June 27, 2019

ஓசரி என்ற பதம் பயன்படுத்தப்பட முடியுமானால், ஏன் அபாயா என்ற பதம் பயன்படுத்தப்பட முடியாது..?

ஒரு மாத கால இழுபறி, துஷ்பிரயோகம், அவமானப்படுத்தல்கள், இடமாற்றம் என்பவற்றிற்குப் பிறகு பொது நிர்வாக அமைச்சினால் அலுவலகர்களின் ஆடை சம்பந்தமான புதிய சுற்று நிருபம் வெளியிடப்படிருக்கிறது.

சேலை,ஒசரி என்ற பதங்களுக்கு மேலதிகமாக 'அரச சேவையின் கௌரவத்தைப் பாதுகாக்கும் பொருத்தமான, கண்ணியமான உடை' என்ற ஒரு வசனம் மேலதிகமாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.

அந்த வசனத்திற்குள் ஹபாயாவும் உள்ளடக்கப்பட்டுவிட்டது என்று பெரு மூச்சு விடுகின்றனர் பலர்.

ஒசரி என்ற ஒரு இனத்தின் கலாச்சார ஆடையை இச் சுற்று நிருபம் உள்ளடக்க முடியும் என்றால் ஏன் ஹபாயா என்ற பிரயோகத்தை உள்ளடக்க முடியாத என்ற கேள்வி இங்கு எழுகிறது.

பொருத்தமான கண்ணியமான ஆடை எது என்பதை வரைவிலக்கணம் செய்பவர் யார் என்ற கேள்வியும் எம்முள் எழுகிறது?

இனவாதத்தால் ஊறிப் போன ஒரு அலுவலக மேற்பார்வையாளர் ஹபாயா என்பது கண்ணியமான ஆடை இல்லை என்று வாதித்தாலோ அல்லது கண்ணியமான ஆடை என்று இங்கு சொல்ல வருவது சேலை அணிந்து நீள மேற்சட்டை அணிந்து, ஸ்காப் அணிந்து வருவதுதானே ஒழிய ஹபாயாவை அது சொல்லவில்லை என்று வரைவிலக்கணம் சொன்னாலோ எம்மிடம் பதில் எதுவும் இல்லை.

சென்ற மாதம் வந்த சர்ச்சைக்குரிய சுற்று நிருபத்தின் நோக்கமே மறைமுகமாக ஹபாயாவை இல்லாமலாக்குவதுதான் என்பது உலகறிந்த உண்மை. இன்று வந்த சுற்று நிருபம் அபாயாவை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டதா என்றால் இல்லை என்றுதான் எமக்குப் பதில் இருக்கிறது. அபாயாவையும் உள்ளடக்க வேண்டும் என்றிருந்தால் ஹபாயா என்ற பிரயோகத்துடனே புதிய சுற்று நிருபம் வந்திருக்கும்.

கழுத்தைச் சுற்றி மூக்கைத் தொடும் வார்த்தைப் பிரயோகங்கள் அவசியமில்லை.

இப்புதிய சுற்று நிருபத்தால் பிரச்சினை தீர்ந்தது என்று பெரு மூச்சி விடக்கூடாது.இச் சுற்று நிருபத்தில் ஹபாயாவும் உள்ளடக்கப்படுகிறது என்பதை அரச அலுவலகங்கள் ஏற்றுக் கொள்கிறதா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஒன்று சுற்று நிருபம் ஹபாயா என்ற பதத்தை வெளிப்படையாக உள்ளடக் வேண்டும் அல்லது கண்ணியமான ஆடை என்பதில் ஹபாயாவும் உள்ளடங்கும் என்ற ஒரு நீதிமன்றத் தீர்ப்பு வேண்டும்.அது வரைக்கும் இப்பிரச்சினை நீண்டு கொண்டு செல்லும் வாய்ப்பிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

Raazi Muhammadh Jaabir

5 கருத்துரைகள்:

If any body ask definition to Abaaya. What will happen in our society?

அரசாங்க நிர்வாகத்தில் வேலைபார்க்கும் முஸ்லீம் பிரதிநிதி ஒருவருக்கு ஏன் இந்த திருத்தவேளை முன்னின்று செய்ய முடியாது?அல்லது அந்த அச்சகத்தில் முஸ்லிமல்லாத தமிழர் ஒருவரா இப்படி அர்த்தமற்ற சொட்களை பாவித்து எழுதுகிறார்கள் ஆக அதையும் மிஞ்சி முஸ்லீம் கலாசார அமைச்சின் பிரதிநிதிகள் ஏன் இவ்வாறான தவறுகளை உடன் திருத்திக்கொள்ளுவதில்லை.

My opinion is say full dress instead of Afaaya. which reveal face only.

முஜிபுர்ரஹ்மான் பா.உ. அவர்கள் குற்ப்பிட்டிருந்தார். இச்சுற்றறிக்கையின் இறுதி வடிவம் தலைவர் ஹக்கீம் அவர்களிடம் அனுமதிக்காக ஒப்படைக்கப்பட்டு அவருடைய திருத்தம் காரணமாகத்தான் சற்று தாமதமானதாக. அப்படியானால் அவர் நிச்சியமாக துறை சார்ந்தவர்களுடன் கலந்து பேசி தீர்க்கதரிசனமான திருத்தங்களை செய்தே அனுமதி வழங்கியிருப்பார் என எம்மால் நம்பமுடியாமல் விட்டால் வேறு யாரை நம்புவது. அவர் முஸ்லிமில்லையா? ஓர் இறை கொள்கையுடையவரில்லையா? அல்லாஹ்வை, றசூலை, மறுமையை ஏற்றுக்கொள்ளாதவரா?
கருத்துரை கூறும் எங்கள் அளவுக்கேனும் கல்வியலும் அறிவிலும் அனுபவத்திலும் தேறாதவராக எண்ணுகிறோமா? புதுமையான மனிதர்களாக நாம் இருக்கிறோமா?

Ellaarukkum nerayya karuttuhal waralaam bt ..naama sila wisayankala nallatha payanpadutthikanum...abaya enra sollai serkkinra santharppatthula enayya inatthawarhalin aadayhalin peyarhalai kooda serkka neridum...athanaala olukkamaana aaday enpathu ellarukkum porunthum enru enathu karutthu....
........

Post a comment