Header Ads



முஸ்லிம்கள் மீதான வன்முறைகளை, வைத்துக்கொண்டு அரசை கவிழ்க்க முயற்சி - ரணில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள், முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைகள் மற்றும் முஸ்லிம் அமைச்சர்களின் பதவி துறத்தல் ஆகியவற்றை வைத்து கொண்டு அரசை கவிழ்க்கும் சதி முயற்சியில் சிலர் இறங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்துள்ள பாதுகாப்பு பிரிவினர், தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை, நாடாளுமன்ற தெரிவுக்குழுவும் தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களையடுத்து முஸ்லிம் சமூகத்தினர் மீது சில கும்பல்கள் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டதுடன், முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் மீது குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைத்தே முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவிகளை தற்காலிகமாக துறந்துள்ளனர்.

எனினும், அவர்கள் அரசுக்கே ஆதரவை வழங்கி வருகின்றனர். அவர்களை அரசிலிருந்து எவரும் பிரித்தெடுக்க முடியாது. அவர்களும் ஆட்சியை கவிழ்க்கும் சதி முயற்சிகளுக்கு துணைபோக மாட்டார்கள் என கூறியுள்ளார்.

3 comments:

  1. ஒரு சிலர் ஒரு சிலர் எண்டா ஆரா ஒபேயால் அந்தே ஒருசிலர் செல்லுங்கோலன் டா !!

    ReplyDelete
  2. Mr. Ranil, can you say who is one of some once. You must tell true. You may know these ISIS thugs gardians. You also protector of Mr. Gotha.

    ReplyDelete

Powered by Blogger.