Header Ads



இனவாதிகளின் தாக்குதல்களை முறியடிக்க ஓரு ஆலோசனை - பாங்கோசைகளை பாதுகாப்பு கேடயங்கள் ஆக்குவோம்


ஜூலை 5 ஆம் திகதி 2016 .

பின்னிரவில் தொழுகைகளை முடித்துவிட்டு  மக்கள் தூங்குவதற்கு சென்ற நேரம் .

துருக்கியின் முக்கிய நகரங்களை இராணுவத்தின் ஓரு பகுதியினர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள் .துருக்கிய பாரளுமன்றம் முற்றுகையிடப்படுகிறது துருக்கிய ஜனாதிபதி மாளிகை குண்டு வீசப்பட்டு தாக்கப்படுகிறது . துருக்கி இன்னொரு இராணுவ புரட்சியின் எல்லைக்கு தள்ளப்பட்ட நேரம் .

திடீரென அங்குள்ள பள்ளிவாசல்களில் பாங்கு ஒலிக்கப்படுகின்றன . மக்களுக்கோ ஆச்சரியம் .! இஷாவுக்கான  அதான் சொல்லப்பட்ட பின் பஜ்ருக்கு இடையில் ஏன் இன்னொரு அதான் ? 
ஏதோ  இக்கட்டான நிலை என எண்ணிய மக்கள் வீதிகளுக்கு இறங்குகிறார்கள் .

இராணுவ சதியில் ஈடுபட்டவர்களுக்கு  அடிவயிறு கலங்குகிறது .ஓரு பக்கம் அர்தூகானுக்கு ஆதரான இராணுவம், மறு பக்கம் மக்கள் வெள்ளம் .படுதோல்வி காணுகின்றது அந்த இராணுவ சதிப்புரட்சி .

சரி இப்போது வெலிகமையில் உள்ள கொட்டாகொட  பகுதிக்கு  கொஞ்சம் போவோம் ..

2019 ஜூன் மாதம் 3 ஆம் திகதி திங்கள் அதிகாலை இரண்டுமணி . முஸ்லிம் பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடாத்த இனவாத காடையர் குழு ஒன்று திட்டமிட்டு கிராமத்தின் எல்லைக்குள் நுழைகிறது . பள்ளிவாசலில் ஊர் மக்களை எச்சரிக்க அசாதாரண நேரத்தில் பாங்கோசை ஒலிக்கப்படுகிறது.

நேரம் தவறி ஒலித்த பாங்கோசை ஊரிலே உள்ள முஸ்லிம் இளைஞர்களை விழிப்படைய வைக்கிறது. வீதிகளுக்கு ஒன்று திரண்டு வரும் முஸ்லிம் இளைஞர்களை அந்த நேரத்தில்  எதிர்பார்க்காத  காடையர் குழு வந்த நோக்கத்தை நிறைவேற்ற முடியாமல் பின் வாங்குகிறது .

மேலுள்ள இரு சம்பவங்களும் இக்கட்டான
சூழ்நிலைகளில் பங்கோசை ஊர் மக்களை விளிப்படைய வைத்ததை அவதானிக்கலாம் ..

சரி விடயத்துக்கு வருவோம் ..
இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் முடிவுக்கு வரும் என்பதும்  போலீஸோ இராணுவமோ ஊரடங்கு சட்டத்தின் போது நம்மை  பாதுகாக்கும் என்பதும் கைவிடப்பட நம்பிக்கைகள். 

நாட்டின் சட்டம், ஒழுங்கு ,பொலீஸ், இராணுவம்  அதன் மக்களை பாதுகாக்க தவறுகிற பட்சதில் நம்மை, நமது மனைவி மக்களை ,உற்றார் உறவினர்களை , சொத்துக்களை ,பள்ளிவாயல்களை ,ஊர்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமை ஆகின்றது .அவ்வாறான தற்பாதுகாப்பு முயற்சியின் போது உயிரிழந்தவர்கள்  மிக மேலான ஷஹீத் அந்தஸ்தை பெறுகிறார்கள் .

பாசிச புலிப்பயங்கர வாதிகளின் காலத்திலே கிழக்கு முஸ்லிம்கள் ஊர்காவல் படை என்கிற பெயரில் எடுத்த முயற்சிகள் அவர்களின் ஊர்களை ,பள்ளிகளை , சொத்துக்களை ஏன் முஸ்லிம் பெண்கள் குழந்தைகளின் உயிர்களை அல்லாஹ்வின் நாட்டத்தில் பாதுகாக்க உதவியது .

