Header Ads



பொய் சொல்வதற்கு இனி, அளவே இல்லையென்ற நிலைக்குச் சென்றுள்ளது - ஜனாதிபதி

இந்த நாட்டில் பொய் சொல்வதற்கு சிலருக்கு எல்லையே இல்லாமல் போயுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலன்னறுவையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இதனைக் கூறினார்.

இன்று தொலைக்காட்சியில் பார்த்தால், அரசியல்வாதியும், இன்னும் உள்ளவர்களும் உலகிலுள்ள அனைத்துப் பொய்களையும் கூறி ஏசிக் கொள்கின்றார்கள். ஒருவரை ஒருவர் தூற்றிக் கொள்கின்றார்கள். பொய் சொல்வதற்கு இனி அளவே இல்லையென்ற நிலைக்குச் சென்றுள்ளது.

நான் இன்று பத்திரிகையில் பார்த்தேன். இந்த நாட்டுக்கு வெளிநாட்டு இராணுவத்தைக் கொண்டுவரப் போவதாக முக்கிய தேரர்கள் சிலர் கூறியுள்ளனர். இந்த அரசாங்கத்திலுள்ள எவரும் வெளிநாட்டு இராணுவத்தை அழைப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நான் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருக்கும் வரையில், வெளிநாட்டு இராணுவத்துக்கு இந்நாட்டுக்குள் வருவதற்கு இடமளிக்கப் போவதில்லையெனவும் ஜனாதிபதி மேலும் கூறினார். DC

4 comments:

  1. பொய் சொல்பவர்கள். வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் என்ன? பயமாவது வருமே.

    ReplyDelete
  2. Like in western world, why don’t you create a press council to oversee and maintain balance reporting by media? This council handles all complaints with regard to fake news, publishing only one sided view etc.

    ReplyDelete
  3. அரசன் எவ் வழி மக்கள் அவ் வழி

    ReplyDelete
  4. Mr Prez,
    Could you tel us who is running this country is that you or you have outsource this duty to someone?

    ReplyDelete

Powered by Blogger.