Header Ads



இஸ்லாமிய நாடுகளிடம் மன்றாடிய ஜனாதிபதி - உதவிகளை வழங்கி, தடைகளை நீக்க கோரிக்கை


நாட்டில் இனங்களுக்கிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் அரசியல்வாதிகள் இனவாத கருத்துக்களை வெளியிட்டாலும் அரச தலைவர் என்ற வகையில் அனைத்து பிரஜைகளினதும் மரியாதையையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய நாடுகள் ஒன்றியத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடனான சந்திப்பு நேற்று ( 26) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட நாடுகள் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்புக்காக தூதுவர்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி , இனிவரும் காலங்களிலும் இலங்கைக்கு பொருளாதார உதவிகளை வழங்குமாறும், சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதற்கு விடுத்துள்ள தடைகளை நீக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

துருக்கி, மலேசியா, பாக்கிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியா, சவுதி அரேபியா, பலஸ்தீன், பங்களாதேஷ், குவைட், கத்தார், மாலைதீவு, ஈராக், லிபியா, ஈரான் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

 (எம்.மனோசித்ரா)

8 comments:

  1. எனய்யா அவர்களிடம் போய் மன்ராடுகிரீர்கல்,கிழக்கில் இருக்கும் சில இனவாத தமிழ் அரசியல் வாதிகள் மற்றும் சில சிங்கள இனவாத அரசியல்வாதிகள்,சில தேரர்கல் இருக்கும் போது ஏன் பயம்.muslim நாடுகளை விட அவர்கள் தருவார்களே.

    ReplyDelete
  2. முதலில் முஸ்லிம்களின் ஆடை மற்றும் உணவு தடை பிறகு முஸ்லீம் உல்லாசப்பயணிகள் வாங்கோ எங்கள் நாட்டுக்கு அப்படி தடை மத்தியில் எப்படி இங்கு வருவார்கள்?ஹிஜாப் மற்றும் முகத்திரையில்லாமல் முஸ்லீம் நாட்டு பெண்கள் இங்கு வரமாட்டார்கள் மேலும் ஹலால் இலட்சனை பதிவு இல்லாமல் அவர்கள் உணவுகளும் எங்கு பார்த்தாலும் கொள்வனவு செய்யமாட்டார்கள்.

    Islamic countries tourist should avoid to visit Sri lanka.

    ReplyDelete
  3. இன வாத பத்திரிகைகளின் தலைப்பைப் போன்றே அமைந்துள்ளது.

    ReplyDelete
  4. ஓன்னு மட்டும் உண்மை. நாடு இப்படியே போய்க் கொண்டு இருக்குமானால் ஒரு சில அரசியல் வாதிகளும் சில சிற்றரசராகச் செயற்படும் அரசியல் வாதிகளும் ஒரு சில பௌத்த தேரர்களும் நன்மை அடைவார்களே தவிர நம்மைப் போன்ற சாதாரண மக்கள் அல்ல.

    ReplyDelete
  5. அனைத்து இஸ்லாமிய நாடுகளும் USA-UK யின் கட்டுப்பாடில்-காலடியில் உள்ளன.

    எனவே அமேரிக்க வை திருப்தி செய்தால், மற்றவைகளை அமேரிக்க பார்த்துக்கொள்ளுவார்கள்.

    ReplyDelete
  6. Ajan இப்போது வரும் செய்திகளை it means உண்மைகளை பார்க்கும் போது உன்னை போல இனவாதிகலுக்கு தூக்கம் வராது.நீங்கள் நினைத்தது ஒன்னு இப்போது நடப்பது வேறு அதனால் வயிறு எரியுதா உமக்கு

    ReplyDelete
  7. இரவோடு இரவாக சிங்கப்பூர்சென்று அமெரிக்காவுக்கு இலங்கைக்குத் தாரை வார்க்கும் உடன்படிக்கையில் கையொப்பமிட்டுவிட்டு வந்து நான் அமெரிக்காவுடனான சோபா மற்றும் ஏ.ஸீ.எஸ்.ஏ. உடன்படிக்கைகு எதிர்ப்புத் தெரிவிக்கின்றேன் என நயவஞ்சக நாடகம் ஆடுவதை இந்த அரபுலக தூதுவர்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஞானசாரவையும் மற்ற காபிர் ரத்ன தேரோவையும் தூண்டி முஸ்லிம் கவனர்களைத் பதவிதுறக்க நாடகத்தை வெற்றிகரமான அரங்கேற்றிவிட்டு, முஸ்லிம்களின் உடைமைகளையும் சொத்துக்களையும் இனவாதிகள் திட்டமிட்டுச் சூறையாடும்போது வாளாவிருந்துவிட்டு இப்போது அரபு முஸ்லிம் உலக தூதுவர்களைச் சமாளிக்க முயற்சிக்கும் நவஞ்சகத்தின் அரங்கேற்றம் பற்றி இவர்கள் நன்கு அறிவார்கள்.

    ReplyDelete
  8. @Rizard, எனது அனைத்து comments களும் 100% உண்மையானது.

    உங்களுக்கு ஏன் உண்மைகள் கசக்கின்றன?

    ReplyDelete

Powered by Blogger.