Header Ads



ஆடைப் பிரச்சினையால் முஸ்லிம், ஆசிரியைகள் தொழிலை கைவிடும் ஆபத்து

- எம்.எல்.எஸ்.முஹம்மத் -

அரச ஊழியர்கள் அணியும்   ஆடைகள் தொடர்பாக அண்மையில்  பொது  நிர்வாக அமைச்சின் செயலாளர் மூலம் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையைத் தொடர்ந்து இதுவரை காலமாக அபாயா அணிந்து பாடசாலைகளுக்குச் சென்ற முஸ்லிம்  ஆசிரியைகளில் சிலர் தமது தொழிலை கைவிடும் தீர்மானத்தில் உள்ளனர்.

புதிய சுற்றறிக்கைக்கு இணங்க அனைத்து பெண் அரசாங்க  ஊழியர்களும் கடமை நேரத்தின் போது சேலை  அணிந்திருக்க வேண்டுமென பொது வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அபாயா அணிந்து  செல்லும் முஸ்லிம்  பெண் அரசாங்க  ஊழியர்கள் பாரிய அசௌகரியங்களுக்கும், மன உளைச்சல்களுக்கும் முகங்கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

குறிப்பாக தமது பாதுகாப்பு மற்றும் ஆடைகள் தொடர்பான  இஸ்லாமிய ஒழுக்க விதிமுறைகளைப் பேணி அபாயா அணிந்து செல்லும்   முஸ்லிம் ஆசிரியைகள் சேலை  அணியத் தொடங்குவது பல சமூப் பிரச்சினைகளையும்,பாதுகாப்பற்ற சூழ்நிலைகளையும் புதிதாக தோற்றுவிக்குமெனவும் இவ்வாசிரியைகள் நம்புகின்றனர்.

எனவே பாரிய சவால்ககளுக்கு மத்தியில்  சேலை அணிந்து ஆசிரியர் தொழிலை மேற்கொள்வதை விடவும்  இஸ்லாமிய ஒழுங்கு விதிமுறைகளைப் பேணி  ஆடை அணிந்து  வீட்டில் சுயதொழில்களில் ஈடுபவது பூரண மனத்திருப்தியைத் தருகிறது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி புதிய சுற்றறிக்கையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாக முஸ்லிம் சமூகத் தலைமைகள் நாட்டின் அரச தலைவர்களிடம் சுட்டிக்காட்டியுள்ள போதிலும் இதுவரை இவ்வறிவித்தலில் எவ்வித  திருத்தங்களும் மேற்கொள்ளப்பட வில்லை .

இலங்கையின் தேசிய மனித உரிமைகள்  ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீப்பிகா உடகமவும் அண்மையில் மேற்படி புதிய சுற்றறிக்கை தொடர்பாக தனது பாரிய கண்டனத்தையும் தெரிவித்திருந்தார்.

மேற்படி புதிய சுற்றறிக்கை அரசியல் அமைப்பின் சரத்து 12(02) இன் கீழான பால் அடிப்படையாகக் கொண்ட பாரபட்சத்தை தடுக்கும்  ஏற்பாட்டை மீறுவதாக அமைந்துள்ளது எனவும் மனித உரிமைகள் தொடர்பான செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

6 comments:

  1. திருகோணமலை மாவட்ட செயலகத்தில் திட்டமிடல் உத்தியோகத்தர்க மற்றும் உயர் அதிகாரிகள் முஸ்லிம் பெண்களை சாரி அணிந்து வரும் படி கூறி அவர்கள் மன ரீதியாக பாதிக்கறார்கள்

    ReplyDelete
  2. தொழிலை விட்டால் அது எதிரிக்கு சாதகம் ஆகிடும்.அதனால் நீதி மன்றங்களுக்கு செல்லுங்கள்.

    ReplyDelete
  3. ஹோமாகமை வைத்தியரைப் போல் முஸ்லிம் பெண் அரசாங்க ஊழியர்களும் ஆசிரியைகளும் உறுதியான முடிவொன்றை எடுத்தல் வேண்டும். ஆனால் உடனடியாக விலகாமல் குறைந்தது 2 வாரங்களுக்காவது பாடசாலைக்குச் செல்லாமல் இருக்கலாம். வீட்டில் இருந்தவாறே போராட்டத்தை ஆரம்பிக்கலாம். அப்போதுதான் இதன் தாக்கம் அரசாங்கத்திற்கு விளங்கும். எமது அரசியல் தலைவர்கள் எடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவினால் அஸ்கிரிய மகா நாயக்க தேரர்களே ஒரு படி கீழிறங்கி வந்திருக்கின்றார்கள். அல்லாஹ் ரிஸ்க் அளக்கப் போதுமானவன். அரசாங்கத் தொழில்தான் செய்யவேண்டும் என்பதில்லை. கற்ற கல்வி வீணாவதும் இல்லை. இது பெண்களின் மானத்துடனான போராட்டம். விட்டுக்கொடுக்கக் கூடாது.

    ReplyDelete
  4. அந்த சுற்றறிக்கை நீக்கப்பட்டு விட்டதே இல்லாவிட்டால் மனித உரிமையகத்தில் முறைப்பாடு செய்யவும்

    ReplyDelete
  5. ஏன் தங்களது தொழிலை இழக்க வேண்டும்? சாரி அணிந்து தலையை மறைப்பதற்கு அனுமதி உண்டு. அந்த வகையில் தனது முழு உடலையும் மறைப்பதற்கு ஏற்றவாறு ஒரு முறையில் ஆடையை வடிவமைத்து அணிந்து செல்ல வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் பின்வாங்காது அல்லாஹ்வின் கட்டளைகளை மீறாமல் முன்னேற வேண்டும். இஸ்லாம் பின்பற்றுவதற்கு இலகுவான மார்க்கம்.

    ReplyDelete
  6. Circular suspended no? why are mentioning that circular alive??

    ReplyDelete

Powered by Blogger.