June 13, 2019

குர்ஆனில் சிங்கள - ஆங்கில மொழி பெயர்ப்புகளுக்கிடையே முரண்பாடா..? முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி


-நஜீப் பின் கபூர்-

முதலில் இப்படியான செய்திகளைப் படிக்கின்ற போது நம்மவர்கள் மிகவும் நிதானமாகவும், அவதானமாகவும்,  புத்திகூர்மையாகவும் இவற்றை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். இப்படி ஒரு செய்திபைப் படித்துவிட்டு அதனைக் கண்டும் கண்டு கொள்ளமாலும் இருப்பது இஸ்லாத்துக்குச் செய்கின்ற துரோகமாகவே பார்க்க வேண்டும். எனவே புனித குர் ஆனில் பழைய புதிய ஏற்பாடு இருக்கின்றதா என்ற தோரணையில் ஒரு ஊடகம் பகிரங்கமாக கேள்வி எழுப்பும் போது  அது பற்றிய தகவல்களை சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாது. 

இப்படியான சில தகவல்களைச் சொல்கின்றபோது அதற்குப் பதில் கொடுக்க முடியாதவர்கள் கொதித்துப்போவதையும் அது பற்றிய தகவல்களைச் சொன்னவர்களை பொறுப்புக் கூறவேண்டியவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் விமர்சனம் பண்ணுவதும் இதற்கான தெரிவாக-பதிலாக எடுத்துக் கொள்வது எவ்வளவு தூரம் நியாயமானது என்பதனை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். 

எப்படி இருந்தாலும் பொறுப்புக் கூறுவதிலிருந்து பின்வாங்குவது கோழைகளில் செயல் என்பதனையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். சில தினங்களுக்கு முன்னர் புனித குர் ஆனில் சிங்கள மொழி பெயர்ப்பு பகிரங்க விழாவொன்றறில் கொழும்பில் அரசியல் தலைவர்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் கையளிக்கப்பட்டதை நாம் அனைவரும் பார்த்த செய்தி. ஏற்கெனவே பல ஆயிரக் கணக்கான மொழிகளில் இது மொழி பெயர்ப்புச் செய்யப்பட்டு இன்று உலகம் பூரவிலும் பாவனையில் இருந்து வருகின்றது. அதனால் இது ஒரு புதிய செய்தி அல்ல. என்றாலும் அந்த முயற்ச்சி பாராட்டத்தக்கது என எடுத்துக் கொள்வோம்.

இந்த நிலையில் புனித குர் ஆன் 9:5 மற்றும் 9:29 ஆகியவற்றிலுள்ள மொழி பெயர்ப்பில் ஆங்கிலத்திற்கும் சிங்கள மொழி பெயர்ப்பிற்குமிடையே பாரிய முரன்பாடு இருக்கின்றது என்று இந்த வாரம் வெளியாகி ராவய பத்திரிகையில் (08.06.2019) எஸ்.நந்தலால் என்பவர் கேள்வி எழுப்பி இருப்பதுடன், குர் ஆனில் பழைய புதிய என்று ஏதாவது இருவகையில் இருக்கின்றதா என்று கேள்வி எழுப்பி இருக்கின்றார்.

ராவய பத்திரிகை நமது நாட்டிலுள்ள ஒரு செல்வாக்கான அரசியல் பத்திரிகை முஸ்லிம்கள் பற்றிய பல உண்மையான செய்திகளை அது அவ்வப்போது சிங்கள வாசகர்களின் பார்வைக்குக் கொண்டு வந்து கொண்டிருக்கின்றது. எனவே ராவயவின் இந்தக் கேள்விகளை இனவாத கண்னோட்டத்தில் பார்க்காது அதற்கு ஒரு தெளிவான பதிலைக் கொடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு இந்த நாட்டிலுள்ள இஸ்லாமிய மார்க்கப் பெரியார்களுக்கு இருக்கின்றது. குறிப்பாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா இதற்குப் பதில் கொடுக்க வேண்டும். இந்த மொழி பெயர்ப்பு விழாவில் அவர்கள்தான் நாயகர்களும் கூட.!

இது பற்றி மேலும் சொல்வதானால் கடந்த மே 12ம் திகதி முஸ்லிம் சமூகத் தலைவர்களில் ஒருவரான இம்டியாஸ் பாக்கீர் மாகாருடன் நடந்த ஒரு கலந்துரையாடலை மையமாகக் கொண்டு நான் கடந்த 19ம் திகதி ராவயவுக்கு 'குர்ஆனில் இருப்பதும் அப்படித்தானே' (குர்ஆனேயே திபென்னே எசேம நோவேத?) என்று ஒரு கட்டுரையை எழுதி இருந்தேன்.

