Header Ads



பௌத்த கலாசாரத்திற்கு கீழாகவே, ஏனைய கலாசாரங்கள் செயற்பட வேண்டும்


பௌத்த கலாசாரத்திற்கு அமைய ஏனைய கலாசாரங்கள், அதன் துணை கலாசாரங்களாக, பௌத்த கலாசாரத்திற்கு கீழாகவே செயற்பட வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

சிங்கள பௌத்த மக்களின் அதியுயர் பீடங்களான அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களுக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டதோடு, சமகால அரசியல் நிகழ்வுகள் தொடர்பில் மகாசங்கத்தினருடன் கலந்துரையாடிய சந்தர்ப்பத்திலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

முதலில் அஸ்கிரிய பீடத்திற்கு விஜயம் மேற்கொண்ட விஜித் விஜயமுனி சொய்சா, வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை சந்தித்து ஆசிபெற்றதோடு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னரான நாட்டின் பாதுகாப்பு மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

இதன்போது கருத்து வெளியிட்ட, வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை என்ற விடயத்தை சுட்டிக்காட்டினார்.

எனினும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தொடர்பில் வழக்குத்தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் விஜித் விஜயமுனி சொய்சா, வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரருக்கு தெளிவுபடுத்தினார்.

மேலும், நாடடின் சட்டத்துறை மற்றும் நீதித்துறையில் சில குறைபாடுகள் காணப்படுவதை ஏற்றுக்கொண்ட விஜித் விஜயமுனி சொய்சா, தவறிழைத்த அனைவரும் தகுதி தராதரம் பாராது தண்டிக்கப்பட வேண்டுமெனவும், விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டார்.

தான் ஒரு பௌத்த மதத்தவன் என்ற வகையில், ஸ்ரீலங்காவின் பிரதான கலாச்சாரமான பௌத்த கலாசாரத்திற்கு அமைய ஏனைய கலாசாரங்கள், அதன் துணை கலாசாரங்களாக, பௌத்த கலாசாரத்திற்கு கீழாகவே செயற்பட வேண்டுமென்ற கருத்துடனேயே தான் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து ஆசிப்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா, சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.

இதன்போது கருத்து வெளியிட்ட, விஜித் விஜயமுனி சொய்சா, நாட்டின் தேசிய பிரச்சினை மற்றும் மத ரீதியான பிரச்சினைகளின்போது அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரருக்கு வலியுறுத்தினார்.

மேலும், ஸ்ரீலங்காவின் பிரதான கலாச்சாரமான பௌத்த கலாசாரத்திற்கு அமைய ஏனைய கலாசாரங்கள், அதன் துனை கலாசாரங்களாக, பௌத்த கலாசாரத்திற்கு கீழ் செயற்பட வேண்டியதை, மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரிடமும் விஜித் விஜயமுனி சொய்சா, வலியுறுத்தினார்.

2 comments:

  1. What is your culture, please explain....

    ReplyDelete
  2. What you meant by Buddhist culture? How can one religious culture could abide others religious culture. Is it possible Christian or Hindu culture stay down to Buddhist culture? Do not worry about the cultures. You people around 225 got mandate from the people of the nation to develop the country. Keep the peace and harmony and raise the people economy and social status. But mostly, they are totally failed to reach their goals. Politicians and the Buddhist religious dignitaries are the cause for this prevailing nature in Sri Lanka. We can straighten our chest and say this. Can you please point out a country that entertain religious smell into their political activities? Why only in Sri Lanka. Recently, its reported, some Saudi clergies penetrate their tongues into their political activities. Now, their identifications are not known by anyone. If country commonly wants some political, social and economical developments, other than the people elected politicians, must keep a side. This is what happening in the all over the world. Many Sri Lankans want to see Somalia. Do not worry. We can witness that scene very sooner here.

    ReplyDelete

Powered by Blogger.