Header Ads



ரிஷாத், ஹிஸ்புல்லா, அஸாத் ஆகிய மூவரையும் நாம் தப்பிக்க விடமாட்டோம் - ரத்ன தேரர்

ரிஷாத், ஹிஸ்புல்லா, அஸாத் சாலி ஆகிய மூவரையும் உடனடியாக சிறையில் அடைக்குமாறு அரசாங்கத்திடம் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சுப் பதவி மற்றும் ஆளுநர் பதவிகளைத் துறந்து விட்டார்கள் என்பதற்காக ரிஷாத் பதியுதீன், ஹிஸ்புல்லா மற்றும் அஸாத் சாலி ஆகியோரை நாம் கவனிக்காமல் விடக்கூடாது. அவர்கள் மூவரையும் அரசு உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

இவர்கள் மூவரையும் பதவி நீக்கக் கோரி நான் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தேன். நான்காவது நாளில் இவர்கள் மூவரும் தாமாகவே பதவிகளைத் துறந்துள்ளனர். அதேவேளை, இவர்களுடன் இணைந்து அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவிகளைத் துறந்துள்ளனர்.

இவர்கள் மூவரையும் காப்பாற்றுவதே முஸ்லிம் அரசியல்வாதிகளின் நோக்கமாக இருக்கின்றது. அதற்காகவே அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவிகளைத் துறந்துள்ளனர்.ஆனால், ரிஷாத், ஹிஸ்புல்லா, அஸாத் சாலி ஆகிய மூவரையும் தப்பிக்க நாம் விடமாட்டோம்.

ஐ.எஸ். தற்கொலைக் குண்டுதாரிகளுடன் தொடர்பு வைத்திருந்த இவர்கள் மூவரையும் அரசு உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. A fool, why you didn't yet file the case in the police?

    ReplyDelete
  2. எங்களுடைய யோசனையும் இந்த மூவரையும் சிறையில் வைக்க வேண்டுமென்பதே. அவர்களுக்கு சிங்கள பௌத்த காடையர்களினால் "சொற்களை நன்றாகக் கவனிக்கவும்" சிங்கள பௌத்த காடையர்களினால் தற்போதைய சூழ்நிலையில் ஆபத்து ஏற்படவும் சாத்தியக்கூறு இருக்கலாம்.

    ReplyDelete
  3. இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்று எல்லோராலும் அறியப்பட்டு வந்தது. இதனால்தான் இறுதி யுத்தத்தின் போது இனவளிப்பு நடந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட போதும் சர்வதேச நாடுகள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இன்றை நிலையில் இலங்கையில் நடைபெறுகின்ற அரசியலமைப்பு மீரல்கள் மற்றும் மதவாதிகளின் சட்டத்தை மீறுகின்ற செயற்பாடு சர்வதேச அளவில் இலங்கைக்கு எதிராக வைக்கப்பட்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் எழுகின்ற குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்க முடியாது போகலாம். இந்த நிலை எமது நாட்டை குட்டிச்சுவராக்குகின்ற நிலைப்பாடே தவிர வேரில்லை.

    ReplyDelete

Powered by Blogger.