Header Ads



காலி முகத்திடலில் தேனிலவு, கொண்டாடுவது போல உள்ளது - ஞானசாரர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட முன்னர் இது தொடர்பில் உளவுப் பிரிவினர் உரியவர்களுக்கு அறிவித்திருந்தனர். ஆனால் பாரிய தவறு எங்கேயோ நடந்திருக்கின்றது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

தற்போது அது கடந்த காலம். பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டுவிட்டன. அதனுடைய வேதனை அவர்களின் குடும்பத்தினருக்கே தெரியும்.

அந்த சம்பவத்தின் பின்னர் பாதுகாப்புத் தரப்பினர் நாடு முழுவதிலும் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு வருகின்றேன்.

இதன்போது அரசியல்வாதிகள் பலர் அழுத்தங்களை பிரயோகித்ததையும் நாம் அறிவோம்.

இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசியல்வாதிகள் ஒரு விபத்து என எண்ணியுள்ளனர்.

மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படவேண்டியவர்கள் உள்ளனர்.

இந்த சம்பவத்தில் மிகவும் சிறிய அளவிலான இரு குழுக்களே தடை செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு தரப்பினர் பாரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். எவ்வாறாயினும் இதில் பாரியளவில் அரசியல் தலையீடுகள் உள்ளன.

அனைத்து அரசியல்வாதிகளும் தமது பாதுகாப்பு தொடர்பில் ஒன்றாகவே இருக்கின்றனர். அவர்கள் தமது பணிகளை இணைந்தே செய்கின்றனர்.

மக்களுக்கு காண்பிக்க பொய்யாக பிளவுபடுகின்றனர். தற்போது இறுதியாக எமக்கு பல பிரதிபலிப்புக்களை காண முடிகின்றது. முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக முஸ்லிம் மக்கள் கூக்குரலிடுகின்றனர். நாம் கல்முனையில் கண்டோம் தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக தமிழ் மக்கள் கூக்குரலிடுகின்றனர்.

சிங்கள அரசியல்வாதிகளுக்கு எதிராக சிங்கள மக்கள் கூக்குரலிடுகின்றார்கள்.. ஆகவே இவையெல்லாம் எமக்கு ஒரு விடயத்தை கூறுகின்றன. அதனை நாம் புரிந்து கொண்டால் எல்லாம் சரியாகிவிடும்.

தற்போது அமைக்கப்பட்டுள்ள தெரிவுக்குழு தொடர்பில் நாங்கள் குழப்பமடைந்துள்ளோம். தெரிவுக்குழுவின் முன்னிலையில் இராணுவ அதிகாரிகளையும் பொலிஸாரினை அழைத்து விசாரணை நடத்தும் போது காலி முகத்திடலில் தேனிலவு கொண்டாடுவது போல உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. அது சரிங்க. ஒங்கள யாருங்க கல்முனைக்கு போகச் சொன்னா. மொதலில் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய அடிப்படை அரசியல் உரிமைகளைப் பெறுவதற்கு ஏதாவது செய்யுங்கள். சும்மா பூச்சாண்டி காட்டித் திரிய வேணாங்.

    ReplyDelete

Powered by Blogger.