Header Ads



ஜனாதிபதி மேற்கொள்ளப்போகும் தீர்மானம் எனன..?

எதிர்ரும் ஜனாதிபதி தேர்தலின்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் அநீதி இழைக்காதவகையில் புதிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மகளிர் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சிமன்ற பெண் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சிதரும் வகையில் வலுவான அரசியல் வேலைத்திட்டத்தின் ஊடாக கட்சியை முன்னெடுத்து செல்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டின் பொதுமக்கள் மற்றும் தாய்மாரின் கட்சியாக கருதப்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுவூட்டும் செயற்பாடுகளின்போது பெண் பிரதிநிதிகளுக்கு விசேட கடமைகள் வழங்கப்படுவதுடன், நிகழ்கால சமூக சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு நல்லதோர் சமூகத்தினையும் நாட்டையும் கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பு வழங்குவது அவர்களது கடமையாகும்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.