June 03, 2019

பள்ளிவாசலின் முகப்பை உடைத்த, மடாட்­டு­கமயின் பரிதாப நிலை

கெக்­கி­ராவை மடாட்­டு­க­மயில் இயங்கி வந்த சிறி­யதோர் பள்­ளி­வாசல் கடந்த புதன்­கி­ழமை இடித்துத் தரை­மட்­ட­மாக்­கப்­பட்­ட­தாக சிங்­கள ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டி­ருந்­தன. தமிழ்ப் பத்­தி­ரி­கை­களும் இவ்­வாறே செய்­தியைப் பிர­சு­ரித்­தி­ருந்­தன.

தௌஹீத் பள்­ளி­வாசல் இன நல்­லி­ணக்­கத்­துக்குப் பாத­க­மாக இருக்­கி­றது. நாட்டின் தற்­போ­தைய சூழ்­நி­லையில் மடாட்­டு­க­மைக்கு மேல­தி­க­மாக ஒரு பள்­ளி­வாசல் தேவை­யில்லை என்று ஊர் மக்­களே பள்­ளி­வா­சலை உடைத்து தரை­மட்­ட­மாக்­கி­ய­தாக செய்­திகள் வெளி­யா­கின. உண்­மையில் அப்­பள்­ளி­வாசல் முழு­மை­யாக தரை மட்­ட­மாக்­கப்­ப­ட­வில்லை. அதன் குபா வடி­வி­லான  முகப்பு மாத்­தி­ரமே அகற்­றப்­பட்­டது.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பல்­வேறு குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­பட்டு முஸ்­லிம்கள் சந்­தேகக் கண்­கொண்டு நோக்­கப்­பட்­டு­வரும் இந்த சூழலில் முஸ்லிம் சமூ­கத்­துக்குள் கொள்கை ரீதி­யான பிள­வு­களை வலுப்­ப­டுத்தும் முயற்­சி­யையே தற்­போது ஊட­கங்கள் அரங்­கேற்றி வரு­கின்­ற­மையை இத­னூ­டாக அறி­ய­மு­டி­கி­றது.

பள்­ளி­வா­சல்கள் அல்­லாஹ்வின் இல்­லங்­க­ளா­கவே கௌர­வப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. புனிதம் பேணப்­ப­டு­கின்­றன. முஸ்­லிம்கள், அவர்கள் எந்தக் கொள்­கை­களைப் பின்­பற்­று­ப­வர்­க­ளாக இருந்­தாலும் பள்­ளி­வா­சல்­களை தங்கள் உயி­ரிலும் மேலா­கவே கரு­து­கி­றார்கள். இவ்­வா­றான நிலையில் ஏன் அந்தப் பள்­ளி­வாசல் உடைக்­கப்­பட்­டது என நாம் ஆராய்ந்தோம். மடாட்­டு­கம பெரிய ஜும்ஆ பள்­ளி­வாசல் தலை­வரை தொடர்பு கொண்டோம். அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

ஏப்ரல் மாதம் இடம்­பெற்ற தற்­கொலைக் குண்டுத்  தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து மடாட்­டு­கம முஸ்­லிம்கள் வாழ்­வா­தா­ரங்­களை இழந்­துள்­ளார்கள். பொலிஸ் அதி­ர­டிப்­ப­டை­யினர் அடிக்­கடி இங்கு வரு­கி­றார்கள். தௌஹீத் ஆத­ர­வா­ளர்கள் இருக்­கி­றார்­களா? என்று விசா­ரிக்­கி­றார்கள். விசா­ர­ணை­க­ளுக்­காக அழைத்துச் செல்­கி­றார்கள்.

