Header Ads



இன்றைய இரவு அவசர, அமைச்சரவையில் நடந்தது என்ன..? கொந்தளித்த மைத்திரி

இன்று -07- இரவு விசேட அமைச்சரவை கூட்டமொன்றை கூட்டிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன , அண்மைய தாக்குதல் சம்பவங்களை விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு புலனாய்வுத்துறை மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் இனி வரமாட்டார்களென அறிவித்தார்

ஜனாதிபதி செயலகத்தில் இந்த அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.

தெரிவுக்குழுவை உடனடியாக ரத்துச் செய்யுமாறு கேட்டுக் கொண்ட ஜனாதிபதி , பாதுகாப்பு அதிகாரிகள் எவரையும் இனி தெரிவுக்குழுவில் கலந்து கொள்ள வேண்டாமென தாம் உத்தரவிட்டிருப்பதாகவும் இங்கு குறிப்பிட்டார்.

விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு சாட்சியங்கள் மூலம் பாதுகாப்பு தரப்பின் தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படும் அதேசமயம் தவறுகளை தன் மீது சுமத்த முயல்வதாகவும் சாடியுள்ளார்.

இன்றைய கூட்டத்தில் ஜனாதிபதியுடன் பல அமைச்சர்கள் கடும் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டதாக சொல்லப்பட்டது.

இதுபற்றி சபாநாயருக்கு அறிவித்தபோதும் அவர் சபைக்கு அறிவிக்கவில்லையென தெரிவித்த ஜனாதிபதி , சேவையில் இருந்து விலக்கப்பட்டவர்களே தெரிவுக்குழு முன் சாட்சியமளித்ததாகவும் பதவியில் இருக்கும் எவரும் இனி சாட்சியமளிக்கமாட்டார்களென்றும் குறிப்பிட்டாரென அறியமுடிந்தது.

No comments

Powered by Blogger.