Header Ads



சிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..? (அதிர்ச்சித் தகவல்)

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லிம்களின் வர்த்தக ஏகாதிபத்தியத்தை வீழ்த்திவிடலாம் என்பதே பெரும்பான்மை கருத்தாக இருந்தது.

‘பேருவளை ஹோட்டல்’ கொசு மொய்ப்பதையும் நோ லிமிட் கார் தரிப்பிடம் பாழடைந்து கிடப்பதையும் படம்பிடித்து முகநூலில் பதிவேற்றி அற்ப இன்பம் அடைவதற்கும் சிலர் மறக்கவில்லை.

தற்போது அதன் விளைவுகள் தோன்ற ஆரம்பித்துள்ளன. கையில் பணத்தோடு கிராமம் கிராமமாக அலைந்து வெற்றிலை, பாக்கு, தேங்காய், கொப்பறா, தென்னங்குச்சி, மஸாலாப் பொருட்கள் (Spices) கொள்வனவு செய்த முஸ்லிம் வியாபாரிகள் தமது வேலையைக் கைவிட்டுவிட்டனர்.

இலங்கையில் மட்டுமல்ல, உலகில் எந்தவொரு நாட்டிலும் ஏற்றுமதி-இறக்குமதி வியாபாரம் முஸ்லிம்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. முஸ்லிம் சமூகம் உலகமெங்கிலும் பரவுவதற்குக் காரணமாக இருந்ததும் இந்த வர்த்தகக் கலாசாரம் தான்.

தாக்குதலுக்கு முன்னர் 35.00 ரூபாவாக இருந்த தேங்காயின் விலை தற்போது 20.00 - 25.00 க்கு வந்துவிட்டது. 10,000 வெற்றிலைகளை சந்தைக்கு எடுத்துச் சென்று, அதில் 3,000 வெற்றிலைகளை வெறும் 850.00 ரூபாய்க்கு விற்றுவிட்டு மீதி 7,000 வெற்றிலையையும் ஊருக்குள் கொடுத்துவிட்ட விவசாயி ஒருவரை நாத்தண்டியவுக்கு அன்மித்த கிராமத்தில் சந்தித்தேன்.

ஒரு நாளைக்கு 5,000 பாக்குகளை சீவல் செய்த தெரனியகலையைச் சேர்ந்த சிங்கள வியாபாரி ஒருவர் தனது வியாபாரத்தைத் தொடர முடியாமல் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு சீவல் தொழில்சாலையை (நேற்று ) மூடிவிட்டதாக தெரனியகலை தர்ம என்பவர் கூறினார்.

இந்த உதாரணங்கள் அனைத்தும் உண்மையானவை. சவால் விடுவோரை குறித்த வியாபாரிகளிடம் நேராக அழைத்துச் செல்வேன். இவை தனிமைப்பட்ட சம்பவங்கள் அல்ல. கிராமங்களின் தோன்றியுள்ள பொதுவான நிலைப்பாடு இதுதான்.

இலங்கையின் மஸாலாப் பொருட்களில் 85% சேருவது இப்றாஹிமுக்கு. கண்டி, மாத்தளை, குருனாகல், மஹியங்களை, பதுலை போன்ற பிரதேசங்களில் இருந்து மஸாலாப் பொருட்களின் மொத்த கொள்வனவு கடுகஸ்தொடையில் அமைந்துள்ள இப்றாஹிமுடைய தம்பியின் வர்த்தக நிலையத்தை வந்தடையும். இன்று அந்த கடை மூடப்பட்டுள்ளது. பெருட்களை எவரும் பொறுப்பேற்பதில்லை. இப்றாஹிம் தனது வியாபாரத்தை நிறுத்தியுள்ளதால் கொழும்பிலுள்ள ஏனைய மொத்த கொள்வனவாளர்கள் ‘அடி மாட்டு விலைக்கு’ வாங்குகின்றார்கள். இதன் காரணமாக மஸாலா சேகரிப்பு நின்றுவிட்டது. விற்பனைக்கு தயார்படுத்திய மஸாலாப் பொருள் வீடுகளில் அழுகுகின்றது.

வெளியில் தெரியாவிட்டாலும் இந்த நெருக்கடி மிகவும் பயங்கரமானது. அது எந்தளவுக்கு பயங்கரமாகுமென்றால், 2001 இல் நடைபெற்றது போல் பொருளாதார வளர்ச்சி வேகம் பூஜ்யத்தை விட கீழிறங்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் 2.5% வெகு சொற்ப வளர்ச்சியை அடைந்த நாடொன்று இந்த வீழ்ச்சியைத் தாங்கிக்கொள்ளாது.

மறுதலையாக, கழிவறை மட்பாண்டம் மற்றும் டைல்ஸ் பிடிக்கும் மேசன் பாஸ்மாருக்கு முஸ்லிம் வியாபாரப் புறக்கணிப்பினால் தொழில்கெட்டுப் போயுள்ளது. திஹாரிய, நாவல ஆகிய பிரதேசங்களுக்கு கழிவறை உபகரணங்களை மொத்தமாக இறக்குமதி செய்வோர் முஸ்லிம் வியாபாரிகள் ஆவர்.

