Header Ads



ஒரு தீவிரவாதியின் வாக்குமூலம் (வாசித்து, யதார்த்தங்களை உணரத் தவறாதீர்கள்)


தீவிரவாத சிந்தனைகளால் கவரப்பட்ட ஓர் இளைஞன், இமாம் முதவல்லியுஷ் ஷஹ்ராவியை சந்திக்கச் சென்றான். இமாமை நோக்கி அந்த இளைஞன் "இரவு களியாட்ட விடுதிகளை (Night clubs) குண்டுகளை வைத்துத் தாக்க வேண்டும்" என்றான்.

"சரி குண்டு தாக்குதலால் கொல்லப்படுவோரின் நிலை என்ன? என்று இமாம் அவர்கள் அவனிடம் கேட்டார்கள். அதற்கு அவன் "சந்தேகம் இன்றி அவர்கள் அனைவரும் நரகம் செல்வார்கள்" என்றான்.

"சரி அவர்கள் எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று சைத்தான் நினைத்திருக்கிறான்" என்று கேட்டார்கள் இமாம் அவர்கள்.

"அவர்கள் அனைவரையும் நரகிற்கு இழுத்துச் செல்வதே சைத்தானின் நோக்கம்" என்றான் இளைஞன்.

"அப்படியானால் உங்களது நோக்கத்திற்கும், ஷைத்தானின் நோக்கத்திற்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லையே? ஒரு மனித ஆத்மாவை நரகத்திற்குள் தள்ளுவதே உங்கள் இருவரதும் நோக்கம்" என்றார்கள் இமாம் ஷஹ்ராவி அவர்கள்.

ஒரு முறை நபிகள் நாயகம் ஸல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் முன் ஒரு குற்றவாளியின் ஜனாஸா எடுத்துச் செல்லப்பட்ட போது அன்னவர்கள் அழுதார்கள். அதற்கு நபித் தோழர்கள் "யாரஸுல்லாஹ் ஏன் தாங்கள் அழுதீர்கள்" எனக்கேட்டார்கள்? அதற்கு அவர்கள் எனக்கு முன்னாள் ஓர் ஆத்மா நரகம் செல்வதைக் கண்டு அழுகிறேன்" என்றார்கள்.

"இதுதான் உங்களுக்கும் ஸல்லல்லாஹூ் அலைஹிவஸ்லம் அவர்களுக்கும் இடையிலான வித்தியாசம். அன்னவர்கள் ஓர் உயிர் நரகம் செல்வதைக் கண்டு அழுதார்கள். ஆனால் நீங்களோ மனிதர்களை நரகத்திற்கு அழைத்துச் செல்வதற்கான வழிகளைத் தேடிக்கொண்டு மகிழ்ச்சியடைகிறீர்கள்" என்றார்கள் இமாம் அவர்கள்

இமாம் கலாநிதி முஹம்மத் முதவல்லியுஷ் ஷஹ்ராவி அஷ்ஷாதுலி (1911-1998)

Fazhan Nawas

2 comments:

Powered by Blogger.