June 03, 2019

மஸாஹிமா விடுதலையானார் - நீதிபதியிடம் வாங்கிக்கட்டிய பொலிசார் (படம்)


இன்று (03.06.2019) தர்மச்சக்கர வழக்கு மஹியங்கனை நீதவான் A.A.P.லக்‌ஷ்மன் முன்னிலையில் விளக்கத்திற்கு எடுக்கப்பட்டது.

பொலிசார்:-புத்தசமய அலுவல்கள் ஆணையாளருக்கும் தரநிர்ணய சபைக்கும் அனுப்பப்பட்ட ஆடையிலுள்ள வடிவத்தை ஒப்பிட்டு நோக்குவதற்கு தங்களிடம் சரியான தர்மச்சக்கரத்தின் வடிவம் இல்லை என்கிறார்கள்.ஒவ்வொருவரும் ஒவ்வொரு வடிவத்தைச்சொல்வதால் நாம் சரியான முடிவுக்கு வரமுடியாமலிருப்பதால்ஆடையின் வடிவம் தொடர்பான இறுதி முடிவை எடுப்பதற்கு குறிப்பிட்ட இரு தரப்பினரும் தர்மச்சக்கரம் தொடர்பான சட்டமா அதிபரின் பரிந்துரையை எதிர்பார்த்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

நாம்: சட்டமா அதிபரின் வேலை வழக்கை தொடர்ந்து நடத்துவதா? இல்லையா? என முடிவெடுப்பதே!

குறிப்பிட்ட ஆடையிலிருக்கும் வடிவம் தர்மச்சக்கரமா ? இல்லையா என முடிவெடுப்பது புத்தசமய அலுவல்கள் ஆணையாளரே!

பொலிசார்:- எவராலும் முடிவெடுக்க முடியாத ஒரு விடயமாக இது இருப்பதால் எமது உயர்அதிகாரிகள் எல்லோரதும் முடிவின் படி B அறிக்கையை திருத்தி பாரதூரமான ICCPR சட்டத்தின் பிரிவு குற்றமாகிய இனமுறுகல் குற்றச்சாட்டை நீக்கி சாதாரணமான தண்டணைச்சட்ட கோவையின் பிரிவு 291 B கீழ் மத நிந்தனை குற்றம் புரிந்ததாக இன்று மன்றில் அறிக்கையிடுகிறோம்.

நாம்:- (கடந்தவழக்குத்தவணையின் போது நாம் வைத்த வாதங்களை சுருக்கமாகவிபரித்ததுடன் )தண்டணைச்சட்டக்கோவையின் பிரிவு 291 (B) ன் கீழான தவறானது பிணையில் விடக்கூடிய தவறு என்பதால் சந்தேக நபரை பிணையில் விடும்படி வேண்டிக்கொள்கிறோம்.

எமது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான் (வழக்கு தொடுனர்கள் மீது நாமும் உலக மக்களும் வைத்திருந்த அதிர்ப்திகள் அனைத்தையும் சுமந்த வார்த்தை பிரயோகங்களை ஹசலக பொலிசாரை நோக்கி காரசாரமாக அள்ளிவீசியதுடன்)ஆடையிலிருக்கும் வடிவம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக வழக்கை எதிர்வரும் 04/11/2019 திகதி ஒத்தி வைத்து மஸாஹிமாவை பிணையில்விடுதலைசெய்தார்

.அல்ஹம்துலில்லாஹ்!

கொழும்பில் வசிக்கும் நாம், அல்லாஹ்வின் திருப்பொறுத்தத்தை மாத்திரம் எதிர்பார்த்து இந்த வழக்கை பொறுப்பெடுத்த போது பலரின் அச்சுறுத்தல்களுக்கும் கேலிப்பேச்சுக்களுக்கும் ஆளாகினோம்.

புண்பட்டிருக்கும் எமது உள்ளங்களின் ரணங்களை மஸாஹிமாவினதும் அவரது உறவினர்களின் கண்களிலிருந்து வந்த ஆனந்த கண்ணீர் சுகப்படுத்திய சந்தோசத்துடன் நானும் எனது மனைவி நுஷ்ராவும் மஹியங்கனை நீதிமன்றை விட்டு வெளியேறினோம்.