நினைத்தால் செய்ய முடியாதது எதுவுமில்லை என்று கூறும், வர்த்தகத்தை மேலோட்டமாக் காணும் ஒருவர் ‘சிங்களவர்களாகிய நமக்கு இவற்றை வாங்கி எக்ஸ்போர்ட் பன்ன முடியாதா?’ என்று நினைக்க தோன்றலாம். ஆனால் யதார்த்தம் அதுவல்ல.

‘தெரிந்து செய் வியாபாரம் - தெரியாமல் செய் விவயாசம்’ என்ற முதுமொழி உருவானது இதனால்தான். திட்டமிடல் இல்லாமல் மேற்கொள்ளப்படும் எந்தவொரு வியாபார முயற்சியும் இறுதியில் முடிவடைவது 1994 - 96 ஆம் ஆண்டுகளில் ‘சிங்கள வீர விதஹன’ அமைப்பு நெல் வாங்கியது போன்று கையால் போட்டு திண்டதுதான் மிச்சம் என்ற நிலைக்குத்தான்.

சிங்களத்தில் Gnanendra Pradeep Pathirana
தமிழில் Hisham Hussain, Puttalam
________________________________________________
இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளதை வாசித்து மனதில் பதித்து, முஸ்லிம் வர்த்தகப் புறக்கணிப்பு யதார்த்தமானது அல்ல என்பதை உங்கள் சிங்கள மொழிமூல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள உதவியாக இருக்கும், இன்ஷாஅல்லாஹ்

7 comments:

  1. Muslim கள் மட்டும் இல்லாவிட்டால் பொருளாதாரம் நாறி விடும் என அவர்களுக்கு இன்னும் சில மாதங்களில் புரியும்.உள் நாட்டு உற்பத்தி குறிப்பாக விவசாயம்,விலங்கு உற்பத்தியில் அதிகம் ஈடுபடுவது அவர்கள் ஆனால் சந்தைக்கு இறுதி நுகர்வுக்காக வழங்கும் இறுதி கட்ட ஆனால் முக்கியமான வினியோகம்,சந்தை எனும் வியாபாரத்தின் மையப்புள்ளி Muslim கலின் கையில் எனவே மையப்புல்லியை நிராகரித்தால் உற்பத்தியாளர் பாதிக்கப்படுவார்,உற்பத்தி தேங்கும்.உர்பத்தியாலரிடம். தங்கி வாழ்ந்த தொழில் படை செயலிலக்கும் நம் நாட்டில் கூலித் தொழில் செய்யும் வர்க்கம் பாதிக்கப்படும்,வருமானம் இழக்கும்.எனவே உள் நாட்டு சந்தை செயலிலந்து முடக்கப்படும் போது,அது நேரடியாக உள் நாட்டு உற்பத்தி எனும் மிகப் பெரிய நிதி பாய்ச்சலை முடக்கும் போது அது பங்குச் சந்தை முதல் உள் நாட்டு பல் தேசிய கம்பனி,வெளி நாட்டு நேரடி முதலீடு வரை தாக்கும்.மெல்ல மெல்ல வெளி நாட்டு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் இருந்து வெளியேறும் போது விளங்கும் இப்போது Muslim களின் வியாபாரத்தை நிராகரிக்க மக்களை தூண்டுவர்கலுக்கு,எப்போதும் நிதி பாய்ச்சல்,கொள்வனவு,ஆரம்ப பொருளை நுகர்வுக்கு தயார்படுத்தல்,வினியோகம்,சந்தை,அனைத்தும் Muslim களிடம் 90% வீதம் ஏக போக போக உரிமை இருக்கும் போது,இனவாதிகலே உங்களின் முட்டாள் தனத்தை கொஞ்ஞம் சிந்தித்து பாருங்கள்,நீங்களே நாட்டின் பொருளாதாரத்துக்கு எதிரிகளாக மாறாதீர்கல்.

    ReplyDelete
  2. மாடுகளுக்கு பன்றிஇரத்த ஊசி போட்டால் , கிராம மக்களுக்கு இதே கதி தான்.

