Header Ads



மைத்திரியையும், மங்களவையும் தாக்கிப்பேசிய நாமல்

அமைச்சர் மங்கள சமரவீர தனது இயலாமையை மூடி மறைப்பதற்காக அவ்வப்போது பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -07- செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நிதியமைச்சு வீழ்ச்சியடைந்துள்ளது. மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளதால், மக்களை திசை திருப்ப அமைச்சர் மங்கள சமரவீர பல்வேறு கருத்துக்களை வெளியிடுகிறார்.

இறுதி பிரதிபலனாக அமைச்சர் மங்கள, அமைச்சர் என்ற வகையில் தோல்வியடைந்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினை உலகத்திற்கு மத்தியில் இன்று கேலிக்குரியதாக மாத்திரமல்ல, நாட்டு மக்களின் பிரச்சினைகளை மூடி மறைக்கும் வேலைத்திட்டமாக மாறியுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பொறுப்பில் இருந்து அரசாங்கம் விலகிச் செல்ல முடியாது.

பொலிஸ் மா அதிபருக்கு வெளிநாட்டில் தூதுவர் பதவி தருகிறேன், பதவி விலகுங்கள் என்று கூறி தப்பிக்க முடியாது. நாடு படுமோசமான நிலைமைக்கு சென்றுள்ளது. பொருளாதாரம் தரை மட்டமாக்கப்பட்டுள்ளது.

நாங்கள் றக்பி விளையாடினோம், இரும்பு கம்பிகளை வைத்தோம் என்று கூறி எங்களை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு கொண்டு சென்றனர்.

தூதுவராக பதவி தருகிறேன். பதவி விலகுங்கள் என்று கூறுபவர்களை எங்கே கொண்டு செல்வது எனவும் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

1 comment:

  1. எனவே ஏன் இன்னும் உங்கள் கூட்டு எதிர்க்கட்சி Muslim அமைச்சர்கள் மீதும்,Muslim சமூகத்தின் மீதும் பழி போட்டு சிங்கள மக்களையும் தூண்டுவது.முன்னாள் பொலிஸ் மா அதிபரே சொல்லும் போது ஏன் இன்னும் உங்கள் பக்கம் இருக்கும் சில மக்கள் செல்வாக்கில்லாத இனவாத கட்சி தலைவர்கள் பொய்யும்,இனவாதமும் பரப்பும் வேலையை ஏன் உங்களால் தடுக்க முடியவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.