June 13, 2019

எனது சொந்த நிறுவனத்தை, அரசு கைப்பற்ற முடியாது - ஹிஸ்புழ்ழாஹ்

உண்மையில் எமது தாய் நாட்டில் உலகத்தரம் வாய்ந்த தனியார் பல்கலைக்கழகம் ஒன்றை நீண்ட கால வட்டியற்ற கடனுதவி அடிப்படையில் உருவாக்க ஹிஸ்புழ்ழாஹ் என்ற தனி மனிதரால் முடிந்திருக்கிறது.

அரசியல், கொள்கை வேற்றுமைகளுக்கு அப்பால் அனைவராலும் பாராட்டப்பட வேண்டிய பெரும் சாதனை இது .

இதற்கு சட்டவிரோதமாக நிதி சேகரித்தார் அல்லது முறைகேடு செய்தார் என்றவாறான குற்றச்சாட்டுக்கள் நிரூபணமானால் அதற்கான தண்டனையை அரசாங்கம் வழங்கட்டும்.

மாறாக ஒரு தனி மனிதர் முன்னெடுத்த சொந்த முயற்சியை வரலாற்றில் மழுங்கடிக்கச் செய்து அந்தத் தனியார் பல்கலைக்கழகத்தை அவ்வாறு மாற்ற வேண்டும், இவ்வாறு மாற்ற வேண்டும் , இவற்றுக்கு பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் சிலர் கூக்குரலிடுவதானது; புதிய தொழில்துறை முயற்சிகளில் தன்னம்பிக்கை இல்லாமையினால் ஏற்படும், பொறாமையினால் உருவாகும் காழ்ப்புணர்ச்சியேயன்றி வேறில்லை .

மேலும் , உலகத்தரம் வாய்ந்த இத்தனியார் பல்கலைக்கழகத்தை ஒரு முறையேனும் நேரில் பாா்த்து விட யாருக்குதான் ஆசை இருக்காது?

அந்த வகையில் அனுமதி மறுக்கப்பட்டும் விடாப்பிடியாக ''பெற்றிகலோ கெம்பஸ்'' வளாகத்திற்குள் சக பிக்குமாா்களுடனும், பாதுகாப்பு அதிகாரிகளுடனும் சென்று அதன் அழகையும், பிரமாண்டத்தையும் பார்வையிட்ட மதிப்புக்குரிய ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் அவர்களுக்கும் எமது பாராட்டுக்களும் நன்றிகளும்.

கரு மூலம்: Noor Mohamed Naleem

7 கருத்துரைகள்:

Dear Sir I do appreciate your valuable efforts to build up an university which is going to upgrade the name of our motherland Sri-Lanka. May it be a private university but to build a such a one you must have special talent. That Allah has given to you. I know you would have done every action according to the law. don't worry.

ivan kalla arankutti mattkelapppan
katankudi karan allarum ipudi thaan irkiringa

Masha Allah தெளிவான கருத்து....

நாட்டுநலன்,பொதுமக்களின் நலன் என்றபெயரில்,வெ ளிநாட்டுக் கடன்பெற்று கல்விக்காக முதலீடுசெய்யும் ஹிஸ்புழ்ழாவைப்போன்ற அரசியல்வாதிகளுக்கு இந்த நாட்டில் எல்லாவற்றுக்கும்மேல் இனவாதமும் பௌத்தவாதமும் தலைவிரித்தாடுவது என்னதெரியாதா? இதுபோன்ற பலகோடி ரூபாக்கள் முதலீடுசெய்து ஏன் இலங்கையில் கல்வி நடவடிக்கையை ஆரம்பிக்கவேண்டும். இது ஆரம்பித்தபோது இந்தநிலைமை நிச்சியம் வரும் என நாம் எதிர்பார்த்தோம். இனி நிச்சியம் கிழக்கில் இந்த கல்வி நிறுவனத்தைத் தொடரமுடியாது என்பது தான் உண்மை. வெளி உலகில் நாட்டின் முதலீடு பொதுமக்களின் நன்மைக்காக கல்வி முன்னேற்றத்துக்கு என்ற போர்வையில் அவருடைய சொந்த குடும்ப வியாபாரமாக, பிள்ளையின்பேரில் கல்வி வியாபாரம் செய்வதை மறைமுகநோக்கமாக வைத்து இயங்கிய ஹிஸ்புழ்ழாவுக்கு இதுவும்வேண்டும் இன்னமும்வேண்டும்.

சிங்கலவனை விட தமிழருக்கு உள்ள பொறாமையை பார்க்கும் போது சிரிப்பாக உள்ளது.Sri Lanka வில் Muslim களிடம் வேலை செய்யாவிட்டால்,அல்லது எமது Muslim கிராமங்களுக்குல் கூலித் தொழில் முதல் சக்கிலி தொழில் வரை இல்லாமல் போனால்,உன்பதுக்கு உனவு கூட கிடைக்காது.அதுக்குல்,.....சிரிக்கத்தான் தோனுது

றிசாத். இது நல்லாயிலை.நல்ல பண்பா எழுதுங்கள்.நன்றி.

ஹிஸ்புல்லாஹ் சேர் அவர்கள் தம்முடைய பெருமுயற்சியினால் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தை அரசின் அனுமதியுடன் மட்டக்களப்பில் இலங்கை மாணவர்களுக்காக அரச நிறுவனங்களின் அனுமதிபெற்று நிர்மாணித்துள்ளார். இங்கு மற்றவர்கள் சொல்வதுபோல் இஸ்லாத்துடன் இணைந்து செல்லக்கூடியவிதமாக எந்த கற்றல்துறைகளும் இல்லை என்பதனை நிறுவனரே தெட்டத்தெளிவாக விளக்கிக் கூறியுள்ளார்கள். பாதுகாப்பு மற்றும் வேறு தேவைகளுக்காக ஒரு வளாகம் திறக்கப்பட வேண்டுமாக இருந்தால் வேறு பிரதேசங்களில் கோடிக்கணக்கான ஏக்கர் பிரதேசங்கள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதற்கு யாரும் இடையூறு விளைவிப்பர் என்று நான் நினைக்கவில்லை.

Post a comment