Header Ads



'போரை விரும்பவில்லை, எதிர்கொள்ள அஞ்சமாட்டோம்' - இளவரசர் ஈரானுக்கு எச்சரிக்கை


ஓமன் வளைகுடாவில் அண்மையில் எண்ணெய் டாங்கர்கள் தாக்கப்பட்டதற்கு இரானை குற்றஞ்சாட்டி உள்ளது செளதி அரேபியா. செளதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மான், "நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால் எங்கள் மக்களுக்கு, இறையாண்மைக்கு, நலனுக்கு, பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ள எந்த விஷயத்தையும் எதிர்கொள்ள தயங்க மாட்டோம்," என்று அரேபியா முழுவதும் வெளிவரும் நாளிதழான அஷார்க் அல்- அவ்ஸாத்திடம் கூறி உள்ளார்.

முன்னதாக, ஓமன் வளைகுடாவில் எண்ணை டாங்கர்கள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என இரான் கூறியிருந்ததை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்து இருந்தார்.

1 comment:

  1. சஊதியின் தலைமையில் போராடும் கூட்டுப் படையினால் இத்தனை வருடங்கள் சென:றும வருமையில் வாடும் அண்டை நாடான யமனில் உள்ள சீயாப் பயங்கர வாதிகளை வெற்றி கொள்ள முடியாதுள்ளது. . சஊதியின் கூட்டுப்படை அமெரிக்க இஸ்ரேல் நலனுக்காக சுன்னி முஸ்லிம்களையே அழித்துக் கொண்டிருக்கிறது.. ஈரானுடன் மோதினால் சஊதி தாக்குப் பிடிக்குமா? நான் இப்னு சல்மானின் ஸியோனிஸக் கொள்கைக்கும் சீயாக் கொள்கைக்கும் விரோதமானவன். சீயா சுன்னிப் பிரச்சினைக்கு எண்ணை வார்ப்பதன் மூலம் பலஸ்தீனத்தை அபகரிப்பதே ஸியோனிஸத்தின் சூழ்ச்சியாகும். சஊதி இப்னு ஸல்மான், டுமாய் ஸாயித், எகிப்பு ஸீஸீ ஆகிய மூவரும் அமெரிக்க இஸ்ரேல் நலனுக்காக பிராந்திய மோதலை உருவாக்குகின்'றன.. நாமும் கவனமாகத் தான் இருக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.