அதில் எனக்கு ஏற்பட்ட குழப்பம் என்னவென்றால் இஸ்லாம் என்பது பாக்கீர் மாகார் சொல்லுகின்ற படி சமாதானம் என்பதாயின், புனித குர் ஆனில் 9:5 மற்றும் 9:29 வாக்கியங்களில் ஆங்கிலத்தில் கொல் (ளுடுயுலு) என்று இருக்கின்றது. ஆனால் அதே இடத்தில் 9:5 மற்றும் 9:29 களில் சிங்கள மொழி பெயர்ப்புக்களில் அப்படி இல்லையே.!

எனவேதான் குர்ஆன் புதிய பழைய ஏற்பாடுகள் என்று இருக்கின்றதோ என்று யோசிக்க வேண்டி இருக்கின்றது என்று அவர் கேள்வி எழுப்பி இருக்கின்றார். அத்துடன் ஐஎஸ்ஐஎஸ் கூட கொல் என்பதனை தமது கோஷமாக எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் அவர் அதில் குறிப்பிடுகின்றார். 

சிங்களப் பிரதியில் சில வார்த்தைகள் தவிர்க்கப்பட்டிருக்கின்றது அல்லது ஆங்கிலத்திற்குப் பொறுத்தமில்லாத வார்த்தைகள் உள்வாங்கப்பட்டிருக்கின்றது. அரபுடன் ஆங்கிலம் சரியாக இருக்கின்றது. என்பது கட்டுரையாளர் வாதமாக இருக்கின்றது.

இதனை நாம் நேரடியாகச் சொல்வதானால் 'கொல்' என்ற வார்த்தையை நீங்கள் சிங்கள மொழி பெயர்ப்பில் இருட்டடிப்புச் செய்திருக்கின்றீர்கள் என்பதுதான் அவரது கேள்வி என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனது கட்டுரைக்கு ஜூன் 2ல் பதில் கொடுக்கின்ற பாக்கீர் மாகார் இதற்கு சரியான விளக்கம் தரவில்லை. என்பது ராவய கட்டுரையாளர் வாதம். 

கட்டுரையாளர் - பாக்கீர் மாகாரது விவாதங்கள் எப்படிப் போனாலும் உண்மையில் இப்படி ஆங்கில மொழி பெயர்ப்புக்கும் சிங்கள மொழி பெயர்ப்புக்கும் இடையில் முரன்பாடுகள் இருக்கின்றதா? 

தமிழ் மொழி பெயர்ப்புக் கூட ஆங்கில மொழி பெயர்ப்புடன் ஒத்துப்போகின்றது என்பதுதான் எமது அவதானம். இனவே இதற்கு விளக்கம் தருமாறு கட்டுரையாளர் நந்தலால் இம்டியாசிடம் கேட்கின்றார். ஆனால் இம்டியாஸ் ஒரு மதபோதகரோ அல்லது இந்தக் குர் ஆனை சிங்களத்தில் மொழி பெயர்ப்புச் செய்தவரோ அல்ல. எனவே இதற்கு இந்த மொழி பெயர்ப்பைச் செய்தவர்களும் ஜம்மியத்தல் உலமாவும்தான் இதற்குப் பதில் செல்ல வேண்டும். 

இன்னும் ஓரிரு நாட்களில் இனவாதிகள் இதனைச் சந்தைப்படுத்த முனைவார்கள். அது வரையும் காத்திராது இதற்குப் பதில் கொடுக்க வேண்டும் என்பது எமது கருத்து.

முக்கிய குறிப்பு:
ஒரு வேலை நாட்டில் இருக்கின்ற இனக் குரோதமான நேரத்தில் சில வார்த்தைகளை மொழி பெயர்ப்புச் செய்தவர்கள் தவித்துக் கொண்டார்களோ அல்லது மொன்மையான வார்த்தைகளைப் பாவித்து சமாளிக்க முனைந்தார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

ஆனால் புனித குர் ஆன் என்பது இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டது-அருளப்பட்டது. அதில் எந்த வொரு வார்த்தையை மாற்றும் அதிகாரம் எவருக்கும் இல்லை. மேலும் உலகிலுள்ள ஆயிரக்கணக்கான மொழிகளில் இது ஒரே விதமாக இருக்க, சிங்களத்தில் மட்டும் மாறிப் போய் இருக்கின்றது - மாற்றப்பட்டிருக்கின்றது என்றால் இதனை என்னவென்று சொல்வது.? 

