Header Ads



“அமைச்சு பதவிகளை ஏற்பதற்கு எந்தவொரு அவசரம் இல்லை" - ரிசாத்

தனக்கு எதிரான விசாரணைகள் நிறைவடையும் வரை மீண்டும் அமைச்சு பதவிகளை ஏற்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதின் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் ரிசாத் பதியூதின் மீண்டும் அமைச்சு பதவிகளை ஏற்பதற்கான வாய்ப்புகள் அதிகமான உள்ளதென கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறி வந்தனர்.

இந்த கருத்துக்கள் தொடர்பில் பதிலளிக்கும் வகையில் ரிசாத் பதியூதின் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“அமைச்சு பதவிகளை ஏற்பதற்கு எந்தவொரு அவசரம் இல்லை. விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எந்த நேரத்திலும் விசாரணைகளுக்கு ஆதரவு வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

எந்த நேரத்தில் அழைப்பு விடுத்தாலும் நாங்கள் செல்வோம். பயங்கரவாதிகளுடன் எங்களுக்கு தொடர்பு இல்லை. பயங்கரவாதிகளை ஒழிக்க வேண்டும் என எண்ணத்திலேயே நாங்கள் உள்ளோம்.

பொலிஸ் நிலையத்தில் எனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனக்கு எதிரான விசாரணைகளுக்கு முகம் கொடுத்த தயார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. ஓ ஒங்களுக்கு அவசரம் இல்லே பிகாஸ் நீங்க நல்லா காசி அடிச்சி வெச்சிக்கயல் , நாதாரி

    ReplyDelete
  2. இதுதான் தில்லு

    ReplyDelete
  3. THIS IS WHY "THE MUSLIM VOICE" IS PRAYING IT IS TIME UP THAT A NEW POLITICAL FORCE THAT WILL BE HONEST AND SINCERE THAT WILL PRODUCE 'CLEAN' AND DILIGENT MUSLIM POLITICIANS TO STAND UP AND DEFEND THE MUSLIM COMMUNITY POLITICALLY AND OTHERWISE, ESPECIALLY FROM AMONG THE YOUTH/YOUNGER GENERATION HAS TO EMERGE FROM WITHIN THE SRI LANKA MUSLIM COMMUNITY TO FACE ANY NEW ELECTIONS IN THE COMING FUTURE, INSHA ALLAH. Let Muslims that are WISE and REALLY CARE ABOUT THE MUSLIM UMMAH AND THEIR FUTURE GENERATIONS will NOT recognize all these Muslim parties AND POLITICIANS that cause more and more harm than good. Muslims who REALLY CARE ABOUT THE MUSLIM UMMAH AND THEIR FUTURE GENERATIONS should come forward INDEPENDENTLY, form INDEPENDENT GROUPS as the "NEW POLITICAL FORCE" and contest all elections in the future, Insha Allah. ANY OTHER SUGGESTIONS SHOULD ALSO BE DELIBERATED. IT IS TIME UP THE MUSLIM COMMUNITY GET PREPARED FOR THESE CHALLENGES, INSHA ALLAH.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete

Powered by Blogger.