சட்டத்தரணி சறூக் - 0771884448

32 கருத்துரைகள்:

உங்களுக்கேற்பட்ட மன ஆறுதல் தான் உங்கள் வாழ் நாள் நீடிப்புக்கு மருந்து. வாழ் நாளை நீடிக்க மருந்து இல்லை என்கின்றனர் அது பொய்.

Mr. Zarook, You’ve lots more to do for our society. Please also consider eliminating the roughs and culprits who are ruining our community in the name of Islam. We’ll be with you for any good cause.

அல்லாஹ் உங்கள் பணிகளை ஏற்றுக்கொள்வானாக...

Allah SWT forgive your sins and give you Jannathul firdaws. May Allah strengthen your efforts and Accept your good deeds.

masha allah.may allah bless u and ur family

Masha Allah
god bless both of you and your family

MAY ALLAH HELP YOUR ALL STEP

Masha Allah...pls be United..

சட்டத்தரணி சறூக் தம்பதியினருக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக. சரியான தர்மச்சக்கரம் எது என்று புத்த சமய அலுவல்கள் ஆணையாளருக்கும் தர நிர்ணய சபைக்கும் போலீசுக்கும் அரசாங்கத்திற்கும் தெரியாத நேரத்தில் அப்பாவி மஸாஹிமாவுக்கு எப்படி தெரியும். அது சரி.. தர்மச்சக்கர உருவமே எது என்று தெளிவில்லாதபோது மஸாஹிமாவை சாதாரண தன்னடனை கோவையில் கூட வழக்கு பதிய முடியாதே.

அன்புக்கும் மரியாதைக்கும் உரிய சட்டத்தரணி, ஸரூக், நுஸ்ரா அவர்களே உங்கள் புனிதமான பணிக்கு அல்லாஹ் ஆயிரமாயிரம் மடங்கு கூலி வழங்க வேண்டும் என இந்த புனிதமான நாளில் இரு கரமேந்திப் பிரார்த்தனை செய்கின்றோம். அல்லாஹ் மென்மேலும் உங்கள் அறிவையும் ஈமானையும் இருவரினதும் பாதுகாப்பையும் பலப்படுத்துவானாக. ஆமீன்

Welcome sir Alhamdulillah

Thanks for your valuable service

alhamdu lillah. i was waiting for this news from morning. brother zarook, i am not going to say thanks or anything. reward for you and your wife is with Allah.

WE APPRECIATE MR and MRS ZAROOK , YOUR VALUABLE FREE AND DEDICATED LEGAL SERVICE FOR A POOR LADY. ALLAH WILL BLESS YOU AND YOUR FAMILY

ஜசகல்லஹுஹைர் உங்களுக்கு

கோடி நன்றிகள்..

I am speechless sir!
Next generation has a good example in the society.

Thanks Mr. zarook our society must need your services. Ya Allah protect Mr. Zarook and same as your co lawyers.

அல்லா உங்கள் சேவய பொருந்திக் கொள்வாணாக மேலும் உங்கள் ஆயுளய் நீளமாக்குவானாக

May Almighty Allah Bless you all for your great afford.

அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அருள்பாலிப்பானாக.

சட்டத்தரணிகளுக்கு எமது மனமார்ந்த நன்றிகள் இறைவன் உங்களை பொருந்திக் கொள்வானாக மேலும் இந்த வழக்கு எமக்கு சாதகமாக முடியும் போதும் இவர்களுக்கு எதிராக மான நஷ்ட ஈடு வழக்கினை நாம் போடவேண்டும் கண்டிப்பாக இதனை போட்டு பாதிக்கப்பட்டவர்களின் மனது குளிரும் வழியாக நல்லதொரு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

May Allah grant you both success in this world and the next.
'Walasawfa yuAAteeka rabbuka fatarda'

And your Lord is going to give you, and you will be satisfied.

BARAKALLAHU NLAKUM. YOU BOTH NEVER FAILURE BOTH WORLD INSHA ALLAH

Post a comment