    ReplyDelete
  3. இது தற்காலிகமானது, நீண்ட காலத்தில் சிங்கள வியாபாரங்கள் வளர்ச்சியடைந்து விடும். எனவே சிங்களவர்களும் தமிழர்களும் முஸ்லிம் வியாபாரங்களை தவிர்ப்பது நாட்டுக்கு நன்மையே
    இதை வட-கிழக்கு தமிழர்களும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும்

    ReplyDelete
  4. சிங்கள மக்களின் வாழ்க்கை முறைக்கும் வியாபாரத்திற்கும் ஒத்துவராது 20 வருடங்களுக்கு மேலாக அவர்களின் தொழில்துறவுகளுடன் பின்னிப்பிணைந்து வாழ்கின்றவன் என்ற வகையில் என்னால் உறுதியாகக் கூறலாம். வியாபாரம் என்பது முஸ்லிம்களின் இரத்தத்துடன் கலந்த ஒன்று, முந்திச்செல்ல முடியாத பொறாமையின் பொருட்டு அதனை யாராலும் தட்டிப்பறித்து எடுத்துச்செல்ல முடியாது. கல்வியில் முந்திச்செல்ல முடியாத போது தமிழர்களின் கல்விவளங்களை அழித்தார்களே தமிழர்கள் முன்பைவிட வீறு கொண்டு எழவில்லையா? கல்வி அவர்களின் இரத்தத்துடன் கலந்த விடயம் அத்தோடு “தான்” என்ற பழுக்காத பெருமையும் கலந்து விட்டமை துரதிர்ஷ்டமானது.
    எனவே மிகவும் ஒழுக்கமான வியாபாரத்தினை ஆடம்பரமில்லாது அடக்கமாகச் செய்வதுடன் இலங்கையின் பொருளாதாரத்தினை அசைக்கும் சக்தியாக நாம் மாறலாம் மேற்படி கட்டுரையில் அது புலனாகிறது.
    கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்விச் சுற்றுலா நிமித்தம் கேரளா மாநிலத்திற்குச் சென்றிருந்தேன் மொத்த சனத் தொகையில் கால் பங்கே முஸ்லிம்கள் ஆனால் பாரிய வியாபார ஸ்தலங்கள் முஸ்லிம்களுக்குச் சொந்தமானதாகக் காணப்படுகிறது. ஒரு துணிக்கடைக்குச் சென்றோம் 31 பேர் கொண்ட குழுவில் இருவர் தான் முஸ்லிம்கள் கடையின் முகப்பில் பள்ளிவாசலின் அமைப்பும் போதாக்குறைக்கு ஒட்டகமும் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு ஏறக்குறைய 5000 தொழிலாளர்கள் வரை தொழில் புரிய வேண்டும் ஓரிருவரைத்தவிர ஏனையோர் முஸ்லீமல்லாதோர். இந்தியா பற்றி நான் அறிந்து வைத்திருந்த விடயத்துக்கும் கேரளா நிலவரமும் வேறுபட்டதாக உணர்ந்தேன். பொருளாதாரத்தில் பலம் பொருந்தியவர்களாக அவர்கள் இருப்பதால் கடைக்கு முன்னால் ஒட்டகத்தையே வைத்திருக்கிறார்கள். எம்மால் பயன்தரும் ஈச்சமரம் வைத்தால் வசை வருகிறது. இருந்தாலும் பாதைகளுக்கு அரபு மொழியில் பெயர் வைப்பது ஓவர்தான்

    ReplyDelete
  5. மாடுகளுக்கு பன்றி இரத்த ஊசி போட்டால் கிராமிய மக்களுக்கு இதே கதி தான்

    ReplyDelete
  6. So effect on one muslim businessman will affect hundreds of sinhalese people around him.it may result in increase of suicide rate in villages because of the poverty.

    ReplyDelete
  7. Suhaib: நான் உங்கள் ஊடாக ஒரு சின்ன விடயத்தினை நம் சகோதரர்களுக்கும் சொல்லி வைக்க விரும்புகின்றேன். நான் மூன்று வருடங்களுக்கு முன் இந்திய வடமாநிலத்திலுள்ள Bijinor என்ற City யில் ஒரு இந்து சகோதரரின் துணிக்கடைக்கு “சும்மா” சென்றிருந்தேன். எனது கையில் துணி வாங்கக்கூடிய அளவிற்கு போதிய பணம் அப்போது Pocket ல் இருக்கவில்லை. பொருள்களைப் பார்த்ததில் அதன் பெறுமதி இந்திய மதிப்பில் ரூபா 25,000 க்கு மேல் இருந்தது. 25,000 ரூபா பெறுமதியுள்ள அந்தப் பொருள்களை ரூபா 18,000 க்கு என்னை எடுத்துப் போகச் சொன்னார். தற்போது பணம் இல்லை என்று சொல்ல பிரச்சினை இல்லை “துஆ” செய்யச் சொன்னார். Mosque போய் திரும்பி வந்து பணம் கொடுத்தது வேறு விடயம். ஹிந்துக்கள் எவ்வளவு தூரம் முஸ்லிம்களுக்கும் அவர்களது துஆ விற்கும் மதிப்புக் கொடுக்கின்றார்கள் என்பது என் உள்ளத்தைக் குளிர வைத்து விட்டது. ஆனால் ஒன்று. இனங்களுக்கிடையிலான சமூக வாழ்வு என்பதும் அரசியல் வாழ்வு என்பதும் இரு வேறுப்பட்டவை. “மேலுள்ளதை” வைத்துக் குளம்பிப் போய்விடக்கூடாது. அதைத்தான் சொல்ல வருகின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.