Header Ads



ருஹுனு பல்கலைக்கழகத்தில், பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் மீட்பு

ருஹுனு பல்கலைக்கழகத்தில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் பெருந்தொகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் தெரிவித்துள்ளார்.

இரண்டு வாளிகள் நிறைந்த ஆணுறைகள் ருஹுனு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க அறையினுள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக உபவேந்தரை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ருஹுனு பல்கலைக்கழகத்தில் ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு 15 வருடங்களாக எந்தவொரு பீடாதீபதியும், பேராசிரியர்களும் சென்றதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது ஒரு தடை செய்யப்பட்ட பகுதியாக காணப்பட்டதாகவும், அதனுள் மிகவும் கொடூரமான முறையில் பகிடிவதை செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய மாணவர்களை பலவந்தமாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பகிடிவதை அறை போன்று பல்கலைக்கழகத்தினுள் அமைத்து மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் வழங்கியுள்ளதாகவும், இதற்கான அனைத்து தகவல்களையும் தான் கண்டுபிடித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த இடத்தில் இரும்பு பூட்டு போடப்பட்டுள்ளதாகவும் அதனை தான் உடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த பகிடிவதை, பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பதற்கும் நிறுத்துவதற்கும் தான் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டதாக உபவேந்தர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இந்த நாட்டின் மகாா நாயக்கர்களின் கண்களில் இவை தெரியவில்லயா?

    ReplyDelete

Powered by Blogger.