Header Ads



குற்றமே கண்டுபிடிக்கமுடியாத டொக்டர் சாபியை, குற்றவாளி என்கிறது அக்மீமன பிரதேச சபை


குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபிக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்து, அரசாங்கத்துக்கு அழுத்தம் தெரிவிக்கும் வகையில், அக்மீமன பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.கே. சுகத் உள்ளிட்டவர்கள் இன்று -18- காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

அக்மீமன பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களும் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

குறித்த வைத்தியர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ள நிலையில், அவரால் பாதிக்கப்பட்ட தாய்மாருக்கு நட்டஈடு வழங்குமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் வைத்தியர் ஷாபிக்கு எதிராக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்  இந்திக நவரத்னவால் பிரதேச சபையில் முன்வைத்த யோசனையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் அனில் பிரியதர்சன உறுதிப்படுத்தியுள்ளார்.

2 comments:

  1. கூட வேலை செய்யும் சக வைத்தியர்கள்,தாதிகள் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என சாட்சியம் அளித்திருக்கும் போது,இந்த முட்டாள்கலுக்கு அடுத்த முறை,தேர்தலில் வாக்கு வேண்டும்.அதுதான் இப்படியான கேவலமான ஆர்ப்பாட்டம்.ஆனால் மக்களை இவர்களால் முட்டாலாக்க முடியாது,அதுதான் எந்த பொது மக்களும் அங்கே இல்லை,அவர்களின் ஆர்ப்பாட்டத்தை பார்ப்பதர்கே பரிதாபமாக உள்ளது.

    ReplyDelete
  2. அரசியல் பிச்சைக்காரர்கள்

    ReplyDelete

Powered by Blogger.