Header Ads



வாகனங்களில் குர்ஆன் வசனங்கள், ஒட்டப்பட்டிருந்தாலும் நடவடிக்கை - முஸ்லிம்கள் வேதனை

மட்டக்களப்பில் முஸ்லிம்களது வாகனங்களில் உள்ள குர்ஆன் வசனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பொலிஸ் நடவடிக்கை குறித்து உடன் கவனம் செலுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா பிரதி பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

முஸ்லிம்களது வாகனங்களில் காணப்படும் அல்குர்ஆன் வசனங்களுக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்டத்தில் சில போக்குவரத்து பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் , அவற்றை அகற்றுவதற்கான கால அவகாசங்களையும் வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இது குறித்து தமது கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக மட்டக்களப்பு பிராந்தியத்திற்கான பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பெரேராவை தொடர்பு கொண்டு, தமது அதிருப்தியினை வெளியிட்டதுடன் , இவ்வாறான விடயம் தொடர்பில் அரசினால் எவ்வித சட்ட அறிவுறுத்தல்களும் இதுவரை முறையாக வழங்கப்படாத நிலையில் சிலர் நடைமுறைப்படுத்த முற்படுவது ஏற்புடையதல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இங்கு குறிப்பிடப்படும் வாசகங்கள் முஸ்லிம் மக்கள் உயர்வாகவும் , கண்ணியமாகவும் , புனிதமாகவும் கருதுகின்ற அல் குர்ஆனில் உள்ள வசனங்களே ஆகும்.

அவர்களது மார்க்க ரீதியான நம்பிக்கை சார்ந்த விடயங்களுக்கு அரசினால் எவ்வித தடைகளும் விதிக்கப்படாத நிலையில் , மட்டக்களப்பில் இவ்வாறான புதிய நடைமுறை ஒன்று அமுலுக்கு வருவது தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்துமாறும் பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் பெரும்பாலான மதங்கள் சார்ந்த போதனைகள், அம்மதங்கள் சார்ந்த முக்கிய கருத்துக்கள் பிற மொழிகளிலேயே காணப்படுகின்றன.

பாளி , மற்றும் சமஸ்கிருத மொழிகளில் உள்ளவற்றை உதாரணமாக குறிப்பிடலாம். அதே போன்றே இஸ்லாமிய மத சார்ந்த விடயங்கள் அரபு மொழியில் காணப்படுகின்றன.

அவ்வாறான ஒரு புனிதமான குர்ஆன் வாசகத்தையே சில முஸ்லிம்கள் தமது வாகனங்களில் பொறித்துள்ளனர். இவைகள் வன்முறைகளை தூண்டுவதாகவோ, நிந்தனை செய்வதாகவோ இல்லை, சாந்தி சமாதானம், அன்பு, இறையச்சம் என்பவற்றை போதிப்பதாகவே இவை உள்ளன.

இதனை அகற்ற கோருவதும், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முயல்வதும் ஒரு பொருத்தமற்ற விடயமாகவே நான் கருதுகிறேன் எனவும் அவர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் உடன் கவனம் செலுத்துவதாகவும், அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இது குறித்து அறிவுறுத்தல்களை வழங்குவதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

5 comments:

  1. குர்ஆனை தமிழ்/சிங்களம்/ஆங்கிலத்தில் எழதி வைக்கலாம் தானே.

    ReplyDelete
  2. Hmmmmm.....naanga srilankan muslims athula entha maatranaglum illa...bt engada islaamiya unarwuhala purinthu kollattheriyaatha jadankaloda naama face panrathu kastamethaan....ithuwellaam manithanin unarwuhal iwaihalin maatram naalai ottrumay illathu pohum walithaan ithu....ithukku ganniyamikka padicchawanga nallathoru abilaazaihalai sollunga....

    ReplyDelete
  3. கவலை வேண்டாம். அரபுத்தமிழ் உள்ளது போல் அரபை ஆங்கிலத்தில் எழுதி ஓட்டுவோம்.

    ReplyDelete
  4. இங்கு அரபு எழுத்துக்களுக்கு #தடை
    ஆனால் மத்திய கிழக்கிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களில் அரபு வசனங்களை எழுதி விற்பணை செய்ய முடியும்!

    ReplyDelete
  5. Mr. Ajan.. குராஆன் ஒன்றும் உங்கள் பாட்டனாரால் அருளப்பெற்றதொன்றல்ல நீங்கள் நினைத்த மொழியில் மாற்றுவதற்கு. அது அல்லஹ்வால் மனிதனை நேர்வழிப்படுத்துவதற்காக அருளப்பட்டது. இங்கு மொழியென்பது ஒருபிரச்சனை அல்ல உங்கள் உள்ளங்கள் இருலாலும் விசத்தலும் நிறம்பிக்கிடப்பதுதான் பிரச்சனை.

    ReplyDelete

Powered by Blogger.