அதே சூழ்நிலையை வேறொரு வடிவதில் 
இன்று எதிர்நோக்கியுள்ளோம் . இந்த சூழ்நிலையை திறன்பட எதிர்நோக்க வேண்டுமானால் பள்ளிகள் திறன்பட ஒருங்கிணைப்புடன் இயங்க வேண்டும் ..
நேரம் தவறிய நேரத்தில் பாங்கோசை ஒலிக்கப்படுவதானது ஊர் நெருக்கடியான அசாதாரண சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது என்பதையும்  அந்த சூழ்நிலையில் முஸ்லீம் இளைஞர்கள்  வீதிக்கு வந்து ஒன்று சேரவேண்டும் என்பதை ஒவ்வொரு பள்ளிவாயல்களும் அதன் மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் .

அத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளிவாயல்கள் மிக நெருங்கிய தொடர்புகள் ,தொடர்பாடல் கொண்ட நிலையில் இயங்க வேண்டும் . உதரணமாக களுத்துறை மாவட்ட பள்ளிகள் கூட்டாக ,நெருக்கமாக இயங்க வேண்டும் .பேருவலையில் உள்ள பள்ளி ஒன்று தாக்கப்படுகிற போது தர்கா நகரில் உள்ள அல்லது மக்கோணவில் உள்ள பள்ளிகளுக்கு பாங்கு கூறி எச்சரிக்கையுடன் இருக்குமாறு உடனடி செய்திகள் பள்ளிவாசல் வட்டாரம் மூலமாக அனுப்பப்படல் வேண்டும் .

இவ்வாறான கூட்டான திட்டமிடலான இயங்குதல்கள் இனவாதிகளின் காடையர்களின் தாக்குதல்களின் அகோரத்தில் இருந்தது பாரிய அளவிலான சேதங்களில் இருந்து நம்மை பாதுகாக்க வழி வகிக்கும்

நம்மை நாம் மாற்றாத வரை நமது நிலைமைகளை அல்லாஹூ தஆலா மாற்ற மாட்டான்

-அய்யாஷ்-

10 comments:

  1. In sha Allah good idea brother

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ்......காலத்திற்கு ஏற்ற அறிவுரை. கட்டாயமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயங்கள். ஒவ்வொரு முஸ்லிம்களைப் பெரும்பான்மையாக கொண்ட ஊர்களிலும் உடனடியாக ஒரு நிரந்த திட்டமாக இதனை நடைமுறைப்படுத்த வேண்டும். கட்டுரையாளருக்கு நன்றி.

    ReplyDelete
  3. Was not the resigning of 8 Muslim ministers and 2 Muslim governers a "nadagamak" played by our "deceptive, hoodwinking and munaafikk" Muslim politicians? Were these Muslim ministers and governors trying to stage a "drama" for the media, especially the electronic TV media to hoodwink the muslim community. The Sri Lanka Muslim Community and its POLITICIANS should stand before a “MIRROR” and ask the question WHY muslims are treated like the way it is happening now? Let us face REALITY and the TRUTH (YATHAARTHAM).

    1. We Muslims are known for NOT leading the Muslim (Islamic Way of Life) bestowed by our belief and FAITH, leaving a handful, Insha Allah.
    2. We are (especially) the POLITICIANS) are NOT UNITED.
    3. We (especially the POLITICIANS) are DISHONEST, DECEPTIVE, SELFISH and CROOKED.
    4. Our dealings are NOT CLEAN with other Communities.
    5. We have BETRAYED the political leaders of the country who are so much loved by the MAJORITY SINHALA PEOPLE.
    6. We are ARROGANT and EXTRAVAGANT in our day to day life.
    7. We are SELF CENTERED and NOT COMMUNITY MIMDED.
    8. WE are OPPRTUNISTIC, especially in POLITICS. Our Muslim Politicians have back-stabbed the most loved Sinhala leaders like the former President after STOOGING to him and his siblings and politically destroyed them which the Buddhist, especially the Monks despite.
    9. We will “buy” anyone by our ill earned money power to get our things done, even against our community and its members.
    10. We practice the CULTURE of SMUGGLING and dealing in DRUGS as normal business though it is banned in ISLAM, and we think going to Mecca (making UMMRAH) purifies us from those SINS.

