June 21, 2019

விசயம் நடக்கிறது, வீண் சர்ச்சைகள் வேண்டாம்...!

நிகாப் தடை 2121/1 (29/04/2019) பின்னர் முகைத்தை திறத்தல் என்றால் காதுகளையும் திறத்தல் போன்ற 2123/4 (13/05/2019) இரண்டு வர்த்தமாணி அறிவித்தல்களும் முஸ்லிம் சமூகத்தில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

25/05/2019 ஜனாதிபதி அவர்களுடனான் சந்திப்பில் முஸ்லிம் எம் பீ க்கள் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து உயர்கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விளக்க சுற்றுநிருபத்தை தழுவி பொது நிர்வாக அமைச்சும் அரச திணைக்களங்களுக்கு சுற்று நிருபம் அனுப்புமாறு பணிக்கப் பட்டனர்.

என்றாலும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே. ஜே. ரத்னசிறி 29/05/2019 அனுப்பிய சுற்று நிருபத்தில் சீருடைகள் தேசிய உடை, டிரவுசர், ஷர்ட், சாரி, ஓசரி ஆக மாத்திரமே இருக்க முடியும் என வரையறை செயத்திருந்தமையல் அபாயாவிற்கு தடை வந்தது.

இதனால் பல திணைக்களங்களில் பாடசாலைகளில், வைத்திய சாலைகளில் பொதுப் போக்கு வரத்துக்களில் என பல இடங்களிலும் முஸ்லிம் மாதருக்கு நெருக்குவாரங்களை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அழுத்தத்தின் பெயரில் 01/06/2019 அன்று பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் 29/05/2019 அன்று அனுப்பிய சுற்று நிருபம் இடை நிறுத்தப் பட்டுள்ளதாகவும் புதிய சுற்று நிருபம் விரைவில் வரும் பிரதமர் அலுவலகம் கையொப்பமிடப்படாத ஊடக அறிக்கையை வெளியிட்டதனை தொடர்ந்து முஸ்லிம்கள் ஓரளவு நம்பிக்கையுடனிருந்தனர்.

ஆனால் இது வரை புதிய விளக்க சுற்றுநிருபம் வரவில்லை, அமைச்சர்கள் கபீர் ஹாஷிம் மற்றும் ஹலீம் ஆகியோர் மீண்டும் பதிவி ஏற்பதற்காக குறைந்த பட்சம் ஒருசில கோரிக்கைகளாவது நிறைவு செய்யப் படவேண்டும் என பிரதமருக்கு அழுத்தம் வழங்கப் பட்டதனைத் தொடர்ந்தே அவர்கள் அமைச்சர் ரஞ்சித் மாத்துமா பண்டாரவுடன் பிரதமரின் அறிவுறுத்தலில் கதைத்து தற்போதைய உடன் பாட்டிற்கு வந்துள்ளனர்.

ஆனால், பல திணைக்களங்கள் பாடசாலைகள் வைத்தியசாலைகள் பொதுப் போக்குவரத்துக்களில் முஸ்லிம் மாதர் எதிர்கொண்ட நெருக்கடிகளை அடிப்படையாக வைத்து அடிப்படை மணித் உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்ய குரல்கள் இயக்கம், முஸ்லிம் சட்டத்தரணிகள் அமைப்பு, மற்றுமின்னும் சில சட்டத்தரணிகள் பொது நிர்வாக அமைச்சின் செயலாளரின் சுற்று நிருபத்தை இரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கைகள் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றமை உண்மைதான்.

மேற்படி சட்ட நடவடிக்கைகள், மற்றும் அரசியல் நகர்வுகள், சிவில் சன்மார்க்கத் தலைமைகள் என பல அணுகுமுறைகள் மாதர்களின் ஆடைகள் விடயத்தில் மாத்திரமன்றி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப் பட்டுள்ளோர் விடயத்திலும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

தற்பொழுது எஞ்சிய அமைச்சர்களையும் உள்வாங்குவத்ற்காக சீருடை விவகாரம் மாத்திரமன்றி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகியுள்ளவர்களின் விடுதலையை துரிதப்படுத்த பாது காப்பு உயர்கவுன்ஸில் தீர்மானம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

எனவே மேற்படி நகர்வுகள் குறித்த போதிய தெளிவில்லாமல் சமூக ஊடகங்களில் ஆக்ரோஷமாக கருத்துக்களை வெளியிடாமலும் விமர்சனங்களில் காலத்தைக் கழிக்காமலும் அமைதியாக நிதானமாக பொறுப்புணர்வுடன் நாம் நடந்து கொள்வோம், இன்ஷா அல்லாஹ்.

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்.

3 கருத்துரைகள்:

comments எழுதும் சில சோடா போத்தல்களுக்கு இரத்தம் கொதிக்கும் பாசையில் எழுத வேண்டும் ஐயா. இப்படி புத்திபூர்வமாக எழுதுவது அவர்களுக்குப்பிடிக்காது.

This Saree Mater has sevaral influences:
—///—————————
1. Indian Saree industry in diclining due to lees demand
2. This lead to influence the our government to
3. Modi visit allso find Saree Market in Srilanka
3. This is unfair to women to force to wear this 5 meter cloth around them
5. It is unfair to women to carry 2 to 3 kg Saree as there cloth.
6. It will give negative productivity in workplace due to uncontrollable.
6. If it is needed government give tax free on Saree imports.
7. Government must invest in Saree production in Sri Lanka
8. It is expensive compare to normal dress.
9. It takes long to were . Because of too long.
10. It is unnecessary long sheet of cloth. Compare to ordinary cloth.
12. Government servant wages not enough to change rapid change of design.
13. Muslim cloth is cheap
14. Muslim womien cloth is eay to wear
15. Saree is difficult to wash and dry.

I think this is India,s need for there industry not protect Sri Lanka,s
Culture.

All women must file a case in Human Right to giving burden and forcing there freedom
In 20th centuriy.

Post a comment