Header Ads



"முஸ்லிம் அரசியல்வாதிகளை நிரபராதிகள் என அறிவித்தால், மீண்டும் அமைச்சர்களாக பொறுப்பேற்க தயார்"


அமைச்சு பதவிகளை மீண்டும் ஏற்றுக்கொள்வதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் நிபந்தனைகள் விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் முஸ்லிம் அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை விரைவில் விசாரித்து, நிரபராதிகள் என அரசாங்கம் அறிவிக்க வேண்டும்.

அவ்வாறு அறிவித்தால் பதவி விலகிய அமைப்பு பதவியை மீண்டும் பொறுப்பேற்க முன்னாள் முஸ்லிம் அமைச்சர்கள் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.

தங்கள் குழுவினர் மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பில் அனைத்து தரப்பினருக்கும் அறிவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சு பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் பிரநிதிகள் நேற்று மல்வத்து, அஸ்கிரிய பீடாதீபதிகளை சந்தித்தத பின்னர் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

5 comments:

  1. பதவி விலகிய அமைச்சர் ஐயாக்களே
    முஸ்லீம் சமூகத்தின் பாதுகாப்பு, இருப்பு பற்றி எந்த கோரிக்கையையும் முன் வைக்காது உங்களில் சிலரை உத்தமர்கள் என்று அறிவித்தால் மட்டும் போதும் மீண்டும் பதவியை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் உங்கள் பதவி விலகல் வெறும் பம்மாத்து நாடகம் தான் என்று தொட்டில் குழந்தைக்கும் புரியும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்

    ReplyDelete
  2. இவர்களுக்கு அமைச்சர் பதவி இல்லாமல் வாழ முடியாது போலுள்ளது.

    ReplyDelete
  3. அட பாவிகளா அப்ப அப்பாவி முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று சொல்லி அதுக்குத்தான் பதவி விலக்கினோம் என்று சொன்னது வெறும் கதையா? அதுதானே பார்த்தோம் நாய்வாலை நீட்ட முடியுமா.

    ReplyDelete
  4. Make sure all those Thugs Amuthrus are keep quiet and stop hate speeches.

    ReplyDelete
  5. விசாரணை செய்து நிரபராதி என்று சொல்ல வேண்டுமா, அப்ப ஒருவா்கூட குற்றவாளி என்று தீா்ப்பளிக்கப்பட்டால் நீங்கள் யாரும் பதவியேற்கமாட்டீா்களா பௌசி அவா்களே...... உங்களுக்கு மட்டும் எப்படி மூளை வேலை செய்கிறது.

    ReplyDelete

Powered by Blogger.