    The Bodu Bala Sena and the Anti-Muslim, Ant-Islam Buddhist Monk was made use by our Muslim unscrupulous POLITICIANS and Muslim businessmen to defraud the Haj Quota allocations few months ago. One of the Muslims is the brother of the “LOUD MOUTHED UNETHICAL POLITICIAN” who conspired with other groups to bring about a “change” to the Mahinda government and is now holding the post of Managing Director of the Sri Lanka Cement Corporation (SLCC) which is under the Ministry of Industries and Commerce. There are rumours that officials of the Sri Lanka Cement Corporation are been suspected of being involved in trying to release hundreds of acres of lands belonging to the corporation to the private sector under nefarious activities. So, GANESARA THERA KNOWS MORE ABOUT THE BAD THINGS ABOUT OUR COMMUNITY THAN OUR OWN COMMUNITY BECAUSE ALL FINANCIAL AND BUSINESS INFORMATION OF OUR MUSLIM BRETHEREN ENGAGED IN BUSINESS HAS BEEN REVEALED TO HIM AND THE BBS BY MUSLIMS OF THE ABOVE CALIBRE.
    The Resolution to the Muslim issues/Muslim Factor should be approached honestly without “STAGING POLITICAL DRAMAS” just to HOODWINK the Muslim voters/vote bank, Insha Allah.

    The Sri Lankan Muslim Community has to be "BRAVE AND ABLE" to accept the reality and start to bring about changes, Insha Allah.

    THIS IS WHY "THE MUSLIM VOICE" IS PRAYING IT IS TIME UP THAT A NEW POLITICAL FORCE THAT WILL BE HONEST AND SINCERE THAT WILL PRODUCE 'CLEAN' AND DILIGENT MUSLIM POLITICIANS TO STAND UP AND DEFEND THE MUSLIM COMMUNITY POLITICALLY AND OTHERWISE, ESPECIALLY FROM AMONG THE YOUTH/YOUNGER GENERATION HAS TO EMERGE FROM WITHIN THE SRI LANKA MUSLIM COMMUNITY TO FACE ANY NEW ELECTIONS IN THE COMING FUTURE, INSHA ALLAH.

    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

    (Note: These comments are NOT made as MALICE against any politician or political party. It is written to kindle the aspirations and inspiration of the Muslims of Sri Lanka, Insha Allah).

    ReplyDelete
  4. But ACJU will not allow, the will ask only to recite qunooth 5 times a day and stay inside homes.

    ReplyDelete
  5. வெலிகம விடயம் சற்று திரிபுபடுத்தப்பட்டுள்ளது. நான் இதனைப் பற்றி சற்று தேடிப்பார்த்தேன். அவர்கள் அன்று முஸ்லிம்களைத் தாக்க வரவில்லை. அருகில் சிங்களப் பிரதேசம் ஒன்றில் ஒரு மரண வீடு. அங்கு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலால் அடி வாங்கிய குழு அவர்களின் அடியாட்களை தொலைபேசி மூலம் அழைத்துள்ளனர். அது அவர்களுக்கிடையேயான பிரச்சினை. அதனை முஸ்லிம்கள் நம்மை தாக்க வருவதாக நினைத்து தயாராகியுள்ளனர். முஸ்லிம்களது உத்திகள் பிழை என்று சொல்ல வரவில்லை. ஆனால் இதுதான் நடந்ததுள்ளது.

    ReplyDelete
  6. இவ்வாறான சந்தர்ப்பங்களில் முழுமையாக அதான் சொல்லாமல் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்று தக்பீரை திரும்பத் திரும்ப ஒலிக்கச் செய்தால் இன்னும் துல்லியமாக செயல்பட முடியும் ஏனெனில் அதான் ஓசை கேட்டால் இறுக்கி போத்திக் கொண்டு படுப்பவர்களும் நம்மில் உண்டு

    ReplyDelete
  7. இவ்வாறான சந்தர்ப்பங்களில் முழுமையாக அதான் சொல்லாமல் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்று தக்பீரை திரும்பத் திரும்ப ஒலிக்கச் செய்தால் இன்னும் துல்லியமாக செயல்பட முடியும் ஏனெனில் அதான் ஓசை கேட்டால் இறுக்கி போத்திக் கொண்டு படுப்பவர்களும் நம்மில் உண்டு

    ReplyDelete
  8. Munafeeq Voice Still Writing /Nizam....
    Sorry Even Good We don't need it from a Munafeeq/Traitor.

    ReplyDelete
  9. TrueF is an "IDIOT" as already stated. People of knowledge have nothing to do with "IDIOTS".
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete

Powered by Blogger.