Header Ads



பௌத்த துறவி நினைத்தால், முஸ்லிம்களுக்கு எதிராக எதனையும் செய்யலாம்...!

இலங்கையில் இன்று இடம்பெற்ற சம்பவம் சிறுபான்மை மக்களுக்கு எச்சரிக்கை விடும் தகவலாகவே அமைந்துள்ளது.

பௌத்த சித்தாங்களின் அடிப்படையில் ஆட்சியாளர்கள் செயற்படுவதால் பௌத்த துறவி நினைத்தால் எதனையும் சாதிக்க முடியும் என்பதே இன்றைய சம்பவம் நிகழ்த்தி நிற்கின்றன.

இன்று அசாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டமை, முஸ்லிம் மக்களுக்கு எதிரானது மாத்திரமல்ல. இதுபோன்றதொரும் சம்பவம் நாளை தமிழர்களுக்கும் நடக்கும் என்பதை பறைசாற்றுகின்றது.

கடந்த காலங்களை பெரும்பான்மை சமூத்தினர் தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆட்சி செய்ய முற்பட்டனர். எனினும் விடுதலைப் புலிகள் எனும் பாரிய தடுப்பு சுவரினால் அது சாத்தியமற்றதாக காணப்பட்ட போதும், 30 ஆண்டுகளின் பின்னர் இன அழிப்பினை மேற்கொண்டு தமது எண்ணங்களை நிறைவேற்றிக் கொண்டனர்.

சமகாலத்தில் முஸ்லிம் மக்களை சீண்டி விட்டு, மற்றொரு வன்முறைகளை முன்னெடுக்க திட்டமிட்டு வருகின்றனர்.

எனி வரும் காலங்களில் தமிழ் - முஸ்லிம் மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டிய காலம் தற்போது ஏற்பட்டுள்ளது.

இன்று மூன்று முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளை ஆட்சியிலிருந்த வெளியேற்ற முடிந்த பிக்குவால் நாளை, சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பது இன்றைய ஆட்சி முறையாக உள்ளது.

இன்றைய கசப்பான சம்பவங்கள் சிறுபான்மை மக்களை பெரிதும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் சில தரப்பினர் (தமிழ், முஸ்லிம்) இனவாத ரீதியான பின்னூட்டங்களை பகிர்ந்து வந்தாலும் ஒட்டுமொத்த சமூகமும் அப்படி இருக்கவில்லை.

உண்மையில் தற்போதைய நிலையில் முஸ்லிம் சமூகம் மிகவும் அச்சமான சூழ்நிலையிலேயே உள்ளனர். கோடிக்கணக்கான முதலீடுகளை போட்டு வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் முஸ்லிம் வர்த்தகர்கள் தமது உடமைகளுக்கு எப்போது ஆபத்து வரும் என்று அச்சத்தில் உள்ளனர்.

மார்க்க அடையாளங்களுடன் வெளியில் செல்லும் பெண்கள் எவ்வாறான இம்சைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவ, மாணவிகள் புறக்கணிக்கப்படுவோமா என்ற அச்சத்தில் உள்ளனர்.

சிறு வியாபாரங்களான சாப்பாட்டு ஹோட்டல், பலசரக்கு கடைகளை நடத்தி வரும் முஸ்லிம் வர்த்தர்கள் பெரும்பான்மையினத்தவர்களின் புறக்கணிப்பால் பெரும் நஷ்டங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். பலர் தமது கடைகளை மூடிவிட்டு வீடுகளில் இருக்கின்றனர்.

இப்படியான பல நெருக்கடிகளுக்கு முஸ்லிம் சமூகம் தற்போது முகங்கொடுத்துள்ளது. கடந்த காலங்களில் இதேபோன்ற துன்புறுத்தல்களை புறக்கணிப்புகளை தமிழ்ச் சமூகம் எதிர்நோக்கியிருந்தது.

சமூக வலைத்தளங்களில் சில அரசியல்வாதிகளின் தேவைக்காக இனவாத கருத்துக்களை பகிருவோர் சிறுபான்மை சமூகங்கள் எதிர்நோக்கும் சமூக பிரச்சினை குறித்து சிந்திப்பதில்லை. ஆபாசம் கொட்டும் துர்வார்த்தைகளால் இனங்களை அசிங்கப்படுத்துவதே இவர்களின் வேலையாகும்.

இன்று ஒரு பௌத்த துறவியால் இருவரின் பதவியை பறிக்க முடிந்துள்ளது. நாளை பல துறவிகள் இணைந்தால் பல மாற்றங்ளை ஏற்படுத்தலாம்.

இன்றைய கசப்பான சம்பவம் எந்வொரு சிறுபான்மை சமூகத்தவர்களும் கொண்டாடக் கூடிய ஒன்று அல்ல. இது சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான அழிவின் ஆரம்பமே.

தமிழ், முஸ்லிம் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டிய காலம் இதுவாகும்.

13 comments:

  1. திருகோணமலையில் தமிழர்கள் பட்டாசு கொழுத்தி கொண்டாடுவதையும்,சில விபச்சார தமிழ் ஊடகங்களின் மகிழ்ச்சி ஆராவார செய்திகளை பார்க்கும் போது விளங்குகிறது தமிழ் இனத்தின் இப்போதய சந்தோசத்தை.இதில் வேடிக்கை என்னவெனில் Muslim களிடம் அதிகமாக தொழில் செய்து வயிற்று பொலப்பு நடத்தும் தோட்ட காட்டானும் இணைந்து கொண்டாடுவது.ஆனால் உருதியாகிவிட்டது,மஹிந்த வின் வெற்றியும்,பிக்குமாரின் பலமும் இவை இரண்டும் வெகு விரைவில் உங்கள் மீது தன் கத்தியை திருப்பும் அபோது பார்க்கலாம்.

    ReplyDelete
  2. நேற்று தமிழர்களுக்கு இன்று முஸ்லிம்களுக்கு நாளை தமிழ் முஸ்லிம் இரு சட்டத்துக்கும் மொத்தமாக இந்நிலை ஏற்படுவதை தமிழ் தலைவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
    மலேசியாவிலிருந்து....

    ReplyDelete
  3. Dear Rzad. What you say is Racism against all Tamil brothers. You can't blame every one just because of few in the biased Tamil media... You are trying to do exactly same thing what Sinhalese Fascists are trying on Muslim...

    ReplyDelete
  4. ஒருசில தமிழர் ஒருசில மலையக தமிழர் ஒருசில முஸ்லிம்கள் செய்யும் செயல்களை முன்னிலைபடுத்தி வெறுப்பு அரசியல் செய்தௌ பிழவுபட்டதுபோதும். ஒரு சில என்றால் ஒருசிலரால் நூற்றுக்கணக்கான தமிழர் மலையக தமிழர் கொல்லபட்டதும் வருமல்லா நண்பா. தோட்டகாட்டான் என்ற சொல்லை நீக்கிவிடுங்கள். இன்று இலங்கை தமிழரும் மலையக தமிழர்களும் ஒரு இனமாக வேகமாக இணைந்து வருகிறார்கள்.

    ReplyDelete
  5. சிறுபான்மை கள் தங்களுக்கு இடையிலான வேற்றுமைகளை மறந்து அரசியல் ரீதியாக ஒற்றுமை படவேண்டியதன் அவசியம் அவசரமாக உணரப்பட வேண்டும் என்பதையே கண்டி நிகழ்வுகள் கட்டியம் கூறுகின்றன

    ReplyDelete
  6. நாளை இந்த இனவாதம் தமிழனை நோக்கி திரும்பும் நாள் வெகு தொலைவில் இல்லை. அன்று அனாதைகளாக செத்து மடிவீர்கள்

    ReplyDelete
  7. தமிழ் மக்கள் மீது பலி சுமத்த வேண்டாம். பால்சோறு கொடுத்து தமிழ் மக்கள் அழிவை கொண்டாடி ஜால்ரா அடித்தை நாம் மறக்க முடியாது.

    சும்மா இருந்த தேன் கூட்டுக்கு கல் வீசி தாக்குதல் நடத்தியது இஸ்லாம் அடிப்படை வாதத்தில் ஊரிய தீவிரவாத மடையர்கள். உங்கள் இந்த நிலைக்கு காரணம் அடிப்படை வாதத்தை ஆதரித்த சில முஸ்லிம்களும் உங்கள் சில அமைச்சர்களும் தான்.

    இதற்கு தமிழ் மக்கள் மீதுபலி சுமத்த வேண்டாம்.

    ReplyDelete
  8. சிந்திக்க தெரிந்த தமிழ் மக்கள் சிறுபான்மை ஒற்றுமையாய் இருக்க வேண்டிய யதார்த்தத்தை புரிந்துகொள்வார்கள்.

    ReplyDelete
  9. ஒவ்வொரு மனிதனும் பிறிதொரு மனிதனை மனிதனாய்ப் பார்க்காது இன மதக் கண்ணோட்டத்தோடு நோக்கினால் ‘அப்பத்துக்கு சண்டையிட்டு குரங்கிடம் நீதிகேட்ட பூனைகளின்’ கதையாய் மாறிவிடும் தமிழ்பேசும் இரு சமூகங்களினதும் நிலைமை!,,,,,
    அழகிய செழிப்பான நாடு...
    நல்ல மக்கள் வாழும் சிறந்ததொர் நாடு....
    எவ் இனத்தை /மதத்தைச் சார்ந்தவன் ஆயினும் , அவன் நல்லவனோ கெட்டவனோ அம் மனிதனை இரத்தமும், சதையும், இதயமும் உள்ள ஒரு மனிதனாய்ப் பார்க்கும் நற்பண்பு மூவின மக்களிடமும் வளராதவரை நமது இளைய சமுதாயத்துக்கு வளர்ச்சியடைந்த ஒரு இலங்கையை ஒருக்காலும் காட்ட முடியாது!
    சிந்திப்போம்!!

    ReplyDelete
  10. Eniyavadhu tamilarkal nampungkal

    ReplyDelete
  11. இன்றைய கசப்பான சம்பவம் எந்வொரு சிறுபான்மை சமூகத்தவர்களும் கொண்டாடக் கூடிய ஒன்று அல்ல. இது சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான அழிவின் ஆரம்பமே.

    தமிழ், முஸ்லிம் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டிய காலம் இதுவாகும்.தமிழனையே அழித்துவிட்டோம் முஸ்லீம் எம்மாத்திரம் ' பரவலாக பேசப்படுகிறது '

    ReplyDelete
  12. இங்கு தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றி பேசுபவர்கள் ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும். தென்னாசியாவிலிருக்கும் ஒரு யூத சித்தாந்தம் கொண்ட ஒரு இனத்தின் முகத்தை அவர்கள் விடுதலை என்கிற பெயரில் தீவிரவாதம் செய்யும்போதே எமக்கு ஒன்றை உணர்த்தியது. இலங்கையில் சிங்களவர்களை நம்பினாலும் இந்த தமிழ் பயங்கரவாதிகளை மட்டும் நம்ப முடியாது.

    ReplyDelete
  13. Rizard யின் மலை நாட்டு தமிழர்கள் பற்றிய வார்த்தைப் பிரயோகம் தவறானது.இவர் அந்த பாடசாலை அபாயா விவகாரத்தால் ஆத்திரப்பட்டுள்ளார் (எம்மைப்போன்றே)).மனம் புண்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் .இவ்வாறான தவறுகளை தவிர்த்துக் கொள்ளுங்கள் நண்பரே.

    ReplyDelete

Powered by Blogger.