Header Ads



ஈஸ்டர் தாக்குதல் விசாரணை, குறித்து சந்தேகம் எழுந்துள்ளது

நாட்டில் கடந்த மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து சில சந்தேகங்கள் எழுவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளால்,  தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் தொடர்பில் உரிய முறையில் தகவல்கள் வெளிப்படுத்தப்படுமா? என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

அக்மீமனை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

இந்த தாக்குதல் பல ஆண்டுகளாக திட்டமிடப்பட்ட ஒரு வேலைத்திட்டத்தின் பிரதிபலனாகும். இது இலங்கையில் திட்டமிடப்பட்ட செயற்பாடா? அல்லது வெளிநாட்டில் திட்டமிடப்பட்டதா? என்பது தொடர்பில் குறிப்பிட முடியாது.

ஏனெனில் விசாரணை அறிக்கைகள் இதுவரை கிடைக்க பெறவில்லை.

இந்த நிலையில், விசாரணைகள் தொடர்பில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதால், சிலநேரங்களில் அது உரிய முறையில் இடம்பெறுமா? என்ற சந்தேகம் எழுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.