இங்­குள்ள தௌஹீத் பள்­ளி­வாசல், பொலிஸார் எங்கள் மீது சந்­தே­கப்­ப­டு­வ­தற்குக் கார­ண­மாக இருந்­தது. இன்­றைய நாட்டின் நிலை­மை­யினைக் கருத்­திற்­கொண்டு மடாட்­டு­கமயில் மேல­தி­க­மாக ஒரு பள்­ளி­வாசல் தேவை­யில்லை எனத் தீர்­மா­னித்தோம். அதன் பின்பே பள்­ளி­வா­சலின் முகப்­பினை உடைத்து அப்­பு­றப்­ப­டுத்­தினோம் என மடாட்­டு­கம ஜும்ஆ பள்­ளி­வா­சலின் தலைவர் எம்.எச்.எம். அக்பர் கான் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.

மடாட்­டு­கம கிராமம்

கெக்­கி­ராவை பொலிஸ் பிரிவில் அமைந்­துள்ள மடாட்­டு­க­மயில் முஸ்­லிம்கள் சிறு­பான்­மை­யி­ன­ராவே வாழ்­கி­றார்கள். மடாட்­டு­கம ஜும்ஆ பள்­ளி­வா­சலின் தலைவர் வழங்­கிய தக­வல்­க­ளின்­படி 168 முஸ்லிம் குடும்­பங்கள் வாழ்­கின்ற நிலையில் மடாட்­டு­க­மயைச் சூழ­வுள்ள பகு­தி­களில் 1000 க்கும் மேற்­பட்ட பெரும்­பான்மைக் குடும்­பங்கள் வாழ்­கின்­றன. இங்­குள்ள முஸ்­லிம்கள் கூலி வேலைகள் செய்தே தங்­க­ளது வாழ்க்­கையை நடத்­து­கின்­றனர். முச்­சக்­கர வண்டி செலுத்­து­ப­வர்­க­ளா­கவும் இருக்­கி­றார்கள். மடாட்­டு­கம நகரில் பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்­க­ளதும் முஸ்­லிம்­க­ளதும் கடை­களின் எண்­ணிக்­கையில் வேறு­பாடு காணப்­ப­டா­விட்­டாலும் ஏப்ரல் குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து பெரும்­பான்­மை­யின மக்கள் முஸ்லிம் கடை­களைப் புறக்­க­ணித்­துள்­ள­தாக முஸ்லிம் வர்த்­த­கர்கள் தெரி­விக்­கி­றார்கள்.

அத்­தோடு முஸ்­லிம்­க­ளுக்கு கூலி­வேலை வழங்­கு­வதைத் தவிர்த்­துள்­ள­தா­கவும் முஸ்­லிம்­களின் முச்­சக்­க­ர­வண்டி பய­ணங்­களைப் புறக்­க­ணித்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

தௌஹீத் பள்­ளி­வாசல்

மடாட்­டு­க­மயில் சமகி மாவத்­தை­யிலே இந்த தௌஹீத் பள்­ளி­வாசல் இயங்கி வந்­துள்­ளது. கிரா­மத்தைச் சேர்ந்த பிள்­ளை­க­ளுக்கு சிறுவர் வாசி­க­சா­லை­யொன்­றினை நிறு­வு­வ­தற்­காக காணி­யொன்­றினை ஏ.சி. பது­ரியா உம்மா என்ற பெண் வழங்­கினார். இக்­கா­ணியில் நூலகம் என்ற அமைப்பில் வெளி­நாட்டு அரச சார்­பற்ற நிறு­வங்­களின் உத­வி­யுடன் கட்­டடம் ஒன்று நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது. இக்­கட்­டடம் நிர்­மா­ணிக்­கப்­பட்­டதன் பின்பு அக்­கி­ராமப் பிள்­ளைகள் தொடர்ந்தும் வாசி­க­சா­லை­யாக அதனைப் பயன்­ப­டுத்­தாமை கார­ண­மாக கிரா­மத்தைச் சேர்­நத சிலர் தொழு­வ­தற்கு அக் கட்­ட­டத்தைப் பயன்­ப­டுத்­தி­யுள்­ளனர். நாள­டைவில் அது தௌஹீத் பள்­ளி­வா­ச­லாக மாற்­ற­ம­டைந்­துள்­ளது.

