Header Ads



முஸ்லிம் பெண்களின் ஆடைகளை, குறிவைத்த சுற்றுநிருபம் - சீறுகிறது மனித உரிமைகள் ஆணைக்குழு


அரசஊழியர்களின் உடைகள் தொடர்பாக பொதுநிர்வாக அமைச்சு வெளியிட்ட சுற்றுநிருபம் இலங்கையின் அரசமைப்பினை மீறும்வகையில் அமைந்துள்ளது என தெரிவித்துள்ள இலங்கையின் தேசிய மனித உரிமை ஆணைக்குழு இந்த அறிவிப்பு அர்த்தபூர்வமற்றது தன்னிச்சையானது எனவும் குறிப்பிட்டுள்ளது.

பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரிற்கு எழுதியுள்ள கடிதத்தில் இலங்கையின் தேசிய மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் தீபிக உடகம இதனை தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட சுற்றுநிருபம் தடை செய்யப்பட்ட ஆடைகள் எவ்வாறு தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தானவையாக உள்ளன என்பதை தெளிவுபடுத்தவில்லை என அவர் குறி;ப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட சுற்றுநிருபம் தெளிவற்ற பல உட்பிரிவுகளை கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுநிர்வாக அமைச்சின் சுற்றுநிருபம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக பெண் ஊழியர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என தீபிக உடகம தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட சுற்றுநிருபத்திற்கான தேவை என்னவென கேள்வி எழுப்பியுள்ள தீபிகஉடகம குறிப்பிட்ட அறிவிப்பு இலங்கை அரசமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களிற்கு முரணான உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. (சபாஷ்) Weldon Madam Mrs. Udagama.

    ReplyDelete
  2. Legal action should be taken against That racist, communal secretary...

    ReplyDelete
  3. Since the violation against legislation, strong legal actions have to be taken against that less quality secretary???

    ReplyDelete

Powered by Blogger.