Header Ads



சர்வதேசத்தின் தேவைகளுக்கு ஏற்பவே, இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன

புலிகளைப் போன்று தற்போது நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொண்ட குழுவினரைக் கருதிவிடக்கூடாது. சர்வதேசத்தின் தேவைகளுக்கு ஏற்பவே இவர்கள் செயற்பட்டார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது என அமைச்சர் ராஜித சேனாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய பிரத்தியே செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான முன்னறிவித்தல்கள் கிடைத்திருந்த போதிலும் ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினர் இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறானதொருது சந்தர்ப்பத்தில் பாதுகாப்புச் சபை தரப்பினர் அனைவரும் பங்குபற்றியிருப்பார்களானால் தீர்க்கமான கலந்துரையாடல்களை முன்னெடுத்து சிறந்த தீர்வை வழங்கியிருக்க முடியும். ஆனால் அதற்காக வாய்ப்பு எதுவும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.

ஜனாதிபதி தரப்பின் குறைபாடுகளின் காரணமாக இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது. அதே சந்தர்ப்பத்தில் தாக்குதல்கள் இடம்பெற்று 24 மணிநேரத்தில் பாதுகாப்பு துறையினரால் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடியதாகவும் இருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளைப் போன்று தற்போது நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொண்ட குழுவினரைக் கருதிவிடக்கூடாது. சர்வதேசத்தின் தேவைகளுக்கு ஏற்பவே இவர்கள் செயற்பட்டார்கள்.

தற்போதைய அளவில் பாதுகாப்பு பிரச்சினைகள் எதுவும் இல்லை. பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் பலப்படுத்தபட்டே உள்ளன. ஆயினும் முஸ்லிம் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு சிங்கள மக்களை விட முஸ்லிம் மக்களே கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவங்களின் பின்னரும் இதுவரையில் பாதுகாப்பு தொடர்பான பொறுப்புக்கள் அரசாங்கத்திற்கு ஒப்படைக்காவிட்டாலும் தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டங்களில் பிரதமரும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சரும் பங்குபற்றுகின்றார்கள். சில சந்தர்ப்பங்களில் நாங்களும் பங்குப்பற்றுவோம்.

தற்போது கூடும் பாதுகாப்பு சபைக் கூட்டங்கள் முழமையானதாக இருந்தாலும் இன்னும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட எங்களின் குழுவினருக்கும் இடையில் முரண்பாடு நிலைமையே காணப்படுகின்றது.

ஆயினும் ஜனாதிபதி எதிர்காலத்தில் சட்ட ஒழுங்கு அமைச்சை அரசாங்கத்திடம் ஒப்படைத்து பாதுகாப்பு விடயம் தொடர்பில் சகல பிரிவினருடனும் ஒற்றுமையாக செயற்படுவார் என்ற எதிர்ப்பார்ப்பு எங்களுக்கு உள்ளது.

தற்போதைய நிலைமைகளில் சகலருடனும் இணைந்து பணியாற்றும் வகையில் படிப்படியாக ஜனாதிபதியின் செயற்பாடுகள் மாறிவருகின்றன. ஆகையால் எதிர்காலத்தில் பாதுகாப்பு தொடர்பில் எந்த பிரச்சினையும் ஏற்படாது என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.