Header Ads



முஸ்லிம்கள் வழங்கிய ஒத்துழைப்பே தீவிரவாதத்தை குறுகிய காலத்துக்குள் முடிவுக்கு கொண்டுவர காரணம்

முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பே ஏப்ரல் 21 தீவிரவாத செயற்பாட்டை குருகிய காலத்துக்குள் முடிவுக்கு கொண்டு வருவதற்கு காரணமாக அமைந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்துள்ளார்.

ரண்மாவத் திட்டத்தின் கீழ் ஒரு கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படவுள்ள தோப்பூர் மத்திய வீதிக்கான வேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கும், சிறிலங்கா சுதந்திர கட்சிக்குமென்றே மாறிமாறி வாக்களித்து வந்திருக்கின்றோம். தொடர்ந்தும் வாக்குக் கேட்டு வருகின்றோம் இதனால் நாம் கண்ட பலன் எதுவுவே இல்லை.

எமது வாக்குகளால் தெரிவான ஜனாதிபதி முஸ்லிம்களுக்கு எதிரான மதகுரு ஒருவரை சிறைக்குச் சென்று 45 நிமிடங்கள் உரையாடிவிட்டு பொது மன்னிப்பின் கீழ் அண்மையில் விடுதலை செய்திருந்தார்.

அதன் பின்னர் கண்டியில் என்ன நடந்ததென்று தெரியும்.அத்தோடு எமது முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்யாது போயிருந்தால் கண்டியில் இன்னும் பிரச்சினை ஏற்பட்டிருக்கும்.

இந்த நாட்டு முஸ்லிம்கள் தீவிரவாதத்திற்கு என்றும் எதிரானவர்கள்.கடந்த கால வரலாற்றை பார்க்கும் போது இந்த நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக நாம் ஆயுதமேந்தியோ, தனி நாட்டு கோரிக்கை முன்வைத்தோ போராடவுமில்லை போராடப் போவதுமில்லை.

எமது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழு செய்த செயற்பாட்டுக்கு முழு முஸ்லிம் சமூகத்தையும் குற்றம் சுமத்துவதென்பது கவலையளிக்கின்றது.

தீவிரவாத செயற்பாடுகளை முன்னெடுப்பவர்கள் முஸ்லிமாகவோ, தமிழராகவோ இருந்தாலும் சரி நாம் அவ் செயற்பாட்டை என்றும் ஆதரவளிக்கப்போவாதில்லை.

எமது நாடு பிளவுப்படாமல் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ்வதையே விரும்புகின்றோம் என்றார்.

ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற தீவிரவாத செயற்பாட்டுக்கு, முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பே அத் தீவிரவாத செயற்பாட்டை குருகிய காலத்துக்குள் முடிவுக்கு கொண்டு வருவதற்கு காரணமாக அமைந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர், ஜே.எம்.லாஹீர், மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ், முன்னாள் கிண்ணியா நகரபிதா சட்டத்தரணி ஹில்மி மஹ்ரூப் ,மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர்களான ஏ.எஸ்.எம்.தாணீஸ்,பீ.டி.ஆப்தீன்,பீ.டி.பைசர், எம்.வஹ்ஜீத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.