மடாட்­டு­கம ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வாகம் ஊர் ஜமா­அத்­தா­ருடன் கலந்­து­ரை­யாடி மேற்­கொள்­ளப்­பட்ட தீர்­மா­னத்தின் அடிப்­ப­டை­யி­லேயே தௌஹீத் ஜமாஅத் பள்­ளி­வா­சலின் முகப்பு அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக ஜும்ஆ பள்­ளி­வாசல் தலைவர் அக்பர் கான் தெரி­வித்­தார். பள்­ளி­வா­சல் முகப்பை உடைப்­பது தொடர்பில் கெக்­கி­ராவ பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிக்கு ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­தினால் கடி­த­மொன்றும் வழங்­கப்­பட்­டுள்­ளது.

மடாட்­டு­க­மயில் கடந்த 63 வரு­டங்­க­ளாக  ஜும்ஆ பள்­ளி­வாசல் ஒன்று இயங்கி வரு­கி­றது. மேல­தி­க­மான தௌஹீத் பள்­ளி­வா­சலில் ஒரு சிலரே தொழுகை மேற்­கொள்­கின்­றனர். அந்தப் பள்­ளி­வாசல் இது­வரை பதிவு செய்­யப்­ப­ட­வு­மில்லை. எமது பகு­தியைச் சேர்ந்த பெரும்­பான்மை இனத்­த­வர்கள் இந்தப் பள்­ளி­வாசல் தொடர்பில் பாது­காப்புப் பிரி­வி­ன­ருக்கு முறைப்­பா­டுகள் செய்­துள்­ளதால் இப்­ப­கு­தியில் இனங்­க­ளுக்கு இடையில் சக­வாழ்­வி­னையும் நல்­லி­ணக்­கத்­தையும் பலப்­ப­டுத்­து­வ­தற்கு பள்­ளி­வா­சலின் முகப்பை அப்­பு­றப்­ப­டுத்­து­வதை விட எங்­க­ளுக்கு வேறு­வழி தெரி­ய­வில்லை எனவும் அக்பர் கான் தெரி­வித்தார்.

இதே­வேளை, எந்தப் பிரச்­சி­னைகள் இருந்­தாலும் அல்­லாஹ்வின் மாளி­கை­யான பள்­ளி­வா­சலை ஊர் மக்­களால் நினைத்­த­ப­டி­யெல்லாம் உடைக்­க­மு­டி­யாது என எதிர்ப்­புகள் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளன.

ஜனாஸா நிலை­யத்­திற்கு சீல்

மடாட்­டு­க­மயில் இயங்­கி­வந்த ஜனாஸா நிலைய கட்­ட­டத்தில் பாது­காப்புப் படை­யினர் சோதனை நடாத்­தி­ய­போது அங்கு சந்­தே­கத்­துக்­கி­ட­மான இர­சா­ய­னப்­பொருள் இருந்­த­தா­கக்­கூறி அக்­கட்­ட­டத்­துக்கு சீல் வைக்­கப்­பட்­டுள்­ளது.

அக்­கட்­ட­டத்தில் புதிய தரை விரிப்­பொன்று களஞ்­சி­யப்­ப­டுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­தது. அந்த தரை விரிப்பு சேதங்­க­ளுக்­குள்­ளா­காமல் இருப்­ப­தற்­காக இர­சா­ய­னப்­பொருள் 168 கிராம் அங்கு தரை விரிப்­புடன் வைக்­கப்­பட்­டி­ருந்­தது. இப்­பொருள் மீது சந்­தேகம் கொண்டே கட்­ட­டத்­துக்கு சீல் வைக்­கப்­பட்­டது.

இந்த சம்­ப­வத்தை ஊட­கங்கள் பெரி­து­ப­டுத்தி செய்தி வெளி­யிட்­ட­தாக ஜும்ஆ பள்­ளி­வாசல் தலைவர் தெரி­விக்­கிறார். ஹிரு தொலைக்­காட்சி 168 கிராம் இர­சா­ய­னப்­பொ­ருளை 168 கிலோ கைப்­பற்­றப்­பட்­ட­தாக திரி­பு­ப­டுத்­தியே செய்தி வெளி­யிட்­டது என்­கிறார் அவர்.

