியான நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினேன். எனினும் அவரை விடுதலை செய்யுமாறு அவர் எனக்கு அழுத்தங்களை கொடுக்கவில்லை.

அவர் மட்டுமல்ல, ஜனாதிபதி, பிரதமர் உட்பட எவரும் எனக்கு அழுத்தங்களை கொடுப்பதில்லை. நாங்கள் சுயாதீனமாக எமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. உண்மை எப்போதும் நியாயத்தை வழங்கும்.ஒரு நாட்டின் ராணுவ தளபதியே உண்மை சொல்லிவிட்டார்.இது ரிசாட் மீது அரசியல் பழிவாங்க நினைத்தவர்கலுக்கு செருப்படி.அல்-ஹம்துலில்லாஹ்

    ReplyDelete
  2. Always, Mahes Senanayake a thorough gentleman. Really, he likes the country, a devotee patriotic.

    ReplyDelete

Powered by Blogger.