Header Ads



நிரபராதிகள் என உறுதிப்படுத்திய பின்னரே, முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பொறுப்பேற்க வேண்டும்

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி எடுக்கும் தீர்மானமே ஐக்கிய தேசிய கட்சியின் தீர்மானமாக அமையுமென விவசாயம், கிராமிய பொருளாதாரம், பண்ணை வள அபிவிருத்தி நீர்ப்பாசன மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பதவிகளை ராஜினாமா செய்த அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் நிரபராதிகள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டதன் பின்னரே அமைச்சுக்களை மீண்டும் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சுப் பொறுப்புக்களை ராஜினாமா செய்துள்ள அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பு பொலிசாரிடம் தமது முறைப்பாடுகளை முன்வைத்து இந்த பிரச்சினைக்கு தீர்வுக்காண வேண்டும்.

அத்துடன் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் தயார். நம்பிக்கையில்லா பிரேரணை அல்லது ஜனாதிபதி தேர்தல் ஆகிய இரண்டினூடாக ஆட்சியில் மாற்றம் ஏற்படுத்த முடியும் என்றால் அதற்கும் நாங்கள் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.