பள்­ளி­வாசல் முகப்பை உடைத்­த­மைக்கு எதிர்ப்பு வெளி­யிடும் எமது அர­சியல் தலை­மைகள் ஜனாஸா கட்­டடம் சீல் வைக்­கப்­பட்­டமை, ஹிரு தொலைக்­காட்சி தவ­றான செய்­தி­களைப் பரப்­பி­யமை தொடர்பில் எவ்­வித எதிர்ப்­பையும் வெளி­யி­ட­வில்லை என்­கிறார் அவர்.

தௌஹீத் பள்­ளி­வா­சலின் முகப்பு உடைத்து அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­டதன் பின்பு பள்­ளி­வா­ச­லாக இயங்­கிய அக்­கட்­ட­டத்தில் காணி உரி­மை­யா­ள­ரான ஏ.சி.பது­ரியா உம்­மாவின் குடும்பம் குடி­ய­மர்த்­தப்­பட்­டுள்­ளது. பது­ரியா உம்மா இது­வரை காலம் தனது மகளின் குடும்­பத்­துடன் வாழ்ந்து வந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

பள்­ளி­வா­சலை உடைக்­க­லாமா?

பள்­ளி­வா­சல்கள் அல்­லாஹ்வின் மாளிகை எந்தச் சோத­னைகள் வந்­தாலும் பள்­ளி­வா­சலை உடைத்து அப்­பு­றப்­ப­டுத்த முடி­யுமா? என்ற வினா தற்­போது பர­வ­லாக எழுப்­பப்­பட்டு வரு­கி­றது.

பள்ளிவாசலை பகுதியாகவோ, முழுமையாகவோ அப்புறப்படுத்துவதென்றால் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

ஆனால், மடாட்டுகம தௌஹீத் பள்ளிவாசல் திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்பள்ளிவாசல் பதிவு செய்யப்பட்டிராதுவிடினும் பள்ளிவாசலாக நீண்டகாலம் இயங்கி வந்துள்ளது.

முஸ்லிம்களாலே பள்ளிவாசல் ஒன்று உடைக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும் முஸ்லிம் சமூகம் இவ்வாறான செயற்பாட்டுக்கு தள்ளப்படுமளவுக்கு அவர்கள் அச்ச நிலையில் வாழ்கிறார்கள். தௌஹீத் என்றாலே ஐ.எஸ். அமைப்பு என்று பெரும்பான்மையினர் அச்சம் கொள்ளுமளவுக்கு நிலைமை பூதாகரமாகியுள்ளது.

ஏப்ரல் குண்டுத்தாக்குதலுக்குப் பின்பு மடாட்டுகம போன்ற எத்தனையோ கிராம முஸ்லிம்கள் பல்வேறு சவால்களுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தொடர்ந்தும் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் மாத்திரம் ஈடுபடாது களநிலைமைகளை ஆராய்ந்து தீர்வுகள் காணவேண்டும். இல்லையேல் மடாட்டுகம போன்ற நிகழ்வுகள் ஏனைய பகுதிகளிலும் இடம்பெறலாம். -Vidivelli

2 கருத்துரைகள்:

PIRIVINAIWAZAM, OTRUMAIYAI KEDUKKIRAZU.AAHAWE URMAKKAL ONRU KOODY EDUTHA MUDIVU, SHARIYANAZEI.
IZU ORUWARIN THANI MUDIWU ALLA, ENBAZAI KARTHIL KOLLAWENDUM.

ஹுப்புக்கூட்டம் லூசுத்தனமா பள்ளிய உடைச்சி சிங்களவன்ட நல்ல பெயர் எடுக்க தேவையற்ற பிரயத்தனம் செய்கிறது, ஏற்கனவே வெசக் கொடி கட்டி, கூடு ஏற்றி முஸ்லிம் சமூகத்தை கும்புடு போடும் லாயக்கில்லாத கூட்டமாக காட்டி பெரும் தலைகுகுனிவை ஏற்படுத்தினார்கள், இப்போது சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.

Post a comment