உலக மக்கள் பேசுகின்ற மொழியில் சிங்களம் வீகிதாசார அடிப்படையில் வெரும் (0.1மூ) சைபர் தசம் ஒரு வீதம் மட்டுமே. இதற்கு - இனவாதத்துக்கு அஞ்சி இப்படி நடந்திருந்தால் கேவலம்! இது பூனை கண்களை மூடிக் கொண்டு முழு உலகமும் இருண்டுபோய் விட்டது என்று எண்ணுகின்ற வேலையாக அல்லவா இருக்கின்றது.

ஆங்கிலம், பிராஞ்சு, ஸ்பெயின், லத்தீன், ஜப்பான், சீனா,ரஸ்யா,  இந்தி போன்ற மொழிகளில் ஒரே விதமாக இருக்க சிங்களத்தில் மட்டும் இப்படி நடந்திருந்தால் அது ஏன்? எப்படி நடந்தது.!

இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் செய்திகளைப் படிக்கின்றார்களோ? பத்திரிகைகளை வாசிக்கின்றார்களோ இல்லையோ? சிங்கள மக்கள் நல்ல வாசகர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் பல மொழிகளில் தகவல்களைத் தேடுகின்றார்கள் ஆராய்கின்றார்கள் என்பதனை முஸ்லிம் சமூகப் பொறுப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த வாரம் ராவயவில் வெளிவந்திருக்கின்ற கட்டுரையைப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் மேலதிக விபரங்களுக்காக படித்துக் கொள்வது சிறந்தது. எனவே கண்டும் கண்டு கொள்ளாதவர்களாக நடிக்காது பொறுப்பானவர்கள் பதில் சொல்ல வேண்டும். இம்டியாசும் இது விடயத்தில் தனது பார்வையைச் செலுத்த வேண்டும்.

5 கருத்துரைகள்:

Imthaiyaas antha quran aanay awarahluku kodutthu irunthaal nicchayam awaridamthaan antha kelwi poy serum..bt one intha maatram.ewwaaru nadanthathu enpathu nicchyam namathu sinhala molipaarpalarhaluku nichaym wilangum...atthodu intha moli maatram seytha emathu samooham ithay sariapaarkkathathu awarhalin modatthaname thawira weru illay....

it is a big error and unforgivable if the translators corrupted the quran. the translators and ulamas fear for whommmmmmm? are they believe in allah or not? what kind of ulams and leaders we have? unless you fear allah and only who will help you?

விளக்க குறிப்பு 53. பிற மதத்தவரை இஸ்லாம் கொல்லச் சொல்கிறதா?

இவ்வசனங்கள் (2:190-193, 2:216, 2:244, 3:121, 3:195, 4:74,75, 4:84, 4:89, 4:91, 8:39, 8:60, 8:65, 9:5, 9:12-14, 9:29, 9:36, 9:41, 9:73, 9:123, 22:39, 47:4, 66:9) போர் செய்யுமாறு முஸ்லிம்களுக்குக் கட்டளையிடுகின்றன.

ஆன்மிக வழிகாட்டும் நூலில் போர் செய்யுமாறு ஏன் கட்டளையிட வேண்டும்? அப்படியானால் வாள்முனையில் தான் இஸ்லாம் பரப்பப்பட்டதா? என்ற சந்தேகம் ஏற்படலாம்.

ஏன் இவ்வாறு கட்டளையிடப்பட்டது? எந்தச் சூழ்நிலையில் இந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது என்பதை அறிந்து கொண்டால் இந்தச் சந்தேகம் விலகி விடும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் தம்முடைய வீடு வாசல், சொத்து, சுகங்கள் அனைத்தையும் எதிரிகளிடம் பறிகொடுத்து மக்காவை விட்டு வெளியேறினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது அவர்களுக்கு மக்களின் பேராதரவு கிடைத்ததால் அங்கே தனி அரசையும் உருவாக்கினார்கள்.

இதன் பிறகு மக்காவாசிகள் படையெடுத்து வந்ததாலும், மக்காவில் இருந்த முஸ்லிம்களைத் துன்புறுத்தியதாலும், சிலரைக் கொன்று குவித்ததாலும் போர் செய்வதை இறைவன் கடமையாக்கினான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதத் தலைவராக மட்டுமின்றி அந்த நாட்டின் அதிபராகவும் இருந்தார்கள். நாட்டின் அதிபராக இருப்பவர் தமது குடிமக்களைக் காக்கும் பொறுப்பில் இருப்பதால் எதிரிகள் போருக்கு வரும்போது அவர்களை எதிர்கொண்டு தான் ஆகவேண்டும். சொந்த ஊரை விட்டு முஸ்லிம்களை விரட்டி அடித்தது மட்டுமின்றி வேறு இடத்தில் நிம்மதியாக வாழும்போது எதிரிகள் போருக்கு வந்தால் அவர்களை எதிர்க்கும் கடமையும், உரிமையும் உண்டு. இதனடிப்படையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போரிட்டார்கள்.

'கொல்லுங்கள்' 'வெட்டுங்கள்' என்று கூறப்படும் கட்டளைகள் போர்க்களத்தில் நடைமுறைப்படுத்த வேண்டியவை. போர்க்களத்தில் இப்படித்தான் நடக்க வேண்டும். போர்க்களத்தில் போர் வீரர்களுக்கு இடப்பட்ட மேற்கண்ட கட்டளைகளை இஸ்லாத்தின் எதிரிகள் எடுத்துக் காட்டி முஸ்லிமல்லாத மக்களை இஸ்லாம் கொன்று குவிக்கச் சொல்கிறது என்று பிரச்சாரம் செய்வது உள் நோக்கம் கொண்டதாகும்.

இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என்பதைப் பின்வரும் வசனங்களில் இருந்தும் அறிந்து கொள்ளலாம்.
• வம்புச் சண்டைக்கு வருவோருடன் தான் போர் செய்ய வேண்டும் என்று 2:190, 9:13 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
• சொந்த ஊரை விட்டு விரட்டியடித்தவர்களுடன் தான் போர் செய்ய வேண்டும் என்று 2:191, 22:40 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
• போரிலிருந்து விலகிக் கொள்வோருடன் போர் செய்யக் கூடாது என்று 2:192 வசனம் கூறுகிறது.
• அநீதி இழைக்கப்படும் பலவீனமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காகவே போர் செய்ய வேண்டும் என 4:75, 22:39-40 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
• சமாதானத்தை விரும்புவோருடன் போர் செய்யக் கூடாது என்று 8:61 வசனம் கூறுகிறது.
• மதத்தைப் பரப்ப போர் செய்யக் கூடாது என்று 2:256, 9:6, 109:6 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

நியாயமான காரணம் இருந்தால் மட்டும் முஸ்லிம் அரசாங்கம் போர் செய்யலாம் என்று தான் இஸ்லாம் கூறுகிறது.

இந்த வசனங்கள் எதற்காக எந்தச் சூழ்நிலையில் அருளப்பட்டன என்பதை விளங்காமல் சில தனி நபர்களும், குழுக்களும் தங்களின் வன்முறைகளுக்கு உரிய சான்றுகளாக இவ்வசனங்களை எடுத்துக் கொண்டால் அது அவர்களின் அறியாமையாகும். இவ்வசனங்களுக்கும், வன்முறைகளுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

தனி நபர்களோ, குழுக்களோ ஜிஹாத் என்ற பெயரில் வன்முறையில் இறங்கினால் அது தவறாகும்.

சொந்த நாட்டை விட்டு விரட்டப்பட்டவர்கள் போரிட்டு, இழந்த உரிமையை மீட்பதை யாரும் குறை கூற முடியாது. அதனடிப்படையில் தான் மக்காவின் மீது போர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போர் தொடுத்தனர்.

போரை முதலில் துவக்கக் கூடாது என்று தெளிவான கட்டளையும் இருக்கிறது. இதை 2:190, 9:12,13 ஆகிய வசனங்களில் காணலாம்.

some of us not know the value of holy Al Quran Just simply translated without any consultations, Arabic translation is not an easy matter. Simply given to Kafirs hands, recently in an street a sadu holding the Al Quran & and some people arguing with him about the processing of quran. When we have to take Wuzu to touch ..then how them.. When the Soora Izza Jaa a Nasrullahi..relevations received...and later the real meaning was not understand for Imam Abdulla Ibnu for many consultations on that time and more & more discussions only they the arabs find the meanings. Now a days here many people trying to taught Al Quran to Sadu in the past, and now what has happened.

Al Quran is very sacred...but some foolish in the society using for political purpose.. some have party propaganda by using..to explain other community...recently one exhibition at viharamaha devi park of quran exhibition by some fools . it is not matter of exhibition.. after this only many things happening....here.

Post a comment