Header Ads



சமல் ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்க, முக்கிய அரசியல்வாதிகள் இணக்கம்

பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் சமல் ராஜபக்ஷவானால் எமது முழுமையான ஆதரவை வழங்குவோம். அதேபோல் கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதென்றால் எம்மிடம் வெளிப்படையாக அதனை தெரிவிக்க வேண்டும். கோத்தாபய ராஜபக்ஷவுடன் பேசிப்பார்த்து எமது நிலைப்பாட்டுக்கு ஏற்றால்போல் இருந்தால் அவரை ஆதரிப்போம் என பிரதான எதிர்க்கட்சியின் சிரேஷ்ட  உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறு இருப்பினும் இன்றுள்ள அரசியல் நெருக்கடிகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பற்ற சூழலில் உடனடியாக தேர்தல் ஒன்றுக்கு சென்று மாற்று அரசாங்கம் ஒன்றினை உருவாக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.  ஜனாதிபதி - பிரதமர் இருவரும் ஒருவருக்கு ஒருவர் குற்றங்கூறிக்கொண்டு தனிப்பட்ட அரசியல் பளிவாங்களிகள் ஈடபட்டு வருவதால் இறுதியாக நாட்டுக்கே பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த ஆட்சியாளர்களை நீக்கி மீண்டும் எமது அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்ஷவா அல்லது சமல் ராஜபக்ஷவா என்ற தெரிவுகள் குறித்து அதிகம் கவனம் செலுத்தப்பட்டது வருகின்ற நிலையில் அவ்வணியின் சிரேஷ்ட உறுப்பினர்களான வாசுதேவ நாணயகார, தினேஷ் குணவர்தன, குமார் வெல்கம ஆகியோரிடம் வினவிய போதே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

1 comment:

  1. Why, No one out of Rajapakshas? is this kingdom of Sri Lanka, or DSR of SL? why not K.Welgama a good democratic?

    ReplyDelete

Powered by Blogger.