Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகளை பதவி, துறக்கச்செய்வதில் ஹரீசின் பங்களிப்பு

இலங்கை அரசியல் வரலாற்றில், முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒரேசமயத்தில் பதவி துறந்து, தமக்கு சமூகம்தான் முக்கியம் என்பதை நிரூபித்துள்ளனர்.

அந்தவைகயில் முஸ்லிம் அரசியல்வாதிகளை ஒரே கொள்கையில் திரளச்செய்வதில், பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் முக்கிய பங்காற்றியுள்ளார்.

குறிப்பாக முஸ்லிம் அரசியல்வாதிகளை ஒரே கொள்கையில் திரளச் செய்வதிலும், பிரதான முஸ்லிம் தலைவர்களிடையே தூதுகளை சுமந்து செல்வதிலும், கட்சி பேதம் பார்க்காது ஹரீஸ் பங்களித்துள்ளார்.

கடந்த வாரப் ஒருசந்தர்ப்பத்தில் மாற்று முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவரின் வீட்டிக்குகூடச் சென்று ஒற்றுமை குறித்த பேச்சுக்களிலும், ஒரே தீர்மானத்தில் எடுத்து அதனடிப்படையில் பயணிக்க வேண்டுமென வலியுறுத்தியதாகவும் அறிய வருகிறது.

ஆரம்பத்தில் றிசாத் பதியுதீன் ஆசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் மாத்திரதே பதவி விலகி ஏற்பட்டுள்ள நெருக்கடியை குறைப்பதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் முஸ்லிம் அரசியல்வாதிகள் சகலரும் பதவி துறப்பதுதான் சிறந்தது என வாதிட்டு அதற்கான காரணங்களையும் விளக்கியுள்ளதை அடுத்தே அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் பதவிகளை துறப்பது என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளனர்.

4 comments:

  1. ஆரம்பிச்சிட்டீங்களா ஒங்கட கேடுகெட்ட தொழில திரும்பவும்......... இனியாவது விடுங்கடா இந்தப்புகழ்ச்சிப் பாடல் பாடுறத்த........ இது சமூகத்த அழிச்சுப்போடுன்டா......

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள். ஆனால் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை விட்டுக்கொடுங்கள்.

    ReplyDelete
  3. Ellorum sernthu edutha mudivitku thani oruvarai maathiram pirapalyappadutha vendam.

    ReplyDelete
  4. இந்நிகழ்வுகளுக்கு முன் அவ்வாறு அனைவரும் ராஜினாமா செய்யவேண்டி வரும் என ஹரீஸ் பேசிய செய்தி ஒன்று ஜப்னா முஸ்லிமில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

    ReplyDelete

Powered by Blogger.