Header Ads



காலங் கடந்து விசயத்தை உணர்ந்த மைத்திரி - குத்திக்காட்டும் மகிந்த

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் விளைவுகளினால் அத் திருத்தத்தை இரத்து செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி காலம் கடந்து உணர்ந்துள்ளார் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தற்போது உணர்வதால் எவ்வித பயனும் ஏற்படாது என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் இவ் வருடத்தில் தேர்தலுக்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுக்கப்படும். அரசியலமைப்பினை மாற்றியமைப்பதற்கு  போதுமான காலம் தற்போது கிடையாது.  ஒருவேளை இரத்து செய்ய வேண்டுமாயின் பாராளுமன்றத்தில்  மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு  கிடைக்கப் பெற வேண்டும்.  

தற்போதைய நிலையில் பாராளுமன்றத்தில் எத்தரப்பினரிடமும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு  கிடையாது. ஆகவே   அரசியலமைப்பினை  இரத்து செய்ய வேண்டும் என்பது சாத்தியமற்றது.  நிலையான ஒரு அரசாங்கத்திலே  அரசியலமைப்பில் காணப்படுகின்ற குறைப்பாடுகளும், முரண்பாடான ஏற்பாடுகளும் பாராளுமன்ற   பொருள்கோடலுக்கு அமைய  திருத்தியமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஹகுரன்கெல மெதவெல பகுதியில் இடம்பெற்ற  நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

1 comment:

  1. ஒருவர் வாழ்க்கை முழுவதும் தலைமைப் பதவியில் இருக்க முடியாது. கூடாது. குடும்ப அரசியல் முறைமை எல்லாம் அரசியலில் இருந்து அழிக்கப்படல் வேண்டும். காலத்திற்கு காலம் புதிய தலைமுறைகள் தோற்றம் பெறல் வேண்டும். நாடு மக்களுக்குரியதாக மாற்றப்படல் வேண்டும். மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் மக்களுக்காகவே பணி புரிதல் வேண்டும். இனரீதியான சிந்தனைகள் ஒழிக்கப்படல் வேண்டும். இதனுடைய தோற்றப்பாட்டின் அம்சமாகவே 19வது திருத்தச் சட்டம் வெளிப்பட்டதாக அப்போது கூறப்பட்டது. இவையெல்லாம் நடந்தால் இலங்கை ஒரு சிங்கப்பூராக மிளிரும் என்றும் கூறப்பட்டது. அடப் பாவிங்களா. எங்களுக்கு சிங்கப்பூர் வேண்டாம்டா. நாடு சோமாலியாவாகவே இருந்துட்டுப் போகட்டும். கால் வயிறு அரை வயிறு பட்டினிதான். சந்தோசமாக கூடி ஆடி குதூகலிச்சு வாழ்க்கையை அனுபவிக்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.