Header Ads



ஞானசார தேரரின் விடுதலையில், பாரிய சந்தேககம் உள்ளது - பேராசிரியர் திஸ்ஸ விதாரண

ஞானசார தேரரின் விடுதலை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துவதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“கடந்த மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லிம் விரோத பிரச்சினை தலைதூக்க ஆரம்பித்தது.

இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற சில வாரங்களில் குருணாகல் மற்றும் மினுவங்கொடை பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள் வீடுகள் மற்றும் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இனவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் பாரிய சேதம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இனவாதிகள் நாடுபூராகவும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தபோதும்

எனினும், பாதுகாப்பு தரப்பினர் அதனை தடுத்து நிறுத்தினர். இவ்வாறான நிலையிலேயே, ஞானசார தேரரை பொது மன்னப்பின் அடிப்படையில் விடுதலைசெய்ய ஜனாதிபதி தீர்மானித்தார்.

ஆகவே முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் பிரச்சினை ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில், கடந்த காலங்களில் இனமோதல்களுக்கு காரணமாக இருந்த ஞானசார தேரரை ஜனாதிபதி விடுவிக்க எடுத்த தீர்மானம் குறித்து சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஞானசார தேரர் சிறையில் இருந்து வந்து சில தினங்களிலே மீண்டும் சட்டத்தை கையில் எடுக்க ஆரம்பித்திருக்கின்றார். அரசாங்கத்திற்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆளுநர்களான அஸாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால் கடும்போராட்டம் இடம்பெறும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், அரசாங்கமும் அவர் சட்டத்தை கையில் எடுக்கும்வரையில் பார்த்துக்கொண்டிருக்கின்றதா என்று கேட்க விரும்புகின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. My3 மாமாட பட்ட கேம்

    ReplyDelete
  2. Sri Lanka is not a democratic country, the recent incidents those created by some Bhudish against Muslims community clearly indicate that Sri Lanka is being ruled by some Bhudish monks and Sinhalese culprits. why the government did not take action against this kind of atrocities of these monks. why so called president Mr.Maithiri has released the monk in this tensed situation. Purposely the President did release him to achieve his political benefits.

    ReplyDelete
  3. Sri Lanka is not a democratic country, the recent incidents those created by some Bhudish against Muslims community clearly indicate that Sri Lanka is being ruled by some Bhudish monks and Sinhalese culprits. why the government did not take action against this kind of atrocities of these monks. why so called president Mr.Maithiri has released the monk in this tensed situation. Purposely the President did release him to achieve his political benefits.

    ReplyDelete
  4. Good question you the moderate people in the majority have to come out and shout to strength democracy in our country. first of all you have to carry out propaganda towards people to not vote for racist and communal politicians who are working for unrest among the Sri lankans for their political agenda, otherwise we never see our nation as a prosperous country, it will move backward ever...?

    ReplyDelete

Powered by Blogger.