Header Ads



நான் எந்த ஒரு, தவறும் செய்யவில்லை, தவறு செய்திருந்தால் தண்டனையை எற்க தயார்

எந்தவொரு தண்டனையையும் ஏற்க தயார் என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத விசாரணை பிரிவில் நேற்று ஆஜரான ஹிஸ்புல்லாவிடம் 8 மணித்தியாலங்கள் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், பாசிக்குடாவிலுள்ள ஹோட்டலில் ஹிஸ்புல்லா சந்தேகத்திற்குரிய அராபிய நாட்டர்கள் சிலரை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு ஆஜராகிய அவர் விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“சவுதி அரோபியாவில் இருந்து சுற்றுலா முதலீட்டாளர்கள் மூவரை நான் பாசிக்குடா காம் ஹோட்டலில் சந்தித்தேன்.

அது தொடர்பில் என்னிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், முஸ்லிம் இளைஞர்களுக்கு நான் ஆயுதங்கள் வழங்கியதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலை புலிகள் உறுப்பினரான இன்பராஸ் என்பவர் என் மீது குற்றம் சுமத்தியிருந்தார்.

அது தொடர்பிலும் என்னிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சஹ்ரான் தொடர்பிலும் என்னிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

என்னை மீண்டும் விசாரணைக்கு அழைப்பார்களா என தெரியவில்லை. இது தொடர்பான அறிக்கைகளை ஜனாதிபதி பெறுவார் என நினைக்கிறேன்.

நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை. எந்த குற்றச்சாட்டிலும் உண்மையில்லை. அப்படி நான் தவறு செய்திருந்தால் எந்த ஒரு தண்டனையும் எற்க தயாராகவே உள்ளேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.