Header Ads



கைது செய்யப்படுவாரா ஹிஸ்புல்லாஹ்...?

முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் விரைவில் கைது செய்யப்படலாம் என சிரேஷ்ட சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் காத்தான்குடி பள்ளிவாசலில் வைத்து ஹிஸ்புல்லாஹ் வெளியிட்ட இனவாத கருத்துக்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டுத் தலைவர் சட்டத்தரணி மனோஜ் கமகே,

முஸ்லிம் மக்கள் இலங்கையில் சிறுபான்மையினரே உள்ளனர். எனினும் சர்வதேச ரீதியாக அவர்களே பெரும்பான்மையினர் என ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டார். அத்துடன் தலதா மாளிகைக்கு முன்னால் உண்ணாவிரதம் இருந்த ரத்ன தேரை பார்க்க வந்த தேரர்கள் தொடர்பிலும் சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

இவ்வாறான இனவாத கருத்துக்கள் மூலம் சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் பிரிவினையை ஏற்படுத்த ஹிஸ்புல்லா முயற்சித்துள்ளார்.

2007 ஆம் இலக்கத்தின் 56 பிரிவிலுள்ள சிவில் மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சர்வதேச கூட்டு சட்டத்திற்கமைய, இனங்களுக்கு இடையில் கோபத்தை ஏற்படுத்தும் கருத்தினையே அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த கருத்து முஸ்லிம் மக்கள் மனதில் வன்முறையை தூண்டிவிடும் வகையில் காணப்பட்டது. ஏதோ ஒரு வகையில் வன்முறையை ஏற்படுத்தும் வகையிலேயே அவர் கருத்து வெளியிட்டார்.

“நாங்கள் இவற்றினை கண்டுக்கொள்ள தேவையில்லை. நாங்கள் தான் உலகில் உள்ள பெரிய இனம். எங்களால் இதற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள முடியும். எழுந்து வாங்கள்..” போன்ற ஹிஸ்புல்லாஹ்வின் கருத்துக்கள் மக்களை தூண்டிவிடும் வகையிலேயே காணப்பட்டது.

மிகவும் தெளிவாக இன மதங்களுக்கு இடையில் கோபம், வெறுப்புக்களை ஏற்படுத்தி, வன்முறையை தூண்டிவிடும் நடவடிக்கையினை ஹிஸ்புல்லாஹ் மேற்கொண்டுள்ளார்.

எனவே உறுதியாக இந்த சட்டத்தின் கீழ் ஹிஸ்புல்லாஹ்வை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

8 comments:

  1. so when Ganasara and other monk talk racism where is your law against them?

    ReplyDelete
  2. they mention that "if the ministers does not resign before 12pm they will cause chaos in the country", why not the government take action against the statement which was given

    ReplyDelete
  3. என்னடா இது வடிவேல் சொன்ன மாதிரி சின்னப்புள்ளத் தனமாக இருக்கு யாருக்கு பூ சுத்தினம் அங்க முஸ்லிம் மக்கள் தெளிவாகிட்டினம்

    இனி இவருன்ட அரசியல் மேடைப் பேச்சு சரிவராது அதான் உசுப்பெத்துரார்.

    எல்லாம் தெரிந்து போட்டு மக்கள் 21 முஸ்லிம் பாராளுமன்றத உறுப்பினர்கள் பக்கம் அலை அலையாக திரும்பினம் என்று அதுதான் இனவாத அரசியலை ஆரம்பித்துள்ளார் அடுத்த விடயம் இன்று காத்தான்குடி முஸ்லிம் மக்களும் நன்கு விளங்கிட்டார்கள்
    அத்துடன் இனி முஸ்லிம் கூட்டுக்கட்சிக்குத்தான் ஆதரவு அளிப்பதென்றும் முடிவு எடுத்துள்ளனர் இவரும் கூட்டுக்கட்சியில் இனைந்தால் (மாப்பு இல்லையே ஆப்பு)

    ReplyDelete
  4. தவளை தன் வாயால் கெடும் என்பது இதுதானோ?

    ReplyDelete
  5. Where is the rule of law for this lawyers? When people from majority community openly incite violence against Muslims is there another law for them?

    ReplyDelete
  6. நல்லது.ஆனால் இந்த சங்கம் தேரர்களின் பீரங்கி பேச்சை கேட்பதில்லை போல் தெரிகிறதே.அதையும்தான் கேளுங்களேன் மக்காள்.

    ReplyDelete
  7. அப்ப இந்த சட்டம் விமல், கம்மன்பில,எஸ்.பி,சம்பிக்க,ரத்ன,மற்றும் ஞானணாசார போன்றவர்களுக்கெதிராகப் போடப்பட்டு உடனெடியாக கைது செய்யப்படனும்.

    ReplyDelete

Powered by Blogger.