Header Ads



இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தோற்கடிப்பதற்கு, நாட்டுக்கு புதிய சட்டம் அவசியமாகும் - சம்பிக்க

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தோற்கடிப்பதற்கு நாட்டுக்கு புதிய சட்டம் அவசியமாகும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதம் தொடர்பான பழைய சட்டங்களின் மூலமாக புதிய பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியாது.

வெளிநாட்டு இராணுவம் இலங்கைக்கு வரவுள்ளதாக ஒரு அச்சம் பரப்பப்படுகிறது.

ஆனால், அவ்வாறு எந்த ஒரு நிலையும் இல்லை எனத் தான் பொறுப்புடன் கூறுவதாக சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்

இந்தப் பயங்கரவாதமானது, 50, 60 நாடுகளுடன் பரவியுள்ளது என்பதனால், வெளிநாட்டு புலனாய்வுத் துறையுடனான தொடர்பு அவசியமாகிறது.

எவ்வாறிருப்பினும், இலங்கையின் இறைமையை காட்டிக்கொடுத்து அந்த நடவடிக்கையை மேற்கொள்ளத் தயாரில்லை என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. நீங்கள் எல்லாம் இனவாதம் பேசாவிட்டால் பயங்கரவாதம் தானாக இல்லாமல் போய்விடும்.

    ReplyDelete
  2. இஸ்லாமிய பயங்கரவாதம் மட்டும் இல்லை பெளத்த இந்து கிரிஸ்துவ எல்லா பயங்கரவாதம் இல்லாதொழிக்க வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.