Header Ads



ஜனாதிபதித் வேட்பாளரை தெரிவுசெய்ய முடியாத நிலை, ஐக்கிய தேசியக் கட்சிக்கு

பிரபல அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தெரிவு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -19- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு என்ன நடந்துள்ளது. ஒவ்வொரு கூட்டங்களில் ஒருவருக்கு ஒருவர் யோசனைகளை கொண்டு வருகின்றனர். இவர்கள் எமது கட்சியின் வேட்பாளர்களை பெயரிடுகின்றனர்.

மயந்த திஸாநாயக்க கடந்த வாரம் சமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறினார். வேறு ஒருவர் ஷிரந்தி ராஜபக்சவை வேட்பாளர் என தெரிவித்தார்.

நாங்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்று காட்டிய அரசியல் கட்சி. இதனால், நாங்கள் இந்த கதைகளை பொருட்படுத்துவதில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி கட்சியின் தலைவரையே வேட்பாளரா நிறுத்தி வந்துள்ளது. டி.எஸ் சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க, சேர் ஜோன் கொத்தலாவல, ஜே.ஆர்.ஜெயவர்தன போன்றவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

கட்சியின் தலைவரே போட்டிக்கு வருவார். ஆனால், போட்டிக்கு வரும் தலைவரை தெரிவு செய்ய முடியாத கட்சியாக ஐக்கிய தேசியக்கட்சி மாறியுள்ளது. ஜே.ஆர். ஜெயவர்தன ஓய்வுபெறும் போது, கட்சியின் அடுத்த வேட்பாளராக பிரேமதாச என தீர்மானித்தார்.

இரண்டு முறை தமது தலைவரை வேட்பாளராக நிறுத்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு முடியாமல் போனது. நாங்கள் புதிய தலைவரை வேட்பாளராக நிறுத்த போகிறோம் என்று அமைச்சர் அஜித் பீ. பெரேரா கூறுகிறார். மேலும் சிலர் தாம் கூட்டணியாக போட்டியிடுவோம் என்று சொல்கின்றனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அப்படியான கட்சியல்ல. எமக்கு பலம் இருக்கின்றது. கொள்கை இருக்கின்றது. எமது தலைவர் யார் என்ற வேலைத்திட்டம் இருக்கின்றது எனவும் காமினி லொக்குகே குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.