June 05, 2019

"உங்கள் கரங்களில் படிந்திருக்கும், அழுக்கினை முதலில் கழுவுங்கள்"


கார்டினல் மல்கம் ரஞ்சித் ஈஸ்டர் தாக்குதலின் பின், அப்போதிருந்த கிறிஸ்தவ மக்களின் மனக் கொதிப்புக்கு தீனி வார்த்து , முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் போதும் முஸ்லிம்கள் மிக மோசமான பாதிப்பை எதிர் கொண்டிருப்பர்.

அப்படி கிறிஸ்தவ மக்களால் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை திரும்பாத, நடைபெறாத காரணத்தால்தான் நீர்கொழும்பில் மீண்டும் கலவரத்தினை தீமூட்டப் பார்த்தனர். அப்போதும் கார்டினல் மிகப் பொறுப்பான பணியை ஆற்றினார்."அதன் பின்பே இனி கிறிஸ்தவ மக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக திரும்ப மாட்டார்கள் , இனி தாமே களத்தில் இறங்கினால்தான் காரியமாகும் " என்கிற முடிவுக்கு வந்ததன் பின்புதான் மினுவாங்கொட,குருணாகல் பற்றி எரிந்தது.

முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நடாத்திய இலங்கை அரசுக்கு முண்டு கொடுத்து சிங்கக் கொடியையும் தூக்கிக் கொண்டு ஜெனிவா வரை , காவடி எடுத்தது இலங்கை முஸ்லிம் அரசியல் தலைமை , ஆன்மீக தலைமை ,புலம்பெயர் அமைப்புகள் . ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கூட்டுப் படுகொலை செய்த, இந்த தார்மீகமற்ற அன்றைய அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்தவர்கள் முதலில் பகிரங்கமாக மன்னிப்பு கேளுங்கள், முஸ்லிம் சமூகத்திற்குள் இருந்து கொண்டு இது தவறு என சொன்னவர்கள் , இந்த மக்களின் கொலைகளை ஆதரித்த ‘கும்பல்’ வெட்கித் தலைகுனியும் வரை இன்னும் இன்னும் சொல்லுங்கள் .

கார்டினல் கண்டி உண்ணாவிரத இடத்திற்கு சென்றது அரசியல் தவறுதான்.அதன் மீதான தார்மீக ரீதியான கேள்விகள் இலங்கை கிறிஸ்தவ சமூகத்திடமிருந்து உள்ளார்ந்து முதலில் வருதல் வேண்டும், வணபிதா நந்தன மனதுங்க(கண்டி) , மற்றும் கிறிஸ்தவ சமூகத்தினை சேர்ந்த பலர் இதனை பகிரங்கமாக கண்டிக்கின்றனர், அது மிக முக்கியமானது.

இலங்கை சிங்கள பௌத்த இன , மத அரசியல் கட்டுமாணத்திற்கு முஸ்லிம்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவர்களும் இலக்குத்தான். சிங்கள இனவாத அமைப்புகள் இலங்கையில் கிறிஸ்தவ மக்களுக்குமெதிரான பிரச்சாரத்தினை கொண்டிருக்கின்றனர். ஈஸ்தர் தாக்குதலின் பின் கிறிஸ்தவ மக்களை தந்திரோபாயமாக நேச சக்தியாக்கி, முஸ்லிம்களை தனி எதிரியாக்கி உள்ளனர். இந்த விடயத்தினை தான் கிறிஸ்தவ மக்களை நோக்கி நாம் சொல்ல வேண்டி இருக்கிறது.

இதை விடுத்து நேற்று கார்டினல் மல்கம் அவர்களை புகழ்ந்தும் இன்று இகழ்வதும் வெறும் மேலோட்டமான உணர்ச்சியின் பாற்பட்டதே. கார்டினல் கண்டி உண்ணாவிரத இடத்திற்கு சென்றது குறித்த முஸ்லிம் உணர்ச்சி கருத்துக்கள் கறாரான அரசியல் விமர்சனங்கள் என்றால் அது ஒரு சல்லிக் காசுக்கும் பெறுமதி அற்றது, ஒரு வகையில் அது முஸ்லிம் மக்களின் ஆதங்கம் என்றால் சற்று பொருட்படுத்தத்தக்கது.

முஸ்லிம் சமூக அரசியல் அரங்கிலிருந்து எழக்கூடிய அரசியல் , சமூக விமர்சனங்கள் ஒரு போதும் இரட்டை நிலைப்பாட்டுத் தன்மை கொண்டவையாக இனியும் இருந்து விட முடியாது என்பதற்காகவே இந்த இடத்தில் இதனை நாம் சுட்டிக் காட்டுகிறோம். தமக்கு என்று ஒரு விமர்சனப் பார்வையும், வெளியில் இருந்து நடப்பதற்கு மற்றுமொரு விமர்சனப் பார்வையையும் கொண்டிருப்பது மிக அபத்தமானது.

“அறிவுடையோருக்கு இது அத்தாட்சியாகும்”.

Fauzer Mahroof

9 கருத்துரைகள்:

தம்பி ஜெனிவாவை பற்றியும்,காவடி தூக்கியது வரை எலுதிய நீங்கள் மறந்துவிட்டீர்கல் 30 வருடங்களாக புலிகள் எமக்கு செய்த கொடுமையான கொலை,இனச் சுத்திகரிப்பை.அதனால்தான் ஜெனிவாவுக்கு காவடி தூக்கியது.தயவு செய்து இப்படி எழுத வேனாம்.இது புலிகளை நீங்கள் பரிசுத்தவாதிகலாக படம் பிடித்து காட்டுவது போல் உள்ளது.இறுதி யுத்தத்தில் கூட அப்பாவி மக்களை தடுத்து வைத்து புலிகள் மனித கேடயமாக பாவிக்க முயன்ரமைதான் அதிகமான தமிழ் அப்பாவிகலின் இறப்புக்கு முக்கிய காரணம்

வவேற்கக்கூடிய கருத்துக்கள்.

அவசியமான கருத்து பவுசார். 21.04.2019ன் பின்னர் வாசித்த மிக முக்கியமான விமர்சனம். முஸ்லிம் தரப்பில் இருந்து சுயவிமர்சனம் வருவதில்லையென்கிற பொதுவான கருத்து ஏனையோர் மத்தியில் இருக்கு. உண்மையில் விமர்சனம் சுயவிமர்சனங்களுக்கு சரிநிகர் போன்ற தளம் இல்லையென்பதே உண்மை. ஜப்னாமுஸ்லிமுக்கு எனது நன்றிகள்.

கார்டினல் ரஞ்சித் அவர்கள் மிகப்பெரிய பொறுப்பை தன்வசம் தாங்கும் உயர்ந்த மனிதர்.அவரை விமர்சிக்கும் அருகதை இங்கு எவருக்கும் கிடையாது.

@Rizard, புலிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள பிரச்சனைகளில் சதாரன தமிழர்களுக்கு சம்பந்தமில்லை. அதை நீங்கள் புலிகளிடம் தான் கேட்கவேண்டும். நம்மிடமில்லை.

அப்படியென்றால், ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலுக்கும் சகல முஸ்லிம்களும் பொறுப்பு என சொல்லவருகிறீங்களா?

ஜெனிவா தீர்மானம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களாக்கானது, புலிக்களுக்கானது அல்ல.
மகிந்தவுக்கு காக்கா பிடிப்பதற்காக, ஜெனிவா வுக்கு காவடி தூக்கிய முஸ்லிம் அரசியல்வாதிகள் கடைசியில் அடைந்த நன்மைகள் என்ன?
தற்போதய தமிழர்களின் கோபத்தை சம்பாதித்தது தான் மிச்சம்கர்தினால் ரஞ்சித் அவர்கள் ஒரு மனிதர். அதனாற்றான் அவர்களால் அப்படி எல்லாம் மனித நேயத்தை புடம் போட்டுக் காட்ட முடிகின்றது.

Yes I agree with that Geneva visit by Jamiathul Ulama is grave Mistake and created big problem for Srilanka Muslims and Muslim countries and grave injustice to Tamil People. What we achieve by that is hostility from every corner, from Tamils,western countries,UNO and America. Jamiathul Ulama destroyed our existence by involving politics and become stooge of politicians.

Cardinal is suspecting Muslim ministers involvement in the bomb blast. That's the reason he went to see Rathna thero. That's why he keeps saying that he is not happy with the investigation so far.

அவர் ஏன் இப்படி செய்திருக்க கூடும் என்பதற்கு பல காரணங்களை யூகிக்க முடிகிறது.மேலோட்டமாக பார்க்காமல் சற்று அறிவுபூர்வமாக சிந்தித்தால் புரியும